அக்னிப்புரட்சி இன்றைய 19.08.2020) முக்கிய செய்திகள்.
* உலகளவில் கொரோனா தொற்று:
பாதிப்பு எண்ணிக்கை 2.22 கோடியாக அதிகரிப்பு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 1.5 கோடியாக உயர்வு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.83 லட்சமாக அதிகரிப்பு.
* இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,092 பேர் மரணம்.
நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52,889 ஆக அதிகரிப்பு.
பாதிப்பு எண்ணிக்கை 27,02,742 லிருந்து 27,67,273 ஆக அதிகரிப்பு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 19.77 லட்சத்தில் இருந்து 20.37 லட்சமாக உயர்வு- மத்திய சுகாதார அமைச்சகம்
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,186 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,20,267 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 116 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 6,123 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 6,384 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 2,96,171 பேர் குணமடைந்துள்ளனர்.
* சென்னையில் பெட்ரோல் -டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல், லிட்டர் 83.99 ரூபாய், டீசல் லிட்டர் 78.86 ரூபாய்க்கு விற்பனை.
* பிரதமர் மோடி தலைமையில், இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.
புதிய கல்விக்கொள்கை மற்றும் கொரோனா குறித்து ஆலோசனை என தகவல்.
* நீட் தேர்வு பயத்தால் கோவையில் 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை.
கடந்த 2 ஆண்டுகளாக தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் மாணவி தற்கொலை.
* மூப்பனாரின் 89 - வது பிறந்தநாளையொட்டி, அவரது படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மாலை அணிவித்து மரியாதை.
எனது தந்தை பிரணாப் முகர்ஜி உடல்நிலை சீராக உள்ளது.
தந்தையின் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதால் உடல்நிலையில் முன்னேற்றம்- மகன் அபிஜித் முகர்ஜி.
*சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்தது.
சென்னையில் ஒரு சவரன் ரூ.41,248க்கு விற்பனை.
ஒரு கிராம் தங்கம் ரூ.31 குறைந்து ரூ.5156க்கு விற்பனை.
* மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மாலியில் ராணுவ புரட்சி.
மாலி அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ராணுவத்தால் கைது.
ராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையில் மாலி அதிபர் இப்ராகிம் பவுபக்கர் ராஜினாமா என தகவல்.
*இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்- சுனாமி எச்சரிக்கை இல்லை.
இந்தோனேசியாவின் பெங்குலு பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன; ரிக்டரில் 6.8, 6.9 ஆக பதிவு.
* சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது சொந்த கட்சியில் தொடர்ந்து எதிர்ப்பை சந்தித்து வருகிறார்
சீனாவை ‘உலகின் எதிரியாக’ மாற்றிவிட்டார என்று குற்றம்சாட்டி இருந்த அக்கட்சியினரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.
* காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் வேலைவாய்ப்பு
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 58
பணியின் தன்மை : Director/Superintending Engineer, Deputy Director, Senior Professional Assistant, Assistant Director-ll/Assistant Engineer, Junior Engineer, Assistant Director, Office Superintendent, Assistant/ Public Relation Officer, Upper Division Clerk, Lower Division Clerk உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
வயது வரம்பு : 56 க்குள் இருக்க வேண்டும். கடைசித் தேதி : 14/10/2020
* மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியர்கள் தலைமையில் குழு அமைத்து ஆணையர் ஆணை இடைநிற்றலை தவிர்க்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை
* விதை பயங்கரவாதம்
பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் தன்மையுடைய தகுதி அற்ற விதைகள்
வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்துள்ளன – இவை மிகவும் அபாயகரமானவை
”இது விதை பயங்கரவாதம்’
விளைநிலங்களில் விதைப்பு செய்வதற்கு முன் வாங்கிய விதைகளை ஆய்வகங்களுக்கு அனுப்பி ஆய்வு செய்யவேண்டும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கேட்காமலேயே உறைகளில் விதைகள் பலரது வீடுகளுக்கு வந்துள்ளன
மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள தமிழ்நாடு உணவு பொருள் வணிக வளாகத் தலைவரும் மேலாண் இயக்குநருமான இரத்தினவேல் தகவல்
* 6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை.
6 மாத கால பணப்பரிவர்த்தனை இல்லாத வங்கி கணக்குகள் பற்றி கணக்கெடுக்க மட்டுமே அறிவுறுத்தல்- தமிழ்நாடு கருவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி தகவல்.
பணப்பரிவர்த்தனை செய்யாத ஓய்வூதியதாரர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்- தமிழ்நாடு கருவூலத்துறை ஆணையர்.
* சென்னையில் ஒரே நாளில் 14,300 பேருக்கு இ-பாஸ்’
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 14,300 பேர் இ-பாஸ் பெற்றுள்ளனர்!
பெண்ணின் திருமண வயதை 18 லிருந்து 21ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டம்! பல்வேறு தரப்பினர் பாராட்டு!
* 2 வது தலைநகராக மதுரை ஆக.21ம் தேதி ஆலோசனைக்கு ஏற்பாடு.
மதுரையை 2ம் தலைநகராக அறிவிக்கக் கோரி அமைச்சர் உதயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.
தொழில் வர்த்தக சங்கம் சார்பில் தென் மாவட்ட தொழில் வர்த்தகர்கள் பங்கேற்கும் கலந்தாய்வு.
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் வர்த்தகர்கள் பங்கேற்பு.
* நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
வழக்கு தொடர்பாக மும்பை காவல்துறை இதுவரை சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவு.
* திருச்சியை தான் 2 வது தலைநகராக அறிவிக்க வேண்டும் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.
"எம்.ஜி.ஆரின் கனவு திட்டத்தை நிறைவேற்றுவது தான் சரியாக இருக்கும். மதுரையை 2 வது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ வலியுறுத்திய நிலையில் புதிய கோரிக்கை.
* குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நலம் மேலும் மோசமடைந்தது - ராணுவ மருத்துவமனை தகவல்.
அவருக்கு புதிதாக நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல்.
தொடர்ந்து மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது - ராணுவ மருத்துவமனை.
* ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்:
தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் சார்பில் மனு தாக்கல்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மனு தாக்கல்.
* நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உருவப்படத்திற்கு நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் டிஜிபி திரிபாதி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காவலர்கள் உயிரிழந்தால் இழப்பீடு பெற்று தருவதில் பாரபட்சம் இல்லை:
வழக்குகள், சம்பவங்கள் வேறுபாடு அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படுகிறது. - நெல்லையில் டிஜிபி திரிபாதி பேட்டி.
* கோவை மாநகராட்சி பள்ளிகளில் இந்தி மொழி கட்டாய பாடம்?:
அரசு ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பணியை தொடங்கியது, கோவை மாநகராட்சி.
1ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களில் இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா? என கேள்வி.
அரசு பள்ளிகளில் இந்தி கட்டாயமா?
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், 1ஆம் வகுப்பில் இந்தி பாடம். இந்தி அடங்கிய மும்மொழிக் கொள்கை ஏற்கப்பட்டதா? என கேள்வி.
* சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிக்கையை செயல்படுத்த தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இஐஏ வரைவறிக்கையை தமிழில் மொழிபெயர்க்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
3 வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா என மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கேட்கப்படவில்லை.
அந்த விண்ணப்ப படிவம் நான் பதவியேற்ற பின் வெளியிடப்பட வில்லை. கோவை மாநகராட்சி பள்ளி விண்ணப்பத்தில் இந்தி பற்றிய கேள்விக்கு ஆணையர் விளக்கம்.
* தென் மாவட்டங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து டிஜிபி திரிபாதி நெல்லையில் ஆலோசனை.
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட எஸ்.பி.க்கள் பங்கேற்பு.
* தேசிய வேலைவாய்ப்பு அமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி.
மத்திய அரசு பணிகளில் பிரிவு 3,4-ல் பணியாளர்களை தேர்ந்தெடுக்க புதிய அமைப்பை ஏற்படுத்த அனுமதி.
பொதுத்துறை வங்கி ஊழியர்களின் நியமனம் இந்த புதிய அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும்.
* திமுக எம்.பி., கனிமொழி டுவிட்டர் பதிவில் நீட் தேர்வு அளிக்கும் மன அழுத்தம் தாங்காமல்,மேலும் ஒரு கோவை மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.
கொரோனா காரணமாக, இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
* பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நலம் தேற கூட்டுப் பிரார்த்தனை.
நாளை மாலை 6 மணிக்கு வீடுகளில் அமர்ந்து திரையுலக பிரமுகர்கள் பிரார்த்தனை. எஸ்.பி.பி.யின் பாடல்களை பாடி பிரார்த்தனை செய்ய முடிவு - இயக்குநர் பாரதிராஜா அழைப்பு.
* மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.
கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை ரூ.125 ஆக உயர்த்த கோரிக்கை.
கொப்பரை தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலம்.
கிலோ ரூ.99.60 காசாக இருப்பதை உயர்த்தக் கோரிக்கை.
* தனியார்பள்ளி மாணவர்கள் மாற்று சான்றிதழ் கேட்டால் வழங்க மறுக்க கூடாது. அவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மெட்ரிகுலேஷன் இயக்குனரகம் உத்தரவு.
* காவலர் சுப்பிரமணியன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்.
நாட்டு வெடிகுண்டு வீசிக் காவலர் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவலர்களின் பாதுகாப்பினைத் உறுதி செய்திட நடவடிக்கை தேவை - ஸ்டாலின்.
* மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்- முதல்வர் பழனிச்சாமி.
மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நபரின் நேரடி வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.3 லட்சம்.
மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலத்த காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம்.
* தமிழக அரசு இ பாஸ் விதிகளில் மட்டும் தளர்வு அளித்துள்ளது. தனிமைப்படுத்தல் விதிகளில் எந்தவித தளர்வும் அளிக்கவில்லை.
எனவே பழைய உத்தரவின்படி 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். புதிதாக எந்த தனிமைப்படுத்துதல் விதியும் நடைமுறைப்படுத்தவில்லை-மாநகராட்சி அதிகாரி விளக்கம்.
* நாகை மாவட்ட சன் நியூஸ் செய்தியாளர் கென்னடி கொரோனாவால் உயிரிழந்ததால் 5 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.
* 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான உடனடி தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என தேர்வுத்துறை அறிவிப்பு.
செப்.29 முதல் அக்.5 வரை 8ம் வகுப்புக்கான துணைத் தேர்வுகள் நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவிப்பு.
* வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளைக்கு கொண்டு வரப்பட்டது. காவலர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
* பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் என மருத்துவமனை நிர்வாகம் தகவல்.
வெண்டிலேட்டர், எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது- மருத்துவமனை.
மருத்துவ வல்லுநர் குழு தொடர்ந்து எஸ்.பி.பி. உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர் -மருத்துவமனை.
* தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உடல் அவரது சொந்த ஊரில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
வீட்டில் இருந்து சுப்பிரமணியன் உடல் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. அதன்பின் காவலர் உடல் வைக்கப்பட்ட பெட்டியை ஐஜி முருகன் உள்ளிட்ட காவல்துறையினர் சுமந்து சென்றனர். அங்குத் தமிழக டிஜிபி திரிபாதி, தென்மண்டலக் காவல்துறைத் தலைவர் முருகன், திருநெல்வேலி சரகத் துணைத் தலைவர் பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சுப்பிரமணியன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதையும் செலுத்தப்பட்டது.
சுப்பிரமணியனின் மனைவி 11 மாதக் கைக்குழந்தையுடன் அழுதுபுரண்டது காண்போரைக் கண்கலங்கச் செய்தது. டிஜிபி திரிபாதி அவருக்கு ஆறுதல் கூறித் தேற்றினார். அதன்பின் சுப்பிரமணியன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment