பருத்திக்கு கட்டுப்படியான விலையின்றி விவசாயிகளுக்கு பெரும் சோதனை யென்பதால் உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். - பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தல்.
பருத்திக்கு கட்டுப்படியான விலையின்றி விவசாயிகளுக்கு பெரும் சோதனையென்பதால் உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். டி.ஏ.பி,பொட்டாஷ்,யூரியா உள்ளிட்ட உரங்கள்,பூச்சி மருந்துகள் மானியத்தில் வழங்க வேண்டும் - ஜி.கே.மணி
கொரோனா பாதிப்பு நெருக்கடி காலத்திலும் மிகவும் கஷ்டப்பட்டு பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் மிகுந்த நெருக்கடிக்கும் சோதனைக்கும் ஆளாகியுள்ளனர்.தற்போது ஒழுங்குமுறை விற்பனை நிலையங்களில் பருத்தி ஒரு கிலோ ரூபாய் 30 வீதம் அதாவது ஒரு குவின்டால் ரூ 3,000 வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டு இதே காலத்தில் ஒரு கிலோ ரூ50, ரூ 55, ரூ 60 அதாவது ஒரு குவின்டால் ரூபாய் 5,000லிருந்து ரூ 6,000 வரை வழங்கப்பட்டது.இந்த ஆண்டு பாதி விலை என்றால் விவசாயிகளுக்கு பெருத்த நட்டமாகவும் பேரிடியாகவும் அமைந்துள்ளது.இதில் நிலத்திலிருந்து பருத்தி எடுக்க கூலி மட்டும் ஒரு கிலோவுக்கு ரூ 10, ரூ 12 வழங்கப்படுகிறது.அதற்கு மேல் பருத்தி விதை,நிலம் உழவு கூலி, களை எடுப்பு,உரம்,பூச்சி மருந்து உள்ளிட்ட செலவுகளை கணக்குப் பார்த்தால் பெரும் நட்டம் தான். எனவே அரசு கட்டுபடியான விலை நிர்ணயம் செய்து ஒழுங்குமுறை விற்பனை நிலையங்களில் பருத்தி எடுத்துக்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவலாகவும் டெல்டா மாவட்டங்களில் முழுவதுமாகவும் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. நெல்லுக்கு டி.ஏ.பி,பொட்டாஷ்,யூரியா உள்ளிட்ட உரங்களும் பூச்சி மருந்துகளும் தேவையாக உள்ளது.அதேபோல் ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்கிணங்க ஆடி மாதம் துவங்க உள்ள நிலையில் பரவலாக ஓரளவு மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் சாகுபடிக்கான வேலைகளை துவங்கியுள்ளனர்.வேர்க்கடலை, மிளகாய் போன்ற பயிர் சாகுபடி செய்யவிருக்கின்றனர்.
விவசாயிகள் தொடர்ந்து நட்டத்திற்கு ஆளாகி விவசாயத்தை விட்டு ஓடும் நிலையில் உள்ளதாலும் கொரோனா நெருக்கடி நிலையையும் விவசாயிகள் நலன் கருதியும் பொதுமக்களுக்கு தேவையான உணவு உற்பத்தியை பெருக்கவும் விவசாயிகளுக்கு டி.ஏ. பி, பொட்டாஷ், யூரியா உள்ளிட்ட உரங்களும் தேவையான பூச்சி மருந்துகளும் மானியத்தில் அரசு வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment