அக்னிப்புரட்சி இன்றைய (16.08.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (16.08.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (16.08.2020) முக்கிய செய்திகள்.

* உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,592,599 ஆகும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் இறப்பு எண்ணிக்கை 7.67 லட்சமாகும்.

இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1.4 கோடியாகும்.

* தமிழகத்தில் மேலும் 5,950 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதார துறை தகவல்

இதுவரையிலான கொரானா மொத்த பாதிப்பு  3,38,055 ஆக உயர்வு.

தமிழகத்தில் மேலும் 125 பேர் பலி.
இதுவரையிலான மொத்த உயிரிழப்பு 5766.

இன்று கொரானோவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6019.

தமிழகத்தில் இதுவரையில் கொரானாவிலிருந்து குணமடைந்தவர்களின்  மொத்த எண்ணிக்கை 2,78,270.

* தமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத ஊரடங்கு.
ஆகஸ்ட் மாதம் முழுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத ஊரடங்கு.

* கொரோனா சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டார்.

எஸ்.பி.பி. அவ்வப்போது கண்விழிப்பதாக
மருத்துவர்கள் தகவல்.

நுரையீரல் தொற்றுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை - மருத்துவர்கள்.

* எஸ்.பி.பி. குணமடைய துணை முதல்வர் பிரார்த்தனை!!

பிரபல பின்னணி பாடகர் பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறவைனை வேண்டுகிறேன்!- துணை முதல்வர் பன்னீர்செல்வம்!

* சென்னை வியாசர்பாடியில் ஐந்து ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

* தென்மேற்கு பருவக்காற்று எதிரொலியால் சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

* இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி புகழாரம்.

3 விதமான போட்டிகளிலும் சாம்பியன் 'கேப்டன் கூல்' என முதலமைச்சர் டுவிட்டரில் பதிவு.

* முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம் - டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி.

குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை.

* தோனி ஓய்வு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வேதனை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* விழுப்புரம் ஆயுதப்படை 2 ஆம் நிலை காவலர் ஏழுமலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை:

விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி. விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை.

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நலம்பெற துணை முதலமைச்சர் பிரார்த்தனை.

சகோத‌ர‌ர் எஸ்.பி.பி. விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் - ஓபிஎஸ்.

* மாஞ்சா நூல் விற்பனை - 45 பேர் கைது: சென்னையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 36 மாஞ்சா நூல் கண்டுகள், 164 பட்டங்கள் பறிமுதல்.

மூலக்கடை மேம்பாலத்தில் சென்ற மாதவன் என்பவரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததையடுத்து நடவடிக்கை.

* மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்.

5 ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டு, இறுதி மூச்சு உள்ள வரை சிகிச்சை அளித்த சிறப்புக்குரியவர் திருவேங்கடம் - முதலமைச்சர் பழனிசாமி.

* பெண்கள் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் பரிசீலனைக்கு கனிமொழி வரவேற்பு.

சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு சட்டத்தையும் நிறைவேற்றுக.
பிரதமர் மோடிக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை.

* தமிழக வேலை தமிழருக்கே' என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்.

மண்ணின் மைந்தர்களுக்கு தமிழகத்தில் வேலை இல்லை; பறிக்கப்படுகிறது -வேல்முருகன்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் இந்திக்காரர்கள் திட்டமிட்டு திணிப்பு -வேல்முருகன்.

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் இந்தி வந்தால் பிளவு வரும் - சீமான்’

இந்தியை போல் தமிழையும் நாடெங்கும் படிக்க சொல்வார்களா?

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும், நானும் போட்டியிடுவேன்.

இந்தி, சமஸ்கிருதத்தை படிக்கச் சொல்பவர்கள் தமிழை படிக்கச் சொல்ல மறுப்பது ஏன்?- நாம் தமிழர் சீமான்.

* பக்குவமற்ற வயதில் வரும் காதலும், திருமணமும் பெண்களின் சாதனைகளுக்கு தடையாக உள்ளன - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு.

பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்த பிரதமரின் அறிவிப்புக்கு மருத்துவர் இராமதாசு வரவேற்பு.

* தமிழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் - தமிழக பாஜக தலைவர் முருகன் திட்டவட்டம்.

அதிமுக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் விளக்கம்.

* 6 மாதங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா மகிழுந்து பரிசு
- தமிழக பாஜக தலைவர் எல். முருகன்
எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம் மீண்டும் வாருங்கள்- எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குணமடைந்து வர வேண்டும் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உருக்கமான பதிவு.

* நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு.

ராசிபுரம் அருகேயுள்ள ப.மு. பாளையத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விபரீதம்.

தொழிலாளர்கள் சஞ்சய், முருகேசன் ஆகிய 2 பேர் உயிரிழப்பு - மேலும் 3 பேர் கவலைக்கிடம்.

* கடலூர்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் வளாகத்தில் மது அருந்திய விவகாரம்.

கோவில் பொறுப்பு மேலாளர் சிவராஜன், காவலர் சிவக்குமார் இருவரும் பணியிடை  நீக்கம்.

விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் அதிரடி. இருவரிடமும் விசாரணை நடத்த வனத்துறையும் முடிவு, இருவரும் தலைமறைவு.

* சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி - ராகுல்காந்தி.

இந்தியாவில் வாட்ஸப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது.

சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி.

ஃபேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன- ராகுல்காந்தி.

* முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகா்ஜியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது
அவரது மகன் அபிஜித் முகர்ஜி தகவல்

* தமிழகத்தின் 2 ஆம் தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும்
- அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

* சென்னையில் வரும் 18-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு.
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆக-18 முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு.
காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறந்திருக்கும் - டாஸ்மாக் நிர்வாகம்.

* பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியணியத் திற்கு நினைவு வந்திருக்கிறது; உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ்.பி.பி.யின் மகன் சரண்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages