அக்னிப்புரட்சி இன்றைய (21.08.2020) முக்கிய செய்திகள்.
* உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,28,31,350
உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் 8 லட்சத்தை நெருங்கியது
உலக நாடுகளில் மொத்தம் 7,96,287 பேர் கொரோனாவால் மரணம்
உலக நாடுகளில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,54,98,297
* ஒருநாள் கொரோனா மரணங்களில் இந்தியாவே தொடர்ந்து முதலிடம்
இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 68,507
*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,67,430 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,282 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,22,757 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 101 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 6,340 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,764 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 3,07,677 பேர் குணமடைந்துள்ளனர்.
* இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதி.
* தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் வெடி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு.
நீர்மின் நிலையத்தின் 4 வது அலகு முனையத்தில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
வெடி விபத்து ஏற்பட்ட நீர்மின் நிலையத்திலிருந்து 8 ஊழியர்கள் மீட்பு, 9 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர்.
ஆந்திரா, தெலங்கானா மாநில எல்லையில் ஸ்ரீசைலம் அணை அமைந்துள்ளது. வெடி விபத்தால் கடும் புகை ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சம்பவ இடத்திற்கு செல்ல உள்ளார்.
* சென்னையில் பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 84.26 ரூபாய்க்கும், விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் டீசல் 78.86 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
* சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் போலீசாரால் சுட்டுக்கொலை.
ரவுடி சங்கர் என்பவரை அயனாவரத்தில் போலீசார் கைது செய்ய முயன்றபோது காவலர் முபராக்-ஐ ரவுடி சங்கர் அரிவாளால் தாக்கப்பட்டதால், போலீசார் சுட்டுக்கொலை செய்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட சங்கர் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
* கோயில் வளாகத்தில் மளிகைக் கடை ஊழியரை கொன்று புதைத்ததாக ஜோதிடர் கைது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 12ஆம் தேதி மளிகைக் கடை ஊழியர் கண்ணதாசன் காணாமல் போனார்.
லிங்கா ரெட்டி பாளையத்தில் உள்ள கோவில் வளாகத்தில் கண்ணதாசனை கொன்று புதைத்து இருப்பது கண்டுபிடிப்பு.
இரவோடு இரவாக கண்ணதாசன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, முண்டியம் பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.
மளிகைக் கடை ஊழியர் கண்ணதாசனை கொன்று புதைத்ததாக ஜோதிடர் கோபிநாத் கைது. ஜோதிடர் கோபிநாத்தின் நண்பர் திருப்பதி, கண்ணதாசனின் கள்ளக்காதலி மஞ்சுளா கைது.
* விநாயகர் சதுர்த்தி- தமிழக மக்களுக்கு முதல்வர் வாழ்த்து’
விநாயகர் சதுர்த்திக்கு களிமண்னாலான விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து மக்கள் வழிபட்டு மகிழ்வார்கள்.
விநாயகர் அருளால் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் மக்கள் வாழ வாழ்த்துகள். - முதல்வர் பழனிசாமி.
* விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து
சிறப்பான மற்றும் வளமான எதிர்காலம் அமைந்திட தமிழக மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
* நாமக்கல்: ரூ.14.44 கோடி மதிப்பிலான 26 திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ரூ.137.65 கோடி மதிப்பிலான 130 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
* திருச்சியில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தப் பட்டுள்ளது. கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கான புதிய கட்டணம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமல்.
* நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி - முதல்வர் ஆய்வு:
நாமக்கல் லாரி தொழிலுக்கு பெயர் பெற்ற மாவட்டம். முட்டை, ஜவ்வரிசி உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் மாவட்டம் - முதல்வர்.
அனைத்து வகையிலும் சிறந்து விளங்கும் மாவட்டம் என்றால் மிகையில்லை.
உரிய மருந்து இல்லாத சூழலிலும் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தினமும் 68 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிச்சாமி.
* ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்வு.
ஒரு சவரன் ரூ.40,672-க்கு விற்பனை.
ஒரு கிராம் தங்கம் ரூ.5,084-க்கு விற்பனை.
* தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி - எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு தொடர்ந்து தங்கம் கடத்தி மோசடி செய்ததாக
ஏற்கனவே கைது.
* நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி துரைமுத்து இறுதி சடங்கில் வீச்சரிவாள் வைத்த விவகாரம்.
வீச்சரிவாளுடன் இறுதி சடங்கு செய்தது குறித்து விசாரணை- தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் விளக்கம்.
நிச்சயமாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு குறித்து 3 தனிப்படைகள் விசாரணை.
* மதுரையை 2-ஆம் தலைநகராக அறிவிக்க கோரி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆலோசனை.
தென் தமிழக தொழில் வர்த்தக சங்கத்தினருடன் மதுரையில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
'2-ஆம் தலைநகர் என்பது அரசின் முடிவல்ல' என தர்மபுரியில் நேற்று முதல்வர் பழனிசாமி பேட்டியளித்த நிலையில், இன்று மீண்டும் அமைச்சர் தலைமையில் கூடி ஆலோசனை நடத்துவதால் சர்ச்சை.
* பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை - சென்னை உயர்நீதிமன்றம்.
வீடுகளில் வைத்து வழிபடப்படும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம் - உயர்நீதிமன்றம்.
சென்னையில் மெரீனா கடற்கரையை தவிர்த்து பிற நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கலாம் - உயர் நீதிமன்றம்.
ஊர்வலம் நடத்த விதித்த தடையை தளர்த்த இயலாது - தமிழக அரசு பதில்.
* 11-ம் வகுப்பில் தேர்வு ஆகாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்
* 11ம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி வகுப்புகள் எப்போது தொடங்கப்படும்? ஆகஸ்ட் 25 ல் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
தனித் தேர்வருக்கு செப்டம்பரில் தேர்வு நடத்துவதால் 11ம் வகுப்பு, பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையை தள்ளி வைக்க கோரிய வழக்கு.
* 27ம் தேதி முதல்வர் கடலூரில் ஆய்வு:
கடலூர் மாவட்ட வளர்ச்சி பணி மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் 27ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.
* நெல்லையில் முன்விரோதம் காரணமாக 2 திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை.
பாளையங்கோட்டை நான்கு வழிச்சாலை அருகே கிணற்றில் இருந்து 3 பேர் சடலம் மீட்பு.
சாக்கு மூட்டைகளில் கட்டப்பட்ட நிலையில் 3 பேர் சடலம் மீட்பு.
3 பேர் கொலை தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை.
* மக்களின் பாதிப்புகளை மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்காமல், முதலமைச்சர் யாரிடம் கேட்க மாவட்டங்களுக்கு போகிறார்? - ஸ்டாலின்.
அரசு ஆய்வு கூட்டங்களுக்கு திமுக எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை அழைக்க வேண்டும். மக்களின் குறைகளை எடுத்துரைத்து தீர்வுகாண வழிவகை ஏற்படுத்த வேண்டும்.
இ-பாஸ் நீட்டிப்பு; கொரோனா தடுப்புக்கா? எதிர்கட்சிகளை முடக்கவா? -மு.க.ஸ்டாலின் கேள்வி.
சொந்தப்பணத்தில் நிகழ்ச்சியை நடத்துவதாக கற்பனை செய்கிறார் முதல்வர் -மு.க.ஸ்டாலின்.
* ரவுடிகளை ஒடுக்க தமிழக அரசு நடவடிக்கை. சட்டத்தின் வாயிலாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி.
ஒரு சில சம்பவத்தை வைத்து அரசை குறை கூறாதீர்கள். தி.மு.க. ஆட்சியில் முன்னாள் அமைச்சரே வெட்டிக் கொலை செய்யப்பட்டார் - முதலமைச்சர்.
அரசு கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என யாரையும் கூறவில்லை.
ஆய்வுக்கூட்டத்திற்கு வருவோர் கொரோனா சோதனை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி.
* தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய் புறப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.
சென்னை விமான நிலையத்திலிருந்து தோனி உள்ளிட்ட வீரர்கள் துபாய் புறப்பட்டனர்.
* தேர்வு கட்டணம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் - அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
* ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர்கள் உடல் சென்னை வந்தடைந்தது.
திட்டக்குடி விக்னேஷ், தாராபுரம் முகமது ஆசிப், சேலம் மனோஜ், சென்னை பெரம்பூர் ஸ்டீபன் ஆகியோர் ரஷ்யாவில் மருத்துவம் படித்து வந்தனர்.
கடந்த 8 ஆம் தேதி 4 பேரும் வோல்கா நதியில் குளிக்கச் சென்றபோது அடுத்தடுத்து மூழ்கி உயிரிழந்தனர்.
12 நாட்களுக்குப் பிறகு ரஷ்யாவில் இருந்து உடல்கள் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.
* ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கொரோனோ தொற்று உறுதி. தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் மாவட்ட ஆட்சியர் கதிரவன்.
* கொரோனா காலத்தில் நடத்தப்படும் பொதுத்தேர்தல், இடைத்தேர்தல்- வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்.
முகக் கவசம், உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம். சமூக இடைவெளியை கடைபிடிக்க பெரிய அளவிலான அறைகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்.
கொரோனா பாதித்த நோயாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு.
தேர்தல் ஆணையத்தின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
அரசு முகாம்கள் மற்றும் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களும் தபால் மூலம் வாக்களிக்கலாம்.
* விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது.
பொள்ளாச்சி அருகே ரூ.2,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய கணக்கு மேற்பார்வையாளர் அகஸ்டின் கிறிஸ்டோபர் கைது.
விவசாய மின் இணைப்புக்கு பெயர் மாற்ற லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்.
* பாஜக சார்பில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்
தமிழக பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படும். அரசின் வழிகாட்டுதலின் படி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும். - பாஜக தமிழக தலைவர் எல்.முருகன்.
* தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு:
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் coe.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
* விழுப்புரம் ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது:
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு. விழுப்புரம்: சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவருக்கும் விருது.
மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு.
நாடு முழுவதிலும் இருந்து 47 பேர் தேர்வு.
* இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக ராஜிவ் குமார் நியமனம்.
தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய ஆணையர் நியமனம்.
No comments:
Post a Comment