காவிரி உபரி நீர் ஒகேனக்கல்லிருந்து தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மடம் கிராமத்திற்கு கொண்டுவந்து அங்கிருந்து தருமபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து ஏரிகளையும் நிரப்பும் திட்டம் தேவை - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

காவிரி உபரி நீர் ஒகேனக்கல்லிருந்து தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மடம் கிராமத்திற்கு கொண்டுவந்து அங்கிருந்து தருமபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து ஏரிகளையும் நிரப்பும் திட்டம் தேவை - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

காவிரி உபரி நீர் ஒகேனக்கல்லிருந்து தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மடம் கிராமத்திற்கு கொண்டுவந்து அங்கிருந்து தருமபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து ஏரிகளையும் நிரப்பும் திட்டம் தேவை -  பாமக தலைவர் ஜி.கே.மணி

நடந்தாய் வாழி காவேரி ...காவிரி உபரி நீர் ஒகேனக்கல்லிருந்து தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மடம் கிராமத்திற்கு கொண்டுவந்து அங்கிருந்து தருமபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து ஏரிகளையும் நிரப்பும் திட்டம் மற்றும் மேட்டூர் அணை உபரி நீர் சேலம் மாவட்டத்தில் கோனூர் கிராமத்திலிருந்து தலைவாசல் வரை சரபங்கா நதி, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி வழியாக அனைத்து ஏரிகளையும் நிரப்பும் திட்டம்ஆகிய உபரிநீர்த் திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் நீர்ப்பாசனத் திட்டங்கள் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.                 
    
கர்நாடக மாநில கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்), கபினி, நுகு அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழ்நாடு எல்லை பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கிருந்து மேட்டூர் அணை சென்று அணை மளமளவென உயர்ந்து வருகிறது. இதே போல் கடந்த ஆண்டு 2019ல் 3 முறை மேட்டூர் அணை நிரம்பி தண்ணீர் கடலுக்கு வீணாகச் சென்றது. அதற்குமுன் 2018ல் மேட்டூர் அணை நிரம்பி தண்ணீர் கடலுக்கு வீணாகச் சென்றது. பல ஆண்டுகள் தண்ணீர் கடலுக்கு வீணாசக் சென்றுள்ளது. தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சினை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடைமடை மாநிலம், ஒரு சொட்டு தண்ணீர் வீணாகமல் சேமிக்க வேண்டும்.           
       தருமபுரி மாவட்டம் விவசாயத்தையே நம்பியிருக்கின்ற மிகவும் வறட்சியான மாவட்டம். ஒகேனக்கலிலிருந்து தருமபுரி மாவட்டம் முழுவதுமுள்ள ஏரிகளை நிரப்ப வேண்டி 10 இலட்சம் கையெழுத்து இயக்கத்தை மருத்துவர் அன்புமணி M.P அவர்கள் தலைமையில் நடத்தி, அறிவிப்பு செய்த திட்டம். ஒகேனக்கல்  வழியாக வீணாகச் செல்லும் தண்ணீரை ஒகேனக்கல்லிருந்து தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்து மடம் கிராமத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்து தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஏரிகளையும் திறப்பும் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.       
      மேட்டூர் அணை உபநீர்த் திட்டம் நிறைவேற்ற வேண்டி மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் மாபெரும் போராட்டமும் மருத்துவர் அன்பு மணி M.P அவர்கள் தலைமையில் பரப்புரை பயணமும் நடத்தப்பட்டது.சட்டமன்றத்தில் வாதாடி முழு அளவிலான திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது. எனவே மேட்டூர் அணை உபரிநீர்த் திட்டம் அணையை ஒட்டியுள்ள கோனூர் கிராமத்தின் ஏரிகள் நிரப்பி மேச்சேரி ஒன்றியம் வழியாக ஓமலூர் சரபங்கா நதி, சேலம் திருமணிமுத்தாறு. ஆத்தூர் வசிஷ்ட நதி வழியாக மாவட்டத்தின் அனைத்து ஏரிகளையும் நிரப்பும் திட்டம் முழு அளவில் நிறைவேற்றப்பட வேண்டும்.  இதேபோல் தமிழ்நாடு முழுவதும் நிலுவையிலுள்ள பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages