அக்னிப்புரட்சி இன்றைய (17.08.202) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (17.08.202) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (17.08.202) முக்கிய செய்திகள்.

* உலகளவில் கொரோனா தொற்று:
பாதிப்பு எண்ணிக்கை 2.18 கோடியாக அதிகரிப்பு.

குணமடைந்தோர் எண்னிக்கை 1.45 கோடியாக உயர்வு.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.72 லட்சமாக அதிகரிப்பு.

* இந்தியாவில் கொரோனா தொற்று:
பாதிப்பு எண்ணிக்கை 25,89,682 லிருந்து 26,47,663 ஆக அதிகரிப்பு.

குணமடைதோர் எண்ணிக்கை 18.62 லட்சத்திலிருந்து 19.19 லட்சமாக உயர்வு.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 49,980 லிருந்து 50,921 ஆக அதிகரிப்பு- சுகாதாரத்துறை அமைச்சகம்.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,945 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,185 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,17,839 அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 120 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 5,886 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,667 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 2,83,937 பேர் குணமடைந்துள்ளனர். தமிழக சுகாதாரத் துறை

* மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் உடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை.

நதிநீர் இணைப்பு தொடர்பாகவும், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நதிநீர் திட்டங்கள் தொடர்பாகவும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளனர்.

* தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் முறை அமலுக்கு வந்தது:

முதல்வர் பழனிசாமி உத்தரவின் பேரில் இ-பாஸ் தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி கிடைக்க தொடங்கியது.

* தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நவம்பர் வரை ஒரு கிலோ கோதுமை இலவசமாக தர உத்தரவு.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கோதுமையையும் நவம்பர் வரை இலவசமாக தர பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவு.

விரும்பும் அட்டைதாரர்களுக்கு மட்டுமே கோதுமை வழங்கவும், கோதுமையை தரும்போது இலவச அரிசி அளவில் குறைத்துக்கொள்ளவும் உத்தரவு.

* டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டடத்தின் 6 வது மாடியில் தீ விபத்து.

7 வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

* தேசியக்கொடியை அவமதித்தாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் மேல் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர்  காவல்துறை ஆணையரிடம் புகார்.

* தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

1ஆம் வகுப்பில் சேர மாணவர்கள் நேரில் வராவிடில் பெற்றோர் தரும் ஆவணங்கள் அடிப்படையில் சேர்க்கை.

சேர்க்கையின் போதே மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை,கல்வி உபகரண பொருட்கள் வழங்க ஏற்பாடு.

மாணவர்கள் அதிகளவில் இருந்தால் காலையில் 20 பேர், மாலையில் 20 பேர் என சேர்க்கை நடத்தப்படும்.

* முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87வது பிறந்தநாளையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை.

* அமெரிக்காவின் சின்சினாட்டி பகுதியில் வெவ்வேறு இடங்களில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவின் சின்சினாட்டி பகுதியில் வெவ்வேறு இடங்களில் இன்று அதிகாலை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில் எந்த துப்பாக்கி சூட்டிற்கும் தொடர்பு இல்லை. குறைந்தது 20-30 கிமீ தூரத்தில் இந்த துப்பாக்கி சூடுகள் நடந்து இருக்கிறது. இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய நபர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட எல்லோரும் 40 வயதுக்கும் குறைவானவர்கள். இதில் 18க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள்.

* ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.20.69 கோடி அபராதம் வசூல்

ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 9,73,576 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு.

இதுவரை 6,85,415 வாகனங்கள் பறிமுதல்; 8,81,434 வழக்குகள் பதிவு.
- தமிழக காவல்துறை.

* 6 மாதங்களாக ஓய்வூதிய கணக்கில் பணம் எடுக்காவிட்டால் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என தமிழக அரசு ஆணை

*தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:

கோவை, நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்யும். - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். ஆக.19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.

* எஸ்பிபி குணமடைந்து திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் - ரஜினி:

எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டி நடிகர் ரஜினிகாந்த் வீடியோ.

