அக்னிப்புரட்சி இன்றைய (03.09.2020) முக்கிய செய்திகள்.
* உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.61 கோடியாக உயர்வு.
உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவில் இருந்து 1.71 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 8.66 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.
* இந்தியாவில் கொரோனா தொற்று:
பாதிப்பு எண்ணிக்கை 37,69,523லிருந்து 38,53,406 ஆக அதிகரிப்பு
குணமடைந்தோர் எண்ணிக்கை 29.01 லட்சத்திலிருந்து 29.70 லட்சமாக உயர்வு
உயிரிழந்தோர் எண்ணிக்கை 66,333லிருந்து 67,376 ஆக அதிகரிப்பு- மத்திய சுகாதார அமைச்சகம்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,851 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 968 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,38,724 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 92 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 7,608 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 6,110 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 3,86,173 பேர் குணமடைந்துள்ளனர்
* பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்:
பிரதமர் நரேந்திர மோடியின் narendramodi_in என்ற தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கினர். பிட்காயின் மூலம் பணம் செலுத்துபவர்கள் மோடியின் கணக்கை முடக்கியதை ட்விட்டர் உறுதிப்படுத்தியுள்ளது.
* வரைவு வாக்காளர் பட்டியல் - தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை:
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக, தலைமைச் செயலகத்திலிருந்து இன்று மாலை 3 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சியில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை.
* சென்னையில் விலைமாற்றம் இல்லாமல் பெட்ரோல் லிட்டர் 85.04 ரூபாய்க்கும், டீசல் 15 காசுகள் குறைந்து 78.71 ரூபாய்க்கும் விற்பனை.
* விமானத்தின் இறக்கைப் பகுதியில் அமர்ந்து காற்று வாங்கிய பெண்:
உக்ரைனில் விமானத்தின் அவசர கால கதவை திறந்த பெண் ஒருவர், இறக்கைப் பகுதியில் அமர்ந்து காற்று வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
துருக்கியில் இருந்து போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த விமானத்தில், பயணிகள் அனைவரும் கீழே இறங்கும் சமயத்தில், ஒரு பெண் மட்டும் இறக்கையின் மீது சாவகாசமாக அமர்ந்து இருந்ததைக் கண்டு விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அந்த பெண்ணை அங்கிருந்து வெளியேற்றி அதிகாரிகள் விசாரித்தபோது, விமானத்திற்குள் புழுக்கமாக இருந்ததால் காற்று வாங்க அங்கு சென்றதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்ணிற்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
* ரயில்வே வாரியத்துக்கு முதல்முறையாக சி.இ.ஓ நியமனத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மறுசீரமைப்பு நடவடிக்கையாக ரயில்வே வாரிய தலைவரான வி.கே.யாதவை சி.இ.ஓ வாக மத்திய அரசு நியமித்துள்ளது.
* சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,522 கன அடியில் இருந்து 17,937 கன அடியாக அதிகரிப்பு:
டெல்டா பாசனத்தேவைக்காக காவிரியில் 9,000 கன அடி, கிழக்கு-மேற்கு கால்வாயில் 800 கன அடி நீர் திறப்பு.
நீர் மட்டம் - 89.50 அடி.
நீர் இருப்பு - 52.08 டி.எம்.சி.
* திமுக மாவட்ட செயலாளர்களுடன் காணொலியில் இன்று காலை 10.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
செப்டம்பர் 9ஆம் தேதி திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வாக உள்ள நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை.
* புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் தலைவர் சுப்பிரமணியன்(70) கொரோனாவால் உயிரிழப்பு.
* தேமுதிக எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த நிலையில் கட்சியின் தலைவரை காட்டி ஏலம் தொடங்கியதாக தினமலர் நேற்று கருத்துரு வெளியிட்டு இருந்தது!
அதற்கு பதிலடியாக தேமுதிக தலைவரை கலைஞர் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குவது போல கருத்துருவை அந்த கட்சியின் முன்னணி தலைவர் LK சுதிஷ் வெளியிட்டு சர்ச்சை
* ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 272 குறைந்தது.
ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 39,016-க்கு விற்பனை.
வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ.1,600 சரிவு.
* கொரோனா பரவலை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது-சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்.
தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கு முடித்து வைப்பு.
* தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 325 ஆசிரியர்கள் தேர்வு.
வரும் ஏழாம் தேதி மாவட்ட தலைநகரங்களில் விருது வழங்க உத்தரவு.
* ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கில் கீழ்ப்பாக்கம் காவல் உதவி ஆணையர் உள்பட 6 பேருக்கு சிபிசிஐடி சம்மன்:
வரும் 7ஆம் தேதி எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு.
* சாத்தான்குளம் வழக்கு - காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய வழக்கில் சிபிஐ பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
* செப்டம்பர் 5ம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணங்களை செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்ற அண்ணா பல்கலைக்கழக உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை.
* சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை நேரம் குறைப்பு:
சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் - மெட்ரோ ரயில் நிர்வாகம்.
மெட்ரோ ரயில் நிறுத்தம் நேரமானது 20 நொடிகளில் இருந்து 50 நொடிகளாக மாற்றியமைப்பு - மெட்ரோ ரயில் நிர்வாகம்.
மெட்ரோ பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்.
*பல்கலைக்கழகங்கள் விருப்பப்பட்டால் முதலாம், 2ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம்: - உச்சநீதிமன்றம்.
முதலாம், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பு தொடர்ந்த மனு தள்ளுபடி.
* கோவை மாநகராட்சி பகுதியில் வசிப்பவர்களுக்கு கொரோனா வெருவித் தொற்று அறிகுறிகளை கண்டறிவதற்கான பரிசோதனை செய்ய களப்பணியாளர்கள் தேவை
நாளொன்றுக்கு ஊக்கத்தொகையாக ₹500 வழங்கப்படும் ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்
* பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில் விவசாயிகள் அல்லாத 1,700 பேர் முறைகேடு:
1,700 பேர் திட்ட தொகையான ரூ.6 ஆயிரத்தில் இதுவரை ரூ.4 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.68 லட்சம் பெற்றுள்ளனர்; ரூ.68 லட்சத்தில் இதுவரை ரூ.11 லட்சம் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.
* ஊரடங்கிலும் 52,489 காசநோயாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் காசநோயாளி களுக்கு சத்தான உணவு கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது.
- அமைச்சர் விஜயபாஸ்கர்.
* சென்னை: மந்தவெளி அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபர் பழனியப்பன் என்பவரின் மகள் ஓட்டிவந்த கார் மோதியதில் தூங்கிக்கொண்டிருந்த காவலாளி உயிரிழப்பு.
* புதுச்சேரியில் மேலும் 431 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 15,588 ஆக அதிகரிப்பு.
கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 10,279 பேர் குணமடைந்துள்ள நிலையில், தொற்றால் 260 பேர் உயிரிழந்துள்ளனர்.
* மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களுக்கும், உதவியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும்:
பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கு முடித்து வைப்பு.
* சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.
13 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்து
செயல்படுவது என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு.
வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள
பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஸ்டாலின் ஆலோசனை.
பல்வேறு விவகாரங்கள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன், ஒன்றரை மணிநேரம் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.
* உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.81 லட்சம் நிதியுதவி - முதல்வர் பழனிசாமி:
துயர சம்பவங்களில் உயிரிழந்த 27 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.81 லட்சம் நிதியுதவி - முதல்வர் பழனிசாமி.
தமிழகம் முழுவதும் பல்வேறு துயர நிகழ்வுகளில் உயிரிழந்த 27 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாயை முதலமைச்சரின் பொதும் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவியாக வழங்கிட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
* எதிர்காலத்தில் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன்"
தேசிய கொடி அவமதிப்பு தொடர்பான முன் ஜாமின் வழக்கில் வருத்தம் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் மனு தாக்கல்.
* முன் ஜாமின் வழக்கு விசாரணை செப்டம்பர் 7ஆம் தேதி மீண்டும் தள்ளிவைப்பு.
அதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு.
* திருப்பதி ஏழுமலையான் கோயில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்:
- பாஜக எம்.பி.சுப்பிரமணியன் சுவாமி ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், 5 ஆண்டு கால திருப்பதி கோயில் கணக்கை தலைமை கணக்கு கண்காணிப்பாளர் தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்.
* தட்டச்சு பள்ளிகளை திறக்க அனுமதி கோரிய வழக்குகள் முடித்து வைப்பு:
செப்டம்பர் 21ஆம் தேதி முதல் தட்டச்சு பள்ளிகளை திறக்கலாம் என்ற அரசின் விளக்கத்தை ஏற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்துவைப்பு.
* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு:
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
* வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது:
கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. - மத்திய அரசு.
எல்லா துறைகளும் பாதிக்கப்பட்டாலும் ஒவ்வொரு துறையின் பாதிப்பும் வெவ்வேறாக உள்ளதால் பொருளாதாரத்தை வலுவிழக்கும் வகையில் முடிவெடுக்க முடியாது:
- மத்திய அரசு.
* இ.எம்.ஐ.-க்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்.
வட்டிக்கு வட்டி விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
பேரிடர் மேலாண்மை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
எல்லா துறையும் பாதிக்கப்பட்டுள்ளது எனில், அதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?-உச்சநீதிமன்றம்.
* இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிட கூடாது?
பொறுப்பில் இருப்பவர்களின் விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதில் என்ன தவறு உள்ளது?
நிர்வாகிகளின் விவரங்களை
கோவில் அறிவிப்பு பலகையில் ஏன் வெளியிட கூடாது?
செப்டம்பர் 17 ஆம் தேதிக்குள் பதிலளிக்க இந்து அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* கடலூர் ‘தினமலர்’ பத்திரிக்கை அலுவலகம் மீது தாக்குதல்:
கடலூர் சீத்தாராம் நகரில் உள்ள ‘தினமலர்” பத்திரிக்கை அலுவலகம் மீது தேமுதிக கொடி கட்டிய இரண்டு வாகனத்தில் வந்த நபர்கள் கல்வீசியும் பொருட்கள் மீதும் தாக்குதல் அலுவலக பொருட்கள் சேதம்.
* திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு.
வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் 4 மணியுடன் நிறைவடைந்த நிலையில், இருவரும் தேர்வு.
* மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம்
அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆகஸ்ட் 31-க்குள் மருத்துவ மேற்படிப்புக்கு மாணவர் சேர்க்கையை முடிக்க உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு
மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி தமிழக அரசுக்கு உத்தரவு
அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் - உயர்நீதிமன்றம்
* மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.
தமிழகம் முழுவதும், மணல் கடத்தல் வழக்குகளில் முன்ஜாமீன் கோரிய 40 பேரின் மனுக்கள் தள்ளுபடி.
மணல் கடத்தல்காரர்களால் தான் நிலத்தடி நீர் ஆதாரங்களும் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது- நீதிபதி.
முன் ஜாமீன் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுகிறது- நீதிபதி.
ஒவ்வொரு நாளும் குறைந்தது மணல் கடத்தல் தொடர்பான 15 முன்ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வருகிறது- நீதிபதி.
* ஆன் லைனில் முன்பதிவு செய்தால் மட்டுமே சுவாமி தரிசனம்-திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் அறிவிப்பு.
6 ஆம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது - 4 ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்குகிறது.
ஆன்லைன் முன் பதிவின்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.
தரிசனத்திற்கான அனுமதி சீட்டுடன் ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
No comments:
Post a Comment