இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.
யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் அனுமதி.
பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது.
சமூக இடைவெளியுடன் சுதந்திர தின கொண்டாடப்படும்.
திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
மத நிகழ்வுகள், அரசியல் கூட்டம் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை தொடரும்.
பொது போக்குவரத்திற்கு தளர்வு அல்லது முடக்கம் குறித்த முடிவுகள் எடுக்க மாநிலங்களுக்கு அனுமதி.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப கட்டுப்பாடுகளுடன் நடவடிக்கை. குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் தனிநபர் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு "இ பாஸ்" அனுமதி தேவையில்லை - மத்திய உள்துறை அமைச்சகம்.
No comments:
Post a Comment