அக்னிப்புரட்சி இன்றைய (13.08.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (13.08.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (13.08.2020) முக்கிய செய்திகள்.

* உலக அளவில் கொரோனா பாதிப்பு - 2.07 கோடி:

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.07 கோடியாக அதிகரிப்பு.

கொரோனா உயிரிழப்பு - 7.51 லட்சம் ஆக உயர்வு.

கொரோனாவிலிருந்து 1.36 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

* இந்தியாவில் 24 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு.

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,96,637-ஆக உயர்வு.

குணமடைந்தோர் எண்ணிக்கை 16,95,982ஆக அதிகரிப்பு.

* தமிழகத்தில் புதிதாக 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு இதுவரை கொரானாவால் மொத்த பாதிப்பு 3,20,355 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் இதுவரை மொத்த உயிரிழப்பு - 5,397.

இன்று மட்டும் 5,146 பேர் கொரானாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ். - தமிழக சுகாதார துறை தகவல்.

* தமிழகத்தில் 10 நாளில் 1000 பேர் இறப்பு! நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் அதிகரிக்கும் உயிரிழப்பு

* நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க புதிய வரித் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு-நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம் என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது.

இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

* நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக்க அரசாணை:

தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் 3,501 நடமாடும் அம்மா கடைகளை திறக்க அரசாணை வெளியீடு.

3,501 நடமாடும்  ரேஷன் கடைகள்  சுமார் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.

நடமாடும் ரேஷன் கடைகள் செயல்படும் இடம்,நேரம்,நாட்களுக்கு ஆட்சியர் அனுமதி பெற வேண்டும்.

அரசு கட்டடம், உள்ளாட்சி நிறுவன கட்டடம், மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் ரேஷன் கடையை திறக்கலாம்.

நடமாடும் ரேஷன் கடைகள் திறக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆக.20க்குள் அறிக்கை தர வேண்டும்- தமிழக அரசு.

* H1B விசா மூலம் மீண்டும் அமெரிக்கா வரலாம்:

H1B விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம்- அமெரிக்க வெளியுறவுத்துறை.

ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் H1B விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம் என அறிவிப்பு.

* பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை வதந்திகளை நம்ப வேண்டாம் -மகன் அபிஜித் முகர்ஜி.

எனது தந்தை பிரணாப் முகர்ஜி நலமுடன் உள்ளார், வதந்திகளை நம்ப வேண்டாம்.

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்த தகவல் வெளியான நிலையில் அவரது மகன் மறுப்பு.

* சுதந்திர தின நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் - கொரோனா பரவலை சுட்டிக்காட்டி தமிழக அரசு வேண்டுகோள்.

சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, வானொலியில் கண்டு, கேட்குமாறு அறிவுறுத்தல்.

* தென்காசி: மேக்கரை அடவிநயினார் கோவில் அணை முழுக்கொள்ளளவான 134.34 அடியை எட்டியது.

முழுக்கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அணையில் இருந்து உபரிநீராக 25 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

* தமிழக முதல்வருக்கு வலுக்கும் கோரிக்கை!
வரும் ஆகஸ்ட் 23 மற்றும் 30ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்து வைக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் சுபமுகூர்த்த சுப தினம் என்பதால் ஏராளமானோர் திருமணம் செய்ய நிச்சயத்துள்ளனர்.

* விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாட்டிற்கான ரிசர்வ் வங்கி மற்றும் பணம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவேன்

நாட்டின் பொருளாதார கொள்கை குறித்து 300 பக்க அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. - நித்தியானந்தா

* டெல்லி இராணுவ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெரும் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்கு சென்றார்.

அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக இராணுவ மருத்துவமனை தகவல்.

அவரது உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என குடும்பத்தினர் வேண்டுகோள்.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.40,840க்கு விற்பனை.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.5,105க்கு விற்பனை.

* 2-வது இடத்திற்கு வருவதற்குதான் திமுக-பாஜக இடையே போட்டி  - அமைச்சர் கடம்பூர் ராஜூ.

2-வது இடத்திற்கு வருவதற்குதான் திமுக-பாஜக இடையே போட்டி என்று வி‌‌.பி. துரைசாமி கூறியிருக்கலாம்.

தமிழகத்தில் பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக வர ஆசை வந்திருக்கிறது.

மு.க.ஸ்டாலின் கனிமொழியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை,‌ கனிமொழி மு.க.ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.

கனிமொழிக்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப் படுத்தப் படுகிறார்.- அமைச்சர் கடம்பூர் ராஜூ.

* ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம் - மு.க.ஸ்டாலின்.

ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவிப்பு.

* கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான  ஸ்வப்னா சுரேஷின்  ஜாமீன் மனு தள்ளுபடி. எர்ணாகுளம் பொருளாதார குற்றங்களுக்கான கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு.

* நீட் நுழைவு தேர்வினை ஆன்லைன் மூலம் நடத்த இயலாது- தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல். செப்டம்பர் 13 -ல் நடைபெறும் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற வழக்கில் பதில் மனு தாக்கல்.

* விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை.

கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் சிலை வைக்கவோ, ஊர்வலமாக எடுத்து செல்லவோ, கரைக்கவோ கூடாது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தல்.

* பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையை போல் ஆகிவிட்டது அதிமுக நிலை -முத்தரசன் விமர்சனம்

மற்ற கட்சிகளை பலவீனப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது பாஜக

அடுத்தாண்டு சுதந்திர தினத்தில் மு.க.ஸ்டாலின் கோட்டையில் கொடியேற்றுவார்.

* சித்தா, யுனானி, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது?

மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* அரசியலில் குற்றப்பின்னணியை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் யோசனை.

குற்றவாளிகள் கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது துரதிஷ்டவசமானது.

தேசிய கொடியை அவமதித்த‌தாக புகார் - எஸ்.வி.சேகர் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு.

தேசிய மரியாதை அவமதிப்பு தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.

*கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின் இறுதி செமஸ்டரை ரத்து செய்க. ஏற்கனவே பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டம் வழங்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்.

* மாணவர்களிடம் சில சான்றிதழ்கள் இல்லை என்றாலும், சேர்க்கை பதிவு செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகள் 25% இட ஒதுக்கீடு சேர்க்கையை வரும் 17ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் - தமிழக‌ அரசு.

அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மாணவர் சேர்க்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியீடு.

கல்வி சார்ந்த விலையில்லா பொருட்கள் வழங்குவதற்கும் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.

மூணாறு நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிலம் வழங்கி புதிய வீடுகள் கட்டித் தரப்படும் - பினராயி விஜயன், கேரள முதல்வர்.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளது கல்விச்செலவை அரசே ஏற்கும் - பினராயி விஜயன்.

* பவானி சாகர் அணை திறக்கப்படவுள்ளதால், பவானி ஆற்றின் கரையோர பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை.

ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அறிவுறுத்தல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages