திருவாரூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது முதல்வர் விளக்கம்.
கேள்வி: பாஜக தலைமையில் கூட்டணி என சொல்லப்படுகிறதே?:
முதல்வர்: தேர்தல் வரட்டும், கூட்டணியில் யார் என்பதே இன்னும் முடிவாகவில்லை. தேர்தல் வரும்போதும் தான் கூட்டணியும், தலைமையும் முடிவாகும்.
திருவாரூரில் 460 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளன.
தினமும் சராசரியாக 400 கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 41,705 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளன.
நடமாடும் மருத்துவக் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
திருவாரூரில், அரசின் நடவடிக்கையால் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது.
விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவாரூர் மாவட்டத்தில் 452 குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி.
No comments:
Post a Comment