எஸ்பிபி அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். எஸ்பிபி குணமடைந்து திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் - ரஜினி.

*நீட் தேர்வை மேலும் தள்ளி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு:

11 மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி.

தேர்வை தள்ளி வைப்பதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் -நீதிபதிகள்.

* கொரோனாவால் வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திவிட முடியாது".
அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுடன் நகர்ந்து தான் ஆக வேண்டும் - நீதிபதிகள்.

ஓராண்டை இழப்பதற்கு மாணவர்கள் தயாராக உள்ளனரா? - நீதிபதிகள் கேள்வி.

* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 232 குறைவு.
ஒரு சவரன் தங்கம் ரூ 40,568க்கு விற்பனை.

*‘கொரோனா காலத்தில் ரூ.4 கோடி சொத்து’
கடலூரில் வீடு முழுவதும் குட்காவை பதுக்கிய பாரதி என்பவர், கொரோனா காலத்தில் மட்டும் ரூ.4 கோடிக்கு சொத்து வாங்கியது அம்பலம்.
பொதுமுடக்க காலத்தில் ரூ.4 கோடி சொத்துக்கள் வாங்கியது குறித்து வருமானவரித்துறைக்கு தெரிவிக்க முடிவு.

* மணல் கடத்தல் விவகாரத்தில் உத்தரவுகளை பின்பற்றாவிட்டால், மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும்.
-  உயர்நீதிமன்ற மதுரை கிளை.

*பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலம் தேறிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. விரைந்து முழு உடல்திறன் பெற்று, மீண்டும் தனது பாட்டு பயணத்தை எஸ்.பி.பி. தொடரட்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்..

*மணல் கடத்தல் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி:

மணல் கடத்தல் வழக்குகள் அதிகரிப்பதால் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு
உத்தரவிட நேரிடும்.

சவுடு மண் எடுப்பதை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படுகிறதா?- நீதிபதிகள் கேள்வி.

* விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பழைமைவாதம் - மூட நம்பிக்கை - சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உறுதியாக எதிர்த்து நின்று, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குப் போராடும் 'எழுச்சித்தமிழர்'.

சமத்துவப் பெரியார்' தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்பு திருமாவளவன் என்று ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

* கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளியை சக்கர நாற்காலியில் இருந்து  தள்ளிய விவகாரம்.

தமிழக ஊரக சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் 3 வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவு. தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மனித உரிமை ஆணையம் உத்தரவு.

* புதுச்சேரியில் நாளை காலை 6 மணி முதல் புதன் கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு. மருந்து கடைகள், பால் நிலையங்களை தவிர பிற கடைகள் செயல்பட அனுமதி இல்லை - முதலமைச்சர் நாராயணசாமி.

கொரோனா குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை.
மக்கள் ஒத்துழைப்பு தராவிடில் செவ்வாய்தோறும் அமலாகும் முழுமுடக்கம் ஞாயிறு அன்று மாற்றப்படும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

* தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 2021 ஜனவரி.15ஆம் தேதி வெளியிடப்படும் - தேர்தல் ஆணையம்.

இந்த ஆண்டு நம்பவர் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

நவம்பர் 16 முதல் டிசம்பர் 15 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். - தேர்தல் ஆணையம்.

* ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் பலி.

பாரமுல்லா மாவட்டம் கிரீரி பகுதியில் மோதலால் பதற்றம்.

பலியானவர்களில் இருவர் சிஆர்பிஎப் வீரர்கள்- ஒருவர் காஷ்மீர் போலீஸ் எனத் தகவல். கிரீரி பகுதியை சுற்றி வளைத்துள்ளது, ராணுவம்.

* சாத்தான்குளம் கொலை வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது, சிபிஐ.

கொரோனாவால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பு தகவல். சிபிஐ விசாரணை திருப்திகரமாக உள்ளது - நீதிபதிகள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages