அக்னிப்புரட்சி இன்றைய (28.08.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (28.08.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (28.08.2020) முக்கிய செய்திகள்.

* உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.44 கோடியாக உயர்வு.

கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 8.28 லட்சமாக உயர்வு.

இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 1.68 கோடியானது.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,03,242 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,281 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,30,564 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 109 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 6,948 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,870 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 3,43,930 பேர் குணமடைந்துள்ளனர்.

* டி-20 கிரிக்கெட்டில் பிராவோ படைத்த புதிய உலக சாதனை:

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ட்டுவைன் பிராவா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

* சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் அதிகரித்து 84.82 ரூபாய்க்கும், டீசல் விலை மாற்றம் இல்லாமல் 78.86 ரூபாய்க்கும் விற்பனை.

* ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்திற்கு வரும் ஆக.31 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.

ஓணம் பண்டிகையை கோவை மாவட்ட மக்கள் தனிநபர் இடைவெளியுடன் பாதுகாப்போடு கொண்டாடுங்கள்- மாவட்ட ஆட்சியர் ராசாமணி.

* இன்று 41 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்’:

41 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காணொலியில் நடக்கிறது.

மாநில நிதியமைச்சர்களுடன் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூரும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

* உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார் : பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தவர்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் உடல்நலக்குறைவால் காலமானார். திருச்சி தனியார் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. சட்ட ஆணைய தலைவராகவும் முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இருந்தவர் ஏ.ஆர்.லட்சுமணன்.

சில தினங்களுக்கு முன்னதாக  ஏ.ஆர்.லட்சுமணனின் மனைவி மீனாட்சி ஆச்சி உடல்நலக்குறைவு காரணமாக காரைக்குடியில் மரணமடைந்தார். அவரது உடல் தேவக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்குகள் நடந்தது. இந்நிலையில் இன்று காலை திருச்சி தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு இருந்த ஏ.ஆர். லட்சுமணன்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் தேவக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.

* கடலூரில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

ரூ.32.16 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்நாட்டி, தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

* தஞ்சாவூர்: திருவிடைமருதூர் அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் படுகொலை:

வண்ணக்குடி பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்.

உறவுக்காரப் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் திருமணம் செய்வதற்காக பெண் கேட்டுள்ளார்.

பெண் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த நவீன் என்பவர், கல்யாணசுந்தரத்தை கத்தியால் குத்தினார்.

படுகாயத்துடன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கல்யாணசுந்தரம் உயிரிழந்தார்.

தப்பி ஓடிய மகேந்திரன் மற்றும் நவீன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

* அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்கலாம்: - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

உச்ச நீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு.

பட்டியலின பிரிவில் உள்ள அருந்ததியினர் சமூகத்தினருக்கு 3% உள் இட ஒதுக்கீடு திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.

* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுடன் சட்டப்பேரவை சபாநாயகர் காணொலி காட்சி மூலமாக விசாரணை.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்களில் முதல்கட்டமாக இருவரிடம் விசாரணை.
எம்எல்ஏக்கள் பாண்டியராஜன், நட்ராஜ் ஆகியோரிடம் சபாநாயகர் தனபால் விசாரணை.

* சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறப்பது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு.

* நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும்.

ஆந்திரா, தெலங்கானா, கேரளா, ஒடிசா ஆகிய மாநில முதலமைச்சர்களுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடிதம்.
நாடு முழுவதும் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

* பெங்களூரு நகரில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.

அண்மையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.

அதன் அடிப்படையில் பெங்களூரு நகரில் விசாரணை. பெங்களூரு நகரில் போதைப் பொருட்கள் பதுக்கி வைப்பு என டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல்.

இன்று பெங்களூரில் நடந்த சோதனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் சிக்கியது. ரிஜேஷ் ரவீந்திரா, முகமது அணூப், அணிகா ஆகிய 3 பேர் கைது.

* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 18 குவாரி டெண்டர்கள் ரத்து- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

* கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு:

இ-பாஸ் முறை இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும்.

மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் விதமாகவே தேர்வுகள் ரத்து.

கடலூரில் நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது.

கடலூரில் 39 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன - முதலமைச்சர் பழனிசாமி

* நீட் தேர்வுக்கு எதிராக, நாளை தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - கே.எஸ். அழகிரி

* அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீட்டில் மாநில அரசுகளுக்கு அதிகாரம் என்ற தீர்ப்புக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்பு.

அடித்தட்டு மக்களின் வாழ்வில் வளம் சேர்க்க வழிவகுத்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்.

* உள் ஒதுக்கீடு தீர்ப்பு திமுகவின் சமூகநீதிக் கொள்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி - ஸ்டாலின்.

அடக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதியை நிலைநாட்டியுள்ள உச்சநீதிமன்றத்திற்கு நன்றி - ஸ்டாலின்.

* அருந்ததியருக்கான உள்ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், மாநில அரசுகளுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை விசிக  வரவேற்கிறது. இது சமூகநீதிப் போராளிகளுக்குக் கிட்டிய வெற்றி- விசிக தலைவர் திருமாவளவன்.

* மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க முடியாது - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.

மொஹரம் ஊர்வலத்தை அனுமதித்தால் குழப்பம் உருவாகும்.
கொரோனா பரவலுக்கு குறிப்பிட்ட மதத்தை குற்றம் சாட்டும் நிலை ஏற்படும் எனவும் கருத்து. - உச்சநீதிமன்றம்.

* புதுச்சேரியில் 32 பகுதிகளில் வரும் 31ம் தேதி முதல் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு - மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவு.

* ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்ட் 31ல் சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - சென்னை ஆட்சியர்

* நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை எழுத மாணவர்கள் விரும்புகிறார்கள்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.

நீட் தேர்வெழுத 10 லட்சம் பேர் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்துள்ளனர்.
ஜேஇஇ தேர்வு எழுத 7.5 லட்சம் பேர் ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்துள்ளனர்.

* நாகையில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

கொரோனா தடுப்பு - முதலமைச்சர் விளக்கம்

நாளொன்றுக்கு 70 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன - முதலமைச்சர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது.

வீடு வீடாகச் சென்று காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

வருவாய், காவல், உள்ளாட்சி துறைகள் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்கிறது.

* டிஜிட்டல் வழி கல்வியை நோக்கி பயணிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்.

அனைத்து பாதுகாப்புகளும் உறுதிப்படுத்தப்பட்ட பிறகே ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டன - மத்திய அரசு.

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கு ஆகஸ்ட் 31க்கு ஒத்திவைப்பு.

* நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

* சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28 - ந் தேதி திறக்கப்படும்-துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு.

உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி செப்.18ந் தேதி திறக்கப்படும்.

* இ.பாஸ் - மேலும் தளர்வுகள் அறிவிப்பு:

பிற மாநிலங்களில் இருந்து வணிக ரீதியாக தமிழகம் வருவோருக்கு உடனடி இ.பாஸ் வழங்கப்படும்.

தமிழகத்திற்கு வந்த நாளிலிருந்து 3 நாட்களுக்குள் புறப்படுவதாக இருந்தால் குவாரண்டைன் கிடையாது.

தொழில்துறையினர், ஐ.டி ஊழியர்கள், திரைத்துறையினர், சட்டப்பணி களுக்காக வருவோருக்கு இவை பொருந்தும்.

பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்து 72 மணி நேரத்திற்குள் திரும்புவோருக்கு குவாரண்டைன் கிடையாது: தமிழக அரசு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages