தமிழ்நாட்டுக்கு கர்நாடக கே.ஆர்.எஸ்,கபினி,நுகு அணைகளிலிருந்து வினாடிக்கு ஒரு இலட்சத்து ஐம்பது மூவாயிரம் (1,53,000) கன அடி தண்ணீர் வரத்து மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது - பாமக தலைவர் ஜி.கே.மணி
கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணை நிரம்பிட இன்னும் 2 அடியே உள்ள நிலையில் வினாடிக்கு 77,000 கன அடி தண்ணீரும்,கபினி அணை நிரம்பி வினாடி 70,000 கன அடி தண்ணீரும், மைசூரு நுகு அணையிலிருந்து வினாடிக்கு 6,000 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒகேனக்கல் அருவிகளில் கொட்டி ஓடி வருவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 2 நாட்களில் 11 அடிக்குமேல் மளமளவென உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை இன்னும் ஒரு வாரத்தில் முழு அளவில் நிரம்பும் என எதிர்பார்க்கலாம். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உள்ளிட்ட22 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் டெல்டா உள்ளிட்ட12 மாவட்டங்களுக்கு பாசன ஆதாரமாகவும் விளங்குகிற காவிரியில் மிக அதிக நீர் வரத்தும் மேட்டூர் அணை நிரம்புவதும் தமிழ்நாட்டுக்கு மட்டற்ற மகிழ்ச்சி - ஜி.கே.மணி
No comments:
Post a Comment