சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனை.
அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி கே.பி. அன்பழகன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.சி. வீரமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்பு.
தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமாரின் அறையில் ஆலோசனை.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மூத்த அமைச்சர்கள் சென்றனர்.
தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்திய நிலையில் முதலமைச்சரை சந்திக்க சென்றனர்.
தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை முடிந்த பிறகு முதலமைச்சரை சந்திக்க அமைச்சர்கள் புறப்பட்டனர்.
எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.பி. அன்பழகன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.சி. வீரமணி, பெஞ்சமின் ஆகியோரும் முதல்வரை சந்திக்கின்றனர்.
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருடன் அமைச்சர்கள் 2 முறை நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவு.
No comments:
Post a Comment