கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் அளிக்க முன்வர வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர் - Agnipuratchi

கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் அளிக்க முன்வர வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Share This

கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் அளிக்க முன்வர வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் அளிக்க முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 26 பேருக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதில் 24 பேர் குணமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஒரே சமயத்தில் அதிகபட்சமாக 7 பேர் வரை பிளாஸ்மா தானம் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தானம் பெறும் பிளாஸ்மாவை ஓராண்டு காலம் வரை பயன்படுத்த முடியும் எனக் கூறினார்.

தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் பிளாஸ்மா சிகிச்சை விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் நேற்று வரை 20 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விடுபட்ட 444 பேரின் மரண எண்ணிக்கை இன்றைய உயிரிழப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் கூறினார்.

கூலிங் டெஸ்ட் மூலம் நாள்தோறும் 70 ஆயிரம் பேரை பரிசோதனை செய்ய முடியும் எனக் குறிப்பிட்ட அமைச்சர் 1 கோடியே 50 லட்சம் பேருக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு வசதி உள்ளது என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages