பா.ம.க மயிலாடுதுறை மாவட்ட அமைப்புத் தலைவரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் சீர்காழி (தனி)தொகுதியில் பா.ம.க வேட்பாளராக போட்டியிட்ட வருமான பொன். முத்துகுமார் மறைவுக்கு பா.ம.க சார்பில் 'அஞ்சலி செலுத்தி ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள் கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

பா.ம.க மயிலாடுதுறை மாவட்ட அமைப்புத் தலைவரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் சீர்காழி (தனி)தொகுதியில் பா.ம.க வேட்பாளராக போட்டியிட்ட வருமான பொன். முத்துகுமார் மறைவுக்கு பா.ம.க சார்பில் 'அஞ்சலி செலுத்தி ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள் கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

பா.ம.க மயிலாடுதுறை மாவட்ட அமைப்புத் தலைவரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் சீர்காழி (தனி)தொகுதியில் பா.ம.க வேட்பாளராக போட்டியிட்ட வருமான பொன். முத்துகுமார் மறைவுக்கு பா.ம.க சார்பில் 'அஞ்சலி செலுத்தி ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள் கிறோம்  -  பாமக தலைவர் ஜி.கே.மணி   
        
1989ல் பா.ம.க தொடங்கியபோது வைத்தீஸ்வரன்கோயில்  பேரூர் செயலாளராக பொறுப்பேற்றவர். 2016 சட்டமன்றத் தேர்தலில் சீர்காழி (தனி) தொகுதியில் பா.ம.க வேட்பாளராக போட்டியிட்டவர். தற்போது கட்சியின் மாவட்ட அமைப்புத் தலைவராக இருந்து வந்தவர்.ஆரம்ப காலந்தொட்டு தீவிரமாக செயல்பட்டு வந்தவர். கட்சியில் கொள்கைப் பற்றும் மருத்துவர் அய்யா அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் கொண்டிருந்தவர். என்னிடம் அடிக்கடி கைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருப்பவர். சமீபத்தில் ஐதராபாத்திலிருந்து பேசுவதாகக் கூறினார். மருத்துவர் அன்புமணி அவர்களை வெற்றிபெறச் செய்வதே என் நோக்கம் என்பார். அந்த மாவட்டத்தில் நமது கட்சியினரிடம் மிகுந்த பற்றும் நெருக்கமாகவும் இருந்து செயல்பட்டு வந்தவர். அவரது இறப்பு பா.ம.கவுக்கு இழப்பாகும்..குடும்பத்தினர்க்கு பேரிழப்பாகும்.
        
அவர் வாரிசாக வளர்க்கப்பட்ட அவரது அண்ணன் மகனும் பா.ம.க மாவட்ட இளைஞர் சங்கத் தலைவருமான சுசீந்திரனிடம் கைபேசியில் தொடர்புகொண்டு துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினேன். அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் து.பொ.செ பழனிசாமி, மாவ.செ. இலண்டன் அன்பழகன், வ.ச.து.த பாக்கம் சக்திவேல், பேராசிரியர் கோ.சு.மணி, நகரச் செயலாளர் தில்லைக்கண் ராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages