நெய்வேலி NLC விபத்தில் 6 பேர் உயிரிழப்பு, 17 பேர் படுகாயம் - மிகுந்த வேதனையும் கவலையுமளிக்கிறது. - பாமக தலைவர் ஜி.கே.மணி
NLC விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்துகின்றோம். குடும்பத்தினர்க்கு அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி நிலக்கரி நிறுவன 2 ஆம் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பத்மநாபன்,அருண்,வெங்கடேசன்,நாகராஜன்,சிலம்பரசன் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையும் கவலையுமளிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்துகின்றோம். அவர்களை இழந்து மீளாத் துயரில் வேதனையில் வாடிக்கொண்டிருக்கும் குடும்பத்தினர்க்கு அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள் கிறோம். 17 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 17 பேரும் விரைவில் முழு குணமடைந்து வீடு திரும்ப விரும்புகின்றோம். உயிரிழந்தவர்கள் குடும்பதிற்கு உதவித் தொகையும், குடும்பத்தினர்க்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
NLC யில் இது போன்று அடிக்கடி விபத்து ஏற்படுவதும் தொழிலாளர்கள் பாதிப்பதும் தொடர் நிகழ்வாகவே உள்ளது. இது குறித்து முறையாக ஆய்வு நடத்த வேண்டும். துயரச் சம்பவம் நடந்த செய்தியறிந்து பா.ம.க நிர்வாகிகளுக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். பா.ம.க நிர்வாகிகள், பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் உடனே அங்கு சென்றிருந்தனர்.
No comments:
Post a Comment