அக்னிப்புரட்சி இன்றைய (29.08.2020) முக்கிய செய்திகள்.
* உலக அளவில் கொரோனாவிற்கு 2.48 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் 1.72 கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
உலக அளவில் கொரோனாவிற்கு 8.40 லட்சம் பேர் உயிரிழப்பு.
அமெரிக்காவில் கொரோனாவிற்கு 1.85 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 76,472 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த பாதிப்பு 34.63 லட்சமாக உயர்வு.
இந்தியாவில் ஒரேநாளில் 1,021 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 62,550ஆக உயர்வு.
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7.52 லட்சமாக உயர்வு.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 6,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,15,590 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 1,285 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,33,173 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 87 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 7,137 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 6.045 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 3,55,727 பேர் குணமடைந்துள்ளனர்.
* நாகை: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில் கொரோனா சூழல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
பக்தர்கள் வருகையை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லைகளில் 21 சோதனை சாவடிகள் அமைத்து 1,100 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
* சென்னையில் இன்று விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.91க்கும், டீசல் விலை ரூ.78.86க்கும் விற்பனை.
* Black Panther புகழ் ஹாலிவுட் நடிகர் Chadwick Boseman காலமானார்; அவருக்கு வயது 43. கடந்த 4 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழப்பு.
* லாக்டவுன் மீண்டும் நீட்டிக்கப்படுமா - தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஆலோசனை.
மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
பிற்பகலில் சுகாதாரத்துறை நிபுணர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவார்.
ஆலோசனைக்குப் பிறகு செப்டம்பர் மாதத்திற்கான தளர்வுகளை முதல்வர் அறிவிப்பார்.
* சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா துபாயிலிருந்து திடீரென இந்தியா திரும்பினார்.
தனிப்பட்ட காரணத்துக்காக இந்தியா திரும்பி உள்ளதாக விளக்கம்.
* தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருது.
காணொலி மூலம் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
* செப்டம்பர் 19 முதல் 27 ஆம் தேதி வரை ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெறும்.
கொரோனா பரவல் காரணமாக பிரம்மோற்சவ சாமி ஊர்வலம் கோயில் மாட வீதிகளில் நடைபெறாது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுப்பா ரெட்டி தகவல்.
*மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரின் உடல் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்திற்கு புறப்பட்டது.
காமராஜர் அரங்கத்தில் தலைவர்கள் அஞ்சலிக்குப் பிறகு சாலைமார்க்கமாக வசந்தகுமார் உடல் கொண்டு செல்லப்பட்டது.
வசந்தகுமார் ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
வசந்தகுமாரின் மனைவி, மகன்கள், மகள் உள்ளிட்ட உறவினர்களும் உடன் பயணம் செய்கின்றனர்.
வசந்தகுமார் உடல் நாளை சொந்த ஊரில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
* எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு வரும் 30ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்:
gct.ac.in, tn.mbamca.com ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
* சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா:
ஏற்கனவே அணியில், 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு வீரருக்கு தொற்று உறுதி.
* தஞ்சை அருகே வங்கி முன்பு தீக்குளித்த இளைஞர் மரணம்.
தஞ்சை அருகே உள்ள வல்லத்தில் ஆனந்த் என்ற இளைஞர் 27ம் தேதி தீக்குளிப்பு.
வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்வதாக அதிகாரிகள் மிரட்டல் என புகார்.
அதிகாரிகள் மிரட்டுவதாக கூறி வங்கி முன் தீக்குளித்ததால் படுகாயம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்த் சிகிச்சை பலனின்றி மரணம்.
* கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பருவத் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
* எஸ்.ஐ. தேர்வில் பண மதிப்பிழப்பு குறித்த கேள்விக்கு 0.5 மதிப்பெண் வழங்க வேண்டும்:
தவறான விடைகளின் அடிப்படையில் வெளியான கீ ஆன்சர் செல்லாதது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
*கொரோனா பாதித்த ஐபிஎல் வீரர்கள் 2 பேர் உட்பட 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்:
கொரோனா உறுதி செய்யப்பட்ட அனைவருமே எந்தவித அறிகுறிகளும் இல்லாதவர்கள்.
துபாய் சென்றதில் இருந்து ஆக.20 - 28 வரை 1,988 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. - பிசிசிஐ.
*மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வு குறித்து முக்கிய ஆலோசனை.
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்பு என தகவல்.
காலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை.
*சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், செப்டம்பர் 4ம் தேதி நேரில் ஆஜராக ஆணை. மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபுவும் நேரில் ஆஜராக உத்தரவு.
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை பழிவாங்க கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக புகார்
இடமாற்றம் செய்தவர்களை மீண்டும் ஏற்கனவே பணியாற்றிய இடத்திற்கு மாற்றாததால் நீதிமன்றம் நடவடிக்கை.
* கடலூர்; சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆராய்ச்சிப் படிப்பிற்கான (Ph.D. and M.Phil.) இணைய வழி விண்ணப்ப பதிவு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30, 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழக இணைய தளம் (www.annamalaiuniversity.ac.in) மூலம் பதிவு செய்யலாம்- பதிவாளர் ஞானதேவன்.
* வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றப்பட்டது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றப்பட்டது.
கொரோனா தொற்றின் ஊரடங்கு காரணமாக பத்தர்களின்றி பேராலய பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
* சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நேரடி விசாரணை.
முதல் கட்டமாக இரு நீதிபதிகள் அடங்கிய ஆறு அமர்வு மட்டும் நேரடி விசாரணை செய்யும்
என்று அறிவிப்பு.
தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.
* தமிழக மாநில பாஜக துணை தலைவராக அண்ணாமலை ஐபிஎஸ் நியமனம்-மாநில தலைவர் எல்.முருகன் அறிவிப்பு.
அண்மையில் டெல்லி சென்று முக்கிய தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார் அண்ணாமலை.
* உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்ததாக பிரசாந்த் பூஷன் மீதான வழக்கில் ஆக.31ல் தண்டனை விவரம்.
வழக்கில் குற்றவாளி என அறிவிக் கப்பட்ட பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.
* தமிழத்தில் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.
கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரண் குமார் ஜடாவத் வேளாண்மைத்துறை துணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் கோவை மாநகராட்சி பள்ளிகளில் மூன்றாம் மொழி குறித்த பிரச்னையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி துணை ஆணையர் குமரவேல் பாண்டியன் கோவை மாநகராட்சி ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பழனி கோவில் நிர்வாக அதிகாரி ஜெயசந்திரபானு ரெட்டி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment