உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் சட்ட ஆணைய முன்னாள் தலைவருமான ஏ.ஆர்.இலட்சுமணன் அவர்கள் மறைவுக்கு - பாமக தலைவர் ஜி.கே.மணி ஆழ்ந்த இரங்கல்
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் சட்ட ஆணையத்தின் தலைவராக செயல்பட்டவருமான நீதியரசர் ஏ.ஆர்.இலட்சுமணன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். உச்சநீதிமன்றத்திலும் சென்னை, கேரளா, ஆந்திரா, இராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களிலும் நீதிபதியாக இருந்தபோது வரலாற்றில் நிலைத்திருக்கும் தீர்ப்புகளை வழங்கிய பெருமைக்குரியவர்.
மருத்துவர் அய்யா அவர்கள்மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர். நாங்கள் அழைத்தபோது தயங்காமல் வருகைதந்து பொங்குதமிழ் பண்ணிசை மணிமன்ற நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர். எனது இல்ல நிகழ்ச்சிக்கும் வருகை தந்தவர். கைபேசியில் தொடர்புகொண்டு பேசும்போதெல்லாம் மிகுந்த அன்போடு பேசும் உயர்ந்த பண்பாளர். நகரத்தார் சமுதாய அமைப்பின் தலைவராகவும் இருந்தவர். இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது துணைவியார் இறந்த துயரம் மறையாத முன்பே இன்று அவரும் இறந்தது குடும்பத்திற்கு பேரிழப்பாகும்.அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மகன் வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் அவர்களிடம் தொடர்புகொண்டு துக்கம் விசாரித்து அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தோம்.
No comments:
Post a Comment