அக்னிப்புரட்சி இன்றைய (06.08.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (06.08.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (06.08.2020) முக்கிய செய்திகள்.

* உலகளவில் கொரோனா தொற்று.
தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.89 கோடியாக அதிகரிப்பு.

தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.21  கோடியாக உயர்வு.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.10 லட்சமாக அதிகரிப்பு.

* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விபரம்: இன்று ஒரே நாளில் புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,79,144 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,091 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,06,096 அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 110 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 4,571 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 6,272 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 2,21,087 பேர் குணமடைந்துள்ளனர்.

* வங்கக் கடலில் மீண்டும் ஆகஸ்ட் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்!

* கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி.
28 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

உயிரிழந்த மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர்கள் குடும்பங்களுக்கும் நிதியுதவி.

* மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நீடிக்கும் கனமழை - கூடலூரை சூழ்ந்த வெள்ளம்.

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 59 செமீ மழை பதிவாகியுள்ளது.
சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன - போக்குவரத்து துண்டிப்பு.

* ஜம்மு-காஷ்மீர் புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

துணைநிலை ஆளுநர் ஜி.சி.முர்முவின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

* சென்னை: குன்றத்தூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டிமுனி கொரோனா தொற்றால் உயிரிழப்பு.
சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் பாண்டிமுனி.

* திண்டுக்கல்லில் ரூ.8.69 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி.

வருவாய், ஊரக வளர்ச்சி, தோட்டக்கலை, கால்நடைத் துறை கட்டடங்களை கட்ட அடிக்கல் நாட்டினார்; ரூ.2.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார் முதல்வர்.

* 15  வருடங்களில் இல்லாத அளவு பெய்த கனமழையால் மும்பை மாநகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது...

நேற்று மாலை முதல் மணிக்கு 70 கி.மீ வரை சூறாவளி காற்று வீசி வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி மும்பையின் கொலாபா பகுதியில் 22.9 செ.மீ மழை பெய்தது சாண்டாக்ரூஸில் 8.8 செ.மீ மழை பெய்துள்ளது.

திங்கள்கிழமை மாலை 7 மணி முதல் பெய்த மழையால் நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. கடந்த 10 மணி நேரத்தில், 230 மிமீ மழை மும்பையில் பெய்தள்ளது.

2005 ஆம் ஆண்டிற்கு பின் மிகப்பெரிய வெள்ள பாதிப்பு மும்பையில் ஏற்பட்டுள்ளது.

மும்பையின் புறநகர் சாண்டாக்ரூஸில், 35 வயதான ஒரு பெண்ணும் அவரது இரண்டு குழந்தைகளும் நேற்று காலை வீடு இடிந்து விழுந்ததில் பலியாகினர்.

* திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 43,578 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி.

திண்டுக்கல் மாவட்டத்தில்  படிப்படியாக தொற்று குறைந்து வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக சுமார் 210 நாடுகள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன .

தமிழகத்தில் பொருளாதார இழப்பை ஈடுகட்ட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பின்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொது மக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம் என்றார் - முதலமைச்சர்.

* எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி 2ஆம் கட்ட பரிசோதனை.
ஜூலை 23ல் தடுப்பூசி போடப்பட்டு ஆரோக்கியமாக உள்ள 2 தன்னார்வலர்களுக்கு 2ம் கட்ட பரிசோதனை.

* சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.  - மருத்துவர் இராமதாசு அய்யா

* இ-பாஸ் நடைமுறையில் சிக்கல் என முதலமைச்சரிடம் முறையீடு.

இ-பாஸ் நடைமுறையை எளிதாக்க குழுக்கள் - முதலமைச்சர்.
மாதம் ஒருமுறை இ.பாஸ் புதுப்பித்தால் போதுமானது.

வெளி மாநில தொழிலாளர்களை தாராளமாக அழைத்து வரலாம்-முதல்வர்.

மக்களின் உணர்வுகளை மதித்து மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கான இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்.

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக இருக்கிறது-லெபனான் நாட்டில் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் விளக்கம்.

* துப்பாக்கிச் சூடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு நிபந்தனை ஜாமீன் - உயர்நீதிமன்றம்.

அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு இதயவர்மன் ரூ.3 லட்சம் நன்கொடையாக வழங்க வேண்டும் - நீதிபதி சதிஷ் குமார்.

* இலங்கை நிழல் உலக தாதா அங்கட லொக்கா விவகாரம்.

அங்கடா லக்கா கொலை வழக்கில் தனிப்படைகள் மதுரை, ஈரோடு, கோவையில் விசாரணை.

சிபிசிஐடி-யிடம் இந்திய உளவு அமைப்பான "ரா" அதிகாரிகள் ஆலோசனை.

கோவையில் உயிரிழந்தது லொக்கா என்பதை உறுதி செய்வதற்காக டி.என்.ஏ. பரிசோதனை.

லொக்காவின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் சென்னை  தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு. உடலிலிருந்து எடுக்கப்பட்ட இதயமும் ஆய்வுக்கு உட்படுத்தப் படுகிறது.

இந்த வழக்கில் கைதான சிவகாமசுந்தரியின் 7 வங்கி கணக்கிற்கு ரூ.1 கோடி வரை பணம் பரிமாற்றம் என தகவல்.

* பெய்ரூட் வெடி விபத்தில் பலியானோர் எண்னிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது. 5000க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

வெடி விபத்தில், 3 லட்சத்துக்கு அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஓட்டல் மற்றும் பள்ளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

* கேரள முதல்வர் அலுவலகத்துடன் ஸ்வப்னா சுரேஷூக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.

ஸ்வப்னா சுரேஷை, கேரள முதல்வருக்கு தெரியும் எனவும் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. தரப்பு வாதம்.

*வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4%ஆக தொடரும்
அதில் மாற்றமில்லை

இந்தியாவின் பொருளாதாரம் உயரத் தொடங்கியுள்ளது நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் பணவீக்கம் ஜூலை-செப்டம்பர் மாதங்களில் உயர்ந்த மட்டத்தில் நீட்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது

10,000 கோடி ரூபாய்க்கு கூடுதல் சிறப்பு பணப்புழக்கம் தேசிய வீட்டுவசதி வங்கியில் ரெப்போ விகிதத்தில் வழங்கப்படும் - சக்திகாந்த தாஸ், ஆர்பிஐ ஆளுநர்

* மருத்துவமனைக்கான கட்டடப் பணி விரைவில் தொடங்க உள்ளது: முதல்வர் பழனிசாமி

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிடப் பணி விரைவில் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் தீவிரமாக கொரோனா தடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

கொரோனா பாதிப்பை கண்டறிய வீடு வீடாக களப்பணியாளர்கள் செல்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பு, ஐசிஎம்ஆர் வழிகாகாட்டுதல்களின் படி கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

*சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் சேமிப்பு கிடங்கில் டி.ஜி.பி. ஆய்வு

சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் சேமிப்பு கிடங்கில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தீயணைப்புத் துறையிடருடன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

மணலி புதுநகர் சி.எஃப்.எஸ் சரக்கு பெட்டக முனையத்தில் 750 டன் அம்மோனியம் நைட்ரேட் இருப்பில் உள்ளது.

சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் ஏற்கனவே நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டது.

*மழை காரணமாக தொற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது

அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன -விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சர்

*🟢திமுக ஆட்சியை உருவாக்குவோம், கலைஞருக்குக் காணிக்கை செலுத்துவோம் நெருக்கடிகளுக்கு அஞ்சாமல், திசை திருப்புதல்களில் சிக்காமல், நமது கொள்கைப் பாதையில் வலிமையுடன் பயணிப்போம் - திமுக தலைவர் ஸ்டாலின்

*மும்பையில் இன்று பலத்த காற்று மற்றும் இடைவிடாத மழை காரணமாக பிஎஸ்இ(BSE) கட்டிடத்தின் மேல் இருந்த சிக்னல்கள் கவிழ்ந்தன.

* ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு நன்றியும், வாழ்த்துக்களும்' - துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

*வெளியூர் செல்வதற்காக ரூ.1,500-க்கு இ-பாஸ் தருவதாக முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 2 பேர் கைது; ஏற்கெனவே கைதான ஜெகதீசன் அளித்த தகவலின் பேரில் ஸ்டாலின், வடிவேலு ஆகியோரை கைது செய்தது தனிப்படை

*இளைஞர்கள் அதிகம் வெளியே சுற்றுவதால் உலகளவில் கொரோனா பாதிப்பு இளைஞர்களிடையே அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது என சுங்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

அமோனியம் நைட்ரேட் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை - சுங்கத்துறை விளக்கம்

*திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு எம்.எல்.ஏ.இதயவர்மன் ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வழக்கில் கைதான 11 பேருக்கு தலா ரூ.10,000-க்கான சொந்த ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

*தென்மேற்குப் பருவக்காற்று தீவிரத்தால் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனழை பெய்யும்.: வானிலை மையம் தகவல்

தென்மேற்குப் பருவக்காற்று தீவிரத்தால் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவுப் பகுதிகளில் பலத்த காற்றுடன் அதிக கனழை பெய்யக் கூடும்.

மேலும் கோவை, தேனி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

*குஜராத் : கனமழையால் வெள்ளக்காடான கிராமங்கள்

குஜராத்  மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது.

இதனால்  பல பகுதிகளை வெள்ளநீர்  சூழ்ந்துள்ளது.

வல்சாத் என்ற பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் தவித்து வந்த கர்ப்பிணி உள்பட 200 பேரை தேசிய பேரிடர் மீட்பு படையினர், படகுகளில்  சென்று பத்திரமாக மீட்டனர்.

*நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.: விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு ஓத்திவைப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உத்தரவை எதிர்த்த விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு ஓத்திவைக்கப்பட்டுள்ளது.

விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 20-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

நீதிமன்ற உத்தரவை மீறி பல கோடி ரூபாயை தன் பிள்ளைகளின் வங்கிக் கணக்குக்கு மாற்றியதால் வழக்கு தொடரப்பட்டது.

*ஐ.பி.எல். போட்டிகளின் புதிய ஸ்பான்சார்களாக பைஜுஸ், அமேசான் நிறுவனங்கள் தேர்வு

ஐ.பி.எல். போட்டிகளின் புதிய ஸ்பான்சார்களாக பைஜுஸ் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஸ்பான்சார்களாக  பைஜுவும், அமேசானும் செயல்படுவார்கள்.

பைஜு நிறுவனம் ஆன்லைன் கல்வித்துறையிலும் அமேசான் நிறுவனம் ஆன்லைன் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளனர்.

* தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என கல்வித்துறை தகவல்.
காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இல்லை. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என தகவல்.

* நாங்கள் எல்லாம் பதில் அளிக்கும் அளவிற்கு எஸ்.வி.சேகர் பெரிய தலைவர் இல்லை. ஏதாவது பேச வேண்டியது, வழக்கு பதியப்பட்டால் ஓடிச் சென்று  ஒளிந்து கொள்வது எஸ்.வி.சேகரின் வழக்கம்- மாண்புமிகு முதலமைச்சர் பழனிசாமி பேட்டி.

* பெய்ரூட் வெடி விபத்தில் பலியானோர் எண்னிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது. 5000க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

வெடி விபத்தில், 3 லட்சத்துக்கு அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஓட்டல் மற்றும் பள்ளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

* கேரள முதல்வர் அலுவலகத்துடன் ஸ்வப்னா சுரேஷூக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. ஸ்வப்னா சுரேஷை, கேரள முதல்வருக்கு தெரியும் எனவும் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. தரப்பு வாதம்.

* தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 43 ஆயிரம் ரூபாயை நெருங்கி உள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் இன்று 50 ரூபாய் உயர்ந்து 5,374 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதே போல் ஒரு சவரன் 400 ரூபாய் அதிகரித்து 42 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பார் வெள்ளி ஒரு கிலோ 2400 ரூபாய் உயர்ந்து 81 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* இலங்கை நாடாளுமன்ற தேர்தல் : மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுன கட்சி தொடர்ந்து முன்னிலை.

ராஜபக்சேவின் பொதுஜன பெரமுன கட்சி - 67.03%, சஜித் பிரேமதாசவின் மக்கள் சக்தி கட்சி - 16.99%, ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி - 2.34% சம்பந்தனின் தமிழ் அரசு கட்சி - 2.28% வாக்குகள் பெற்றுள்ளன.

படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு -கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் வழங்கினர்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கல், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் பார்த்துக்கொள்வோம் - இயக்குநர் ஷங்கர்.

படப்பிடிப்பு விபத்து கசப்பான பாடம், சட்டதிட்டங்களின் படி நடப்போம் - கமல்ஹாசன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages