இந்தியாவில் பதற்றத்தை உருவாக்கி, அமைதியை சீர்குலைக்க, வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்த பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., சதியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. - Agnipuratchi

இந்தியாவில் பதற்றத்தை உருவாக்கி, அமைதியை சீர்குலைக்க, வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்த பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., சதியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

Share This

இந்தியாவில் பதற்றத்தை உருவாக்கி, அமைதியை சீர்குலைக்க, வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்த பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., சதியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

உ.பி., மாநிலம் லக்னோவில் கலவரத்தை தூண்டும் வகையில், வெளிநாட்டு எண்களில் இருந்து மக்களுக்கு அழைப்புகள் வந்துள்ளன. துபாய் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு எண்களை பயன்படுத்தி அழைப்புகள் செய்யப்பட்டுள்ளன. அதில், கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சை கேட்க முடியும். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர்.

லக்னோ மட்டுமின்றி டில்லியில் உள்ள மக்களுக்கும் கலவரத்தை தூண்டும் வகையில் சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வந்துள்ளன. டில்லி சிறப்புப் பிரிவு போலீசார், தேசத்துரோகம், சதி, நாட்டின் அமைதியான சூழ்நிலையை கெடுப்பது போன்ற பல குற்றச்சாட்டுகளின் கீழ், எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து 12க்கும் மேற்பட்ட எண்களை இடைமறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பதிவு செய்யப்பட்ட வாய்ஸ் கால், வி.ஐ.பி.,க்களின் எண்களில் இருந்து வருவதையும், அனைத்து கால்களிலும் ஒரே மாதிரியான குரல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட குரல் அழைப்பில், ராமர் கோவில் மற்றும் டில்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைப்பது குறித்து குறிப்பிட்ட நபர் பேசுகிறார்.

இதில் பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு தொடர்பு இருப்பதையும், ஆக., 5ம் தேதி ராமர் கோவில் பூமி பூஜையின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததையும் இந்திய உளவு அமைப்பான 'ரா' கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages