அக்னிப்புரட்சி இன்றைய 11.09.202) முக்கிய செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய 11.09.202) முக்கிய செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி இன்றைய 11.09.202)
முக்கிய செய்திகள்

* உலகளவில் 2.83 கோடி பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து 2.03 கோடி பேர் குணமடைந்துள்ளனர்; தொற்றால் 9.13 லட்சம் பேர் உயிரிழப்பு.

* இந்தியாவில் ஒரே நாளில் 96,550 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 70,880 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் 1,209 பேர் உயிரிழந்துள்ளனர்- மத்திய சுகாதார அமைச்சகம்.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,91,571 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 987 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,46,593 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 77 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 8,231 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 6,006 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 4,35,422 பேர் குணமடைந்துள்ளனர்.

* சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.84.96 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.78.38 க்கும் விற்பனை.

* புதிய கல்விக் கொள்கை தொடர்பான நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
‘21 ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி' என்ற தலைப்பில் காணொலி மூலம் பிரதமர் உரை.

* தமிழகம், கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக இன்று திருவனந்தபுரத்தில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை.

கேரள குழுவுடன் தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் தலைமையிலான குழு இன்று ஆலோசனை.

* கடலூர்: காட்டுமன்னார்கோவில் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்வு.

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தேன்மொழி(32) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 % மாணவர்களை சேர்க்க அரசு அனுமதி:

அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் கல்லூரிக்கல்வி இயக்ககம் அனுமதியளித்துள்ளது.

கூடுதலாக மாணவர்களை சேர்க்க சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறவும் அறிவுறுத்தல்.

* தமிழகத்திற்கு ரூ.335 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு:

15ஆவது நிதி குழுவின் பரிந்துரைபடி தொகை ஒதுக்கீடு.

மாநிலங்களுக்கு செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய மாதாந்திர வருவாய் பற்றாக்குறை நிதி ஒதுக்கீடு.

14 மாநிலங்களுக்கு 6 ஆயிரத்து 195 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.39,184க்கு விற்பனை.
கிராமுக்கு ரூ.22 குறைந்து ரூ.4,898க்கு விற்பனை.

* நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் - மனுதாரர்.

நீட் தேர்வு தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

* இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.

வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.

செல்போன் நிறுவனத்திற்கு இசையமைப்பு பணிக்காக பெற்ற ரூ.3.47 கோடி ஊதியத்திற்கு வரி செலுத்தவில்லை என புகார்.

* தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் வெளியீடு: சென்னை, மதுரை, சேலம், நெல்லை உள்பட 14 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வை 1,17,990 மாணவர்கள் எழுத உள்ளனர்.

* கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரனை நியமித்த அரசாணைக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம்.
பூர்ணசந்திரன் நியமனம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவு.

* சென்னையில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது:

சங்கரின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த 3 இடங்களை தவிர மேலும் 12 இடங்களில் காயம்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல். சங்கர் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

* புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு வரும் 21ஆம் தேதி முதல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.

தேவுக்கான கால அட்டவணைகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் - பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டாளர்.

* செவிலியர் மீது ஆசிட் வீசிய வழக்கு - 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை’:
நாமக்கல்: எலச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீது ஆசிட் வீசிய வழக்கில் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை.

செவிலியர் விஜயகுமாரி மீது ஆசிட் வீசிய மணிகண்டன், விஜயகுமாருக்கு தண்டனை விதித்தது நாமக்கல் நீதிமன்றம்.

* ரூ.120.23 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.120.23 கோடி மதிப்பில் 43 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி.

* திருப்பதியில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பாத யாத்திரையாக நடந்துவர அனுமதி.

அலிபிரி பாதையில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்து சென்று தரிசிக்கலாம்-திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு.

கொரோனா காரணமாக நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த பாத யாத்திரைக்கு மீண்டும் அனுமதி.

ஸ்ரீவாரிமெட்டு பாதையில் நடைபயணமாக வர தடை நீடிக்கிறது
புரட்டாசி மாதத்தில் தமிழகத்திலிருந்து யாரும் நடைபயணமாக வரவேண்டாம் - தேவஸ்தானம்.

* தேர்தல்களில் போட்டியிடும் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பிறகு குற்றப் பின்னணி விவரங்களை வேட்பாளர் மற்றும் கட்சிகள் வெளியிட வேண்டும் - தேர்தல் ஆணையம்.

4 நாட்களுக்கு முன்பு ஒரு முறையும், 5 மற்றும் 8 ஆவது நாட்களுக்குள் 2 ஆவது முறையும், வாக்குப் பதிவுக்கு 2 நாள் முன்னதாக 3 ஆவது முறையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட வேண்டும் - தேர்தல் ஆணையம்.

* தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு:

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக மகேஸ்வரி நியமனம்.

நில சீர்த்திருத்தத்துறை இயக்குநராக லில்லி, சட்டம் - ஒழுங்கு துணை செயலாளராக அம்ரீத் நியமனம்.

நிதித்துறை சிறப்பு செயலாளராக ரீட்டா ஹாரிஸ், பொதுத்துறை சிறப்பு செயலாளராக வெங்கடேஷ் நியமனம் - தமிழக அரசு.

* விநாயகர் சதுர்த்தியின் போது  கரைக்க முடியாமல் போன விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி கோரிய வழக்கு.

சிலைகளை வைத்தவர்களே எடுத்துச் சென்று அரசு விதிகளை பின்பற்றி கரைத்துக்கொள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

* தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம்.

புதுச்சேரி, கோவா மாநிலங்களையும் தினேஷ் குண்டுராவ் கவனிப்பார் என காங்கிரஸ் அறிவிப்பு.

தெலங்கானா பொ​றுப