அக்னிப்புரட்சி இன்றைய (08.08.2020) முக்கிய செய்திகள்.
* உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.22 லட்சத்தை தாண்டியது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 722,959 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 19,524,055 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,533,783 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 65,102 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விபரம்: இன்று ஒரே நாளில் புதிதாக 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 986 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,08,124 அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 118 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 4,808 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,043 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 2,32,618 பேர் குணமடைந்துள்ளனர்.
* கேரளாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்ததில் 2 விமானிகள் உள்பட 19 பேர் பலி.
விமானி டி.எம்.சாதே, துணை விமானி, ஒரு குழந்தை உட்பட 19 பேர் உயிரிழப்பு - 173 பேர் மீட்பு.
* கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தது.
விபத்தின் போது விமானத்தில் நடந்த நிகழ்வுகள் கருப்பு பெட்டியில் பதிவாகியிருக்கும்.
மோசமான வானிலை விபத்துக்கு காரணமா?, சக்கரம் சுழலாதது விபத்தை ஏற்படுத்தியதா? - தீவிர விசாரணை.
கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி மேலும் 4 பேர் உயிரிழப்பு.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 22-ஆக அதிகரிப்பு-மாயமான 45 பேரை தேடும் பணி தீவிரம்.
மண்சரிவில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் தமிழக தோட்ட தொழிலாளர்கள் என்பதால் உறவினர்கள் கவலை.
* ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ - பாஸ் பெறலாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
புரோக்கர்கள், தனி நபர்களை பொதுமக்கள் நாட வேண்டாம் - சென்னை மாநகராட்சி ஆணையர்.
சென்னையில் கொரோனா தடுப்பு பணி 3 அல்லது 4 மாதங்களுக்கு தொடர வேண்டும் - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
* சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு:
சேலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பாலங்கள் அமைக்கப்படும்.
சேலத்தில் சாலை விரிவாக்க பணிகளும் தொடங்கப்பட உள்ளன
கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
டெல்டா பகுதிகளில் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி
கூடுதலாக 5 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்.
முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் வழங்கப்படும்.
இ-பாஸ் முறையை எளிமையாக்கவும், குறைபாடுகளை களையவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு என- முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
*திமுக நோட்டீஸ்க்கு எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பதில்-கட்சி மாண்பை மீறவில்லை என கு.க.செல்வம் விளக்கம். மற்ற கட்சி தலைவர்களை சந்திக்கக் கூடாது என திமுக விதிகளில் இல்லை - கு.க.செல்வம்.
* லஞ்சம் பெற்று இபாஸ் வழங்கும் அதிகாரிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கொரோனா நேரத்திலும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல ஊழல் ஊழியர்கள் செயல்படுகின்றனர்.
இ பாஸ் வழங்க ரூ.500 முதல் ரூ.2000 வரை லஞ்சம் பெறப்படுவதாக உயர்நீதிமன்றம் வேதனை.
* பி.ஆர்க் படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு. 2 வாரங்களில் அறிவிப்பாணை வெளியிட வேண்டும் - அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
* கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 3 பேரின் உடல்கள் மீட்பு.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25-ஆக உயர்வு -மாயமான 41 பேரை தேடும் பணி தீவிரம்.
* கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு.
படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.
விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்த பிறகு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு.
* அதீத கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது.
கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகையில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்.
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.43,040க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.36 குறைந்து 5,380 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் விடுவதில் கட்டுப்பாடு - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
* அமோனியம் நைட்ரேட்டை ஏலம் விட தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதுகுறித்து தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “37 கண்டெய்னர்களில் ஒரு கண்டெய்னருக்கு 20 டன் வீதம் 740 டன்கள் அமோனியம் நைட்ரேட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவை 25 கிலோ கிராம் பாலிபுரோப்பீலின் பைகளின் அடைத்து வைக்கப்பட்டிருப்பதால் ஆபத்து ஏற்பட வாய்பில்லை. லெபனான் விபத்திற்கு பிறகே கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருப்பது அமோனியம் நைட்ரேட் என சுங்கத்துறை தகவல் சொன்னது.
அதுவரை அங்கு யாருக்கும் இந்த கண்டெய்னர்களில் இருப்பது என்னவென்றே தெரியாது. வெடி மருந்தாக மட்டுமல்லாமல், விவசாயத்திற்கான உரம் தயாரிப்புக்கும், தொழிற்சாலைகளுக்கும் இந்த அம்மோனியம் நைட்ரேட் பயன்படுகிறது.
மணலியில் உள்ள சரக்கு பெட்டக மையத்தில் சுங்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 740 டன் அமோனியம் நைட்ரேட் ரசாயனத்தை ஒரே நபருக்கு ஏலம் விடாமல் பிரித்து தனித்தனியாக ஏலம் விட வேண்டும். மூன்று நாட்களில் ஏல நடவடிக்கையை முடித்து, விரைவாக அப்புறப்படுத்த வேண்டும். இந்த இடத்தை தொழிலக பாதுகாப்பு துறை இயக்குநர் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
* கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவு 1.50 லட்சம் கன அடியாக அதிகரிப்பு.
கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தலா 70 ஆயிரம், நுகு அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு.
புதிய கல்வி கொள்கையில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் - பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்.
* மும்மொழி கொள்கையை திரும்ப பெற ஸ்டாலின் வலியுறுத்தல்.
புதிய கல்வி கொள்கையில் இடஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை உள்ளது. தொழில்பயிற்சி அறிமுகம், சாதி படிநிலைகளை வலுப்படுத்தும் வகையில் உள்ளது.
* திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் அடுத்த நடவடிக்கை:
குற்றம்சாட்டப்பட்ட பைசல் பரீத், துபாயில் உள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடத்த முடிவு.
விசாரணை மேற்கொள்ள என்.ஐ.ஏ பிரிவு எஸ்.பி உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் துபாய் செல்ல முடிவு.
என்.ஐ.ஏ குழு துபாய் வர அனுமதி வழங்கியது துபாய் காவல்துறை.
தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கொட லொக்கா வழக்கில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி சிபிசிஐடி மனு:
கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல்.
காதலி அம்மானி தாஞ்சி, மற்றும் சிவகாம சுந்தரி உள்ளிட்டோரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு.
சிபிசிஐடி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை 12 ஆம் தேதி நடைபெறுகிறது.
* கேரள விமான விபத்து - நிவாரணம் அறிவிப்பு:
கேரளாவில் விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு.
* இந்தியர்களை மீட்கும் 'வந்தே பாரத்' திட்டம் தொடரும்.
வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களில் கோளாறு இல்லை, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டம் தொடரும்- மத்திய விமான போக்குவரத்து துறை.
* உயிரிழந்துள்ள மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 196 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக, இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது மரணங்களை மறைப்பது கொரோனாவை தடுக்கும் வழியன்று - ஸ்டாலின்.
* டெல்லியில் தேசிய தூய்மை மையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செந்தில் குமாருக்கு கொரோனா தொற்று - மதுரை மருத்துவமனையில் அனுமதி.
கோழிக்கோடு விமான விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து கருப்பு பெட்டி மீட்பு..!
* சென்னையில் கனமழை
சென்னை ஆலந்தூர், கிண்டி, பரங்கிமலை, வேளச்சேரி, தரமணி,மீனம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக கனமழை மழை
* தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை'
தஞ்சை, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
காஞ்சிபுரம்: வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வந்தவாசி சாலை பகுதிகளில் காற்றுடன் கனமழை
அரியலூர்: ஜெயங்கொண்டம், வி.கைகாட்டி, கீழப்பழுவூர், திருமானூர், உடையார்பாளையம் பகுதிகளில் கனமழை
திருவாரூர்: நன்னிலம், ஆண்டிப்பந்தல், சன்னாநல்லூர், பேரளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
No comments:
Post a Comment