அக்னிப்புரட்சி இன்றைய (01.09.2020) முக்கிய செய்திகள்.
* இந்தியாவில் ஒரே நாளில் 69,921 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது:
ஒரே நாளில் தொற்றில் இருந்து 65,081 பேர் குணமடைந்துள்ளனர்; தொற்றால் 819 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7.85 லட்சம் பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.
- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,33,969 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,084 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,36,697 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 96 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 7,418 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 6,031 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 3,74,172 பேர் குணமடைந்துள்ளனர்.
* சென்னையில் 161 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை:
சென்னையில் 161 நாட்களுக்கு பிறகு மாநகர அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி.
* சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டுதலங்கள் மீண்டும் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி
சென்னையில் கிண்டி, வடபழனி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
* Lockdown எனப்படும் ஊரடங்கு உத்தரவு எங்களின் அரசியலை முடக்க ஆளுங்கட்சி செய்த சதி என இதுநாள் வரை சொல்லி வந்த திமுக, இப்போது பொதுமுடக்கத்திலிருந்து ஏராள தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், இனி எதை சொல்லி பிதற்றப்போகிறதோ…?
மு.க.ஸ்டாலின் குறித்து அதிமுகவின் "நமது அம்மா" நாளேடு கடும் விமர்சனம்
* வாட்சப்பில் வருகிறது புதிய அப்டேட் - இனி ஒவ்வொரு 'சாட்'டுக்கும் ஒரு வால்பேப்பர்:
வாட்சப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. தற்போது வாட்சப் பீட்டா பயன்பாட்டின் சோதனையில் இருக்கும் இந்த அப்டேட்டின் மூலம், பயன்பாட்டாளர்கள் தங்களது ஒவ்வொரு தனிப்பட்ட சாட்டுக்கும், தனித்தனியே வால் பேப்பரை வைத்துக் கொள்ள முடியும்.
மேலும் கேலரியில் இருக்கும் புகைப்படங்களையும் தனித்தனியாக மாற்றிக்கொள்ள முடியும்.
அது மட்டுமின்றி டார்க் மோட் (அ) லைட் மோடு என்று ஒவ்வொரு சாட்டுக்கும் தனித் தனியே வைத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழகமெங்கும் 5 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறப்பு!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் அதிகாலை 4 மணிக்கே குவிந்த பக்தர்கள்; காவல்துறையினர் திணறல்
* நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 14 - ம் தேதி தொடங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
* ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் உர விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் வருமான வரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் என தகவல்:
சோமசுந்தரம் என்பவருக்கு சொந்தமான அலுவலகம், வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை.
* டெல்லி: மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்திய பிறகு பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜிக்கு ஆறுதல் கூறினார் பிரதமர்.
* ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு.
ஒரு சவரன் 39 ஆயிரத்து 776 ரூபாய்க்கு விற்பனை.
ஒரு கிராம் தங்கம் ரூ.4,972-க்கு விற்பனை.
* கடன் தவணைத் தொகையை திரும்ப செலுத்த 2 ஆண்டுகள் வரை கூட அவகாசம் கொடுக்க இயலும்
இஎம்ஐ அவகாசத்தை 2 ஆண்டுகள் வரைகூட நீட்டிக்க முடியும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி பதில்.
* வட்டிக்கு வட்டி வசூலிக்கும் ரிசர்வ் வங்கியின் நடைமுறை குறித்து நாளை உரிய முடிவு -உச்சநீதிமன்றம்.
“வட்டிக்கு வட்டி விதிப்பது தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க சிறிது காலம் தேவைப்படுகிறது" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் பொதுக்குழு வரும் 9 ந் தேதி சென்னையில் கூடுகிறது:
பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வுக்கு திமுக பொதுக்குழு கூடுகிறது. வரும் 9ந் தேதி காலை பத்து மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூடுகிறது.
* இந்தியா முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் வருகிற செப்டம்பர் 30 ம் தேதிக்குள் பல்கலைக்கழக இறுதி பருவ தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி.) அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையை விடுத்துள்ளது.
* அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையில் 10 சதவீதத்தை உடனே கட்ட வேண்டும்- தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 92,000 கோடி ரூபாயை தவணை முறையில் செலுத்த அனுமதிக்க கோரி வழக்கில் தீர்ப்பு.
மீதி தொகையை செலுத்த 10 வருடம் அவகாசம் வழங்கியது, உச்ச நீதிமன்றம்.
* சென்னை: அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.
சென்னை போலீசாரின் பரிந்துரையை ஏற்று வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு.
* வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு:
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழைக்கும்.
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு - வானிலை மையம்.
* இந்திய சீன எல்லை பிரச்சினை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை: டெல்லியில் நடைபெற்று வரும் ஆலோசனையில் உயர் அதிகாரிகள் பங்கேற்பு.
* இங்கிலாந்தில் பல மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிவது கட்டாயம் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் முதற் கட்டமாக 40 சதவீத பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் எனறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
* ஊர்க்காவல் படையினர் சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.
* மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
இரவு 9 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும்.
பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்து சேவை அதிகரிக்கப்படும் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
செப். 15ம் தேதி வரை பழைய ரூ.1,000 பஸ் பாஸ் செல்லுபடியாகும் - அமைச்சர் விஜயபாஸ்கர்.
* அரசு மரியாதையுடன் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நல்லடக்கம்.
ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி.
மலைவாழ் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி பெறலாம். மாணவர்கள் ஆபாச இணையதளங்களுக்குள் நுழைய முடியாது என்பதை உறுதி செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.
ஆன்லைன் வகுப்பு விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க அமைப்பு ஏற்படுத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.
* சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.
தேர்வர்கள் upsconline.nic.in தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
* பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி கிராமத்தில் இறந்த தந்தையின் சடலத்தை, அமர்ந்த நிலையில் வீட்டுக்குள்ளே வைத்து சமாதி கட்டிய மகனால் பரபரப்பு.
சாமியார் ஒருவரின் பேச்சைக் கேட்டு தமது தந்தையின் சடலத்தை வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்த நிலையில் சமாதி வைத்ததாக மகன் தகவல். கிராம மக்கள் தந்த தகவலின் பேரில் போலீசார் வந்து சடலத்தை மீட்டு இடுகாட்டில் வைத்து எரியூட்டினர்.
* தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் (TC) இல்லாவிட்டால், அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கடிதம்.
கட்டண பாக்கியால், பல பள்ளிகள் மாற்றுச் சான்று வழங்காமல் உள்ள நிலையில், அவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வருவதால் எதிர்ப்பு.
* திருவள்ளூரில் இயங்கிவரும் MRF நிறுவனத்தில் பணிபுரிய 1000 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
* தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி கூடுகிறது. கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது என தகவல்.
* இடி தாக்கி 2 பெண்கள் பலி:
கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே சித்தமல்லி கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இடி தாக்கியதில் ஆனந்தி (35), மரிய நட்சத்திரம் (60) ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மேலும் 2 பெண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
* நாகூர் தர்கா நாளை முதல் திறப்பு - பிரார்த்தனை மற்றும் தொழுகை நடத்த அனுமதி.
* தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் இனி தனிமைப்படுத்துதல் முறை கிடையாது.
வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்படும்- சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
* பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு செப்.15க்கு பிறகு நடைபெறும்.
இறுதி பருவத்தேர்வுக்கான விரிவான அட்டவணை, தேர்வு மையங்களில் விரைவில் விவரம் வெளியிடப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்.
இறுதியாண்டு தேர்வுகளை மாணவர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்.
No comments:
Post a Comment