அக்னிப்புரட்சி இன்றைய (22.08.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.08.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.08.2020) முக்கிய செய்திகள்.

* உலகளவில் கொரோனா தொற்று:
பாதிப்பு எண்ணிக்கை 2.3 கோடியாக அதிகரிப்பு.

குணமடைந்தோர் எண்ணிக்கை 1.56 கோடியாக உயர்வு.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 8.02 லட்சமாக அதிகரிப்பு.

* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று - 945 பேர் உயிரிழப்பு.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27.95 லட்சமாக உயர்வு.

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து 22.22 லட்சம் பேர் குணமடைந்துள்ள நிலையில் 6.97 லட்சம் பேருக்கு சிகிச்சை.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55,794ஆக உயர்வு.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,73,410 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,294 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,24,071 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 80 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 6,420 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,603 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 3,13,280 பேர் குணமடைந்துள்ளனர்.

* சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசு அதிகரித்து ரூ.84.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு லிட்டர் டீசல் விலையில் எந்த மாற்றமின்றி ரூ.78.86க்கு சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது.

* நாடு முழுக்க இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா கட்டுப்பாட்டிற்கு இடையே அமைதியான முறையில் இன்று கொண்டாட்டம்.

* மும்பையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஏற்பாடுகள் தீவிரம்.
பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைத்து ஊர்வலம் நடத்த தடை.

* தமிழகத்தில் பொது இடங்களில் சிலையை வைத்து வழிபாடு நடத்த தடை. மக்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபடலாம்.

* எப்போதும் பாகுபாடு காட்டாமல் வெளிப்படையாக நாங்கள் இயங்கி வருகிறோம்.

எந்த வகையிலும் ஃபேஸ்புக்கில் வெறுப்பு மேலோங்குவதை ஏற்க மாட்டோம்- ஃபேஸ்புக் நிறுவனம்.

தங்களது கொள்கைகளில் ஒரு சார்புடன் ஃபேஸ்புக் நடந்துக்கொள்வதாக புகார் எழுந்த நிலையில் விளக்கம்.

* பாகிஸ்தான் இனி அமெரிக்காவின் GPS செயற்கைக்கோள் கருவிக்கு பதில் சீனா உருவாக்கிய Beidouவை பயன்படுத்த உள்ளது

ராணுவம் உட்பட அனைத்திற்கும் GPSற்கு மாற்றாக Beidouவை பயன்படுத்த உள்ளது.

* சீன வர்த்தகர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் உட்பட அனைவரும் இந்திய நுழைவு அனுமதியை (VISA) பெற பாகிஸ்தானியர்கள் எப்படி விசாவுக்கு விண்ணப்பிக்கிறார்களோ அதற்கிணையாக முன் அனுமதி பெறவேண்டும் - இந்திய வெளியுறவு துறை

* பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது பெரு மகிழ்ச்சியளிக்கிறது - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.
மாரியப்பனின் சாதனை பயணம் தொடர வாழ்த்துக்கள்

* தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான திலீப், சரஸ்வதிக்கும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து.

* டெல்லியில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்தது போலீஸ்.

தவுலா குவானில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்த வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டது.

* வந்தோரை வாழ வைக்கும் சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று:

கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381 - முதலமைச்சர் பழனிசாமி.

பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும் - முதலமைச்சர் பழனிசாமி .

* பலதரப்பட்ட மக்களின் மானுட சமுத்திரமுமான சென்னை, எத்தனை எத்தனை இடர்வரினும் மீண்டு எழும் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்.

* தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடினார்

* ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு.
ஒரு சவரன் 40 ஆயிரத்து 384 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.5,048-க்கு விற்பனை.

* வீடுகளில் வழிபாடு செய்துவிட்டு, கோயில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுமதி- சென்னை உயர்நீதிமன்றம்.

* குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை - ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை.

வென்டிலேட்டர் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை தகவல்.

* சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடத்த ஏற்பாடு?

சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேரில் ஆய்வு.
கொரோனா அச்சம் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தை கலைவாணர் அரங்கில் நடத்த திட்டம்.
தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் கூட உள்ள நிலையில் ஆய்வு.

* நீட் தேர்வை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க முடியாது.

நீட் தேர்வை ஒத்திவைக்க இயலாது என்று உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் பதில் மனு.

இந்தியாவிற்கு வெளியே நீட் தேர்வு மையங்கள் அமைக்க வாய்ப்பு இல்லை - இந்திய மருத்துவ கவுன்சில்.

* தேசிய கொடியை அவமதித்த வழக்கு - முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு.
முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு - உயர்நீதிமன்றத்தில் திங்கள் கிழமை விசாரணை.

* எஸ்.பி.பி.யின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவு- வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம்.
எஸ்.பி.பி உடல்நிலை - புதிய அறிக்கை வெளியீடு.

எக்மோ சிகிச்சையால் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்.

* கைலாசா" ரிசர்வ் வங்கியின் புதிய நாணயங்களை வெளியிட்டார்  நித்தியானந்தா.

* விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்திலுள்ள மாணிக்க விநாயகர் கோவிலில் பல்வேறு பழங்களால் அலங்கார தோரணம் செய்யப்பட்டுள்ளது. கொரானோ ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதியில்லை.

* சென்னையில்  கஞ்சா  விற்றாலோ -  ரவுடியிசம் செய்தாலோ  கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
கடந்த 2 மாதங்களில் மட்டும் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
சென்னை - மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

* அக்டோபர் 30 ம் தேதி அமோசன் பிரைம் தளத்தில் வெளியாகிறது 'சூரரைப் போற்று' திரைப்படம்; பட வருமானத்தில் ரூ.5 கோடி கொரோனா முன் பணியாளர்களுக்கு வழங்கப்படும்! - நடிகர் சூர்யா ட்வீட்!

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது.

முன்னணி நடிகரின் திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. திரையரங்குகளில் தற்போது திரைப்படங்களை வெளியிட முடியாத சூழல் உள்ளது.

கடுமையான உழைப்பில் தயாரான படங்களை, சரியான நேரத்தில் ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் - சூர்யா.

சூரரைப் போற்று திரைப்பட வெளியீட்டு தொகையில் இருந்து ரூ.5 கோடியை பகிர்ந்தளிக்க முடிவு.

பொதுமக்கள், திரையுலகை சார்ந்தவர்கள், கொரோனா முன்கள பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் - சூர்யா.

* காஞ்சிபுரம் சீதாகிங்ஸ்டன் பள்ளிக்கு சீல் வைத்தது குறித்து செப்.1க்குள் தமிழக மெட்ரிக் பள்ளி இயக்குநர், அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு- சென்னை உயர்நீதிமன்றம்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்ட தனியார் பள்ளிக்கு அறநிலையத்துறை சீல்.

* ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்தக்கோரி அதிமுக மேல்முறையீடு.

ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி மத்திய அரசு 3 மாதத்தில் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் ஆணை.

மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்: மனு.

* மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம்.
மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் கடிதம்.

மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை.
மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடைபடுவதாக மத்திய அரசு கவலை.

*வேலைவாய்ப்பு தடைபட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு வேதனை.

மாநில அரசின் கட்டுப்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது என்றும் கடிதத்தில் அறிவுறுத்தல்.

*:திரையரங்கு திறப்பு குறித்து வரும் 1 ஆம் தேதி மத்திய அரசு ஆலோசனை.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே, திரையரங்குகள் திறக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ.

* திருவள்ளூர் : ஆர்.கே பேட்டையில் ரூ.1 கோடி பணம் கேட்டு கடத்தப்பட்ட ஆண் குழந்தை ஒரு மணி நேரத்தில் மீட்பு.

கடத்திய குழந்தையை பள்ளிப்பட்டு சாலையில் விட்டுச் சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை.

* பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது- எம்.ஜி.எம் மருத்துவமனை அறிக்கை.

வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சை-எம்.ஜி.எம் மருத்துவமனை.

அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற்று உயிர்காக்கும் சிகிச்சை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages