அக்னிப்புரட்சி இன்றைய (06.09.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (06.09.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (06.09.2020) முக்கிய செய்திகள்.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,63,480 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 955 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,41,654 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 88 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 7,836 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,820 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 4,04,186 பேர் குணமடைந்துள்ளனர்.

* சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.85.04 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.78.58 க்கும் விற்பனை.

* கிசான் நிதி திட்ட மோசடி : கடலூர் மாவட்டத்தில் போலி பயனாளிகள் வங்கி கணக்கில் இருந்து மேலும் ரூ.1.4 கோடி பறிமுதல்.

போலி பயனாளிகளிடம் இருந்து இதுவரை ரூ.5.6 கோடி பறிமுதல்.
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டரில் 4.3 ஆக பதிவு.

* கடினமான புரிந்துக்கொள்ள முடியாத வரி ஜிஎஸ்டி:

பாஜகவின் ஜிஎஸ்டி முற்றிலும் வித்தியாசமானது; அமைப்பு சாரா பொருளாதாரத்தின் மீது நடந்த இரண்டாவது பெரிய தாக்குதல் ஜிஎஸ்டி. - ராகுல் காந்தி.

செப்டம்பர் 8-ம் தேதி காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம்:
செப். 14-ல் தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

* 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் நிதியுதவி - முதல்வர் உத்தரவு:
தமிழகத்தில் உடல்நலக்குறைவாலும், பல்வேறு துயர சம்பவங்களிலும் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு.

* புதுச்சேரியில் மேலும் 478 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 17,032 ஆக அதிகரிப்பு.

* கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக இயக்க நிலையில் இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் பேருந்துகளை கவனமாக இயக்க அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்

* எளிதாக தொழில் புரியக்கூடிய இந்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 14வது இடம்
மராட்டியம்-13, கர்நாடகம்-17 & தில்லி -12.
முதல் மூன்று இடங்களில் முறையே ஆந்திரம், உத்திரப் பிரதேசம் & தெலங்கானா உள்ளது. கடைசி மூன்று இடங்களில் வடகிழக்கு மாநிலங்கள், கேரளா மற்றும் புதுச்சேரி பட்டியலிடப்பட்டுள்ளது.

* பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல":
மாணவர்களை எந்த காரணம் கொண்டும் வற்புறுத்தக்கூடாது.

ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு அல்லது மதிப்பெண்களை கணக்கிடுவது கூடாது. பள்ளிக்கல்வி ஆணையர் திட்டவட்ட அறிவிப்பு.

அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கண்காணிக்க ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.

* சென்னை - டெல்லி, சென்னை - சாப்ரா(பீகார்), திருச்சி - ஹவுரா(மேற்கு வங்கம்) இடையே செப். 12 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்:

ரயில்களுக்கான முன்பதிவு செப்.10 காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு.

* செங்கல்பட்டில் 108 ஆம்புலன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து எதிரொலி: தமிழகம் முழுவதும் உள்ள 1,300 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவு.

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவு.

* இளைஞர்களின் எழுச்சி அதிமுக பக்கமே உள்ளது:
2021-ல் நடைபெறும் தர்ம யுத்தத்தில் அதிமுக ஹாட்ரிக் சாதனை படைக்கும்.
தர்ம யுத்தத்தில் அதிமுக ஹாட்ரிக் சாதனை படைக்கும். - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

* தமிழகத்தில் இணையவழி வகுப்பு அட்டவணைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு.
ஆன்லைன் வகுப்பு குறித்த புகார்களை grievencesredressaltnpta@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம்.

* ஆவணக் காப்பக அறிக்கை படி தமிழகத்தில் 2017ல் 4.20 லட்சம் வழக்குகளும், 2018ல் 4.99 லட்சம் வழக்குகளும் பதிவு: கொலை குற்றங்கள் சென்னையில் 11.69%, கோவையில் 47.62% அதிகரிப்பு - ஸ்டாலின்.

* சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதில் அதிமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களாக சென்னை, கோவையை மாற்றியதே அதிமுக அரசின் சாதனை - ஸ்டாலின்.

* பேருந்துகள் இயக்கம்: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்:
வழித்தடங்களில் இருசக்கர வாகனங்கள் அதிகம் இயக்கப்படுவதால் கவனமாக பணிபுரிய வேண்டும்.

நகரில் போக்குவரத்து நெரிசல், வேகத்தடை இருப்பதால் ஓட்டுநர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தல்.
- விரைவு போக்குவரத்து கழகம்.

* '5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு':

கோவை, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு.

கேரளா, கர்நாடக கடல்பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம். - வானிலை மையம்.

* தளர்வுகள் என்பது வாழ்வாதரத்துக்கானது. முக கவசம் அணிவதில் தளர்வு இல்லை.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

பொதுமக்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். காய்ச்சல், வாந்தி அறிகுறி இருந்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆம்புலன்சுகள் 1005 ஏற்கனவே உள்ளன. புதிதாக 500 ஆம்புலன்சுகள் உள்ளன. கொரோனா நோயாளிகளுக்காக நடமாடும் ஆம்புலன்சுகளில் அவசர சிகிச்சை பிரிவு.

* செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் தீ. ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட வாயு கசிவால் தீ விபத்து என தகவல்.

* சென்னை: அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டிகேஎஸ் இளங்கோவன் ஆலோசனை:
செப்டம்பர் 9-ல் நடைபெற உள்ள திமுக பொதுக்குழு குறித்து ஆலோசனை எனத் தகவல்.

* கிசான் திட்ட முறைகேடு - 4 பேரிடம் விசாரணை: பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்ட முறைகேடு தொடர்பாக திருவண்ணாமலையில் சந்தேகத்தின் பேரில் 4 பேரிடன் சிபிசிஐடி விசாரணை.

* அரியர் தேர்வு ரத்து குறித்து தமிழக அரசு உறுதியான முடிவை அறிவித்து, மாணவர்களின் குழப்பத்திற்கு தீர்வு காண வேண்டும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்

* கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ளுமாறு ஹெச்.ராஜா தினமும் எங்களை அறிவுறுத்தி வருகிறார் பாஜகவுடன் தொடர்ந்து சகோதரத்துவம், நட்புடன் இருந்து வருகிறோம். - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

* அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்:

கல்லூரிகளில் தினமும் சேர்க்கப்படும் மாணவர்கள் பட்டியலை கல்லூரி கல்வி இயக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.
- மண்டல இணை இயக்குநர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் சுற்றறிக்கை.

* ஐ.பி.எல் போட்டிகள் செப்.19-ம் தேதி தொடக்கம் - அட்டவணை வெளியீடு

* புகழ்பெற்ற எதநீர் மடாதிபதி கேசவானந்த பாரதி மறைந்தார். அரசியல் தலைவர்கள், ஆர்வலர்கள் இரங்கல்.

விடுதலை அடைந்து 73 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்திய அரசு இன்னும் "மக்களாட்சி" நடைமுறைப்படி செயல்பட்டு வருவதில் மிக முதன்மையான பங்கு இவர் தொடுத்த வழக்கு ஒன்றை சாரும்.

* செப். 30 வரை ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டாம் என உரிமையாளர்கள் முடிவு.

ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களின் கூட்டத்தில் முடிவு.
5 கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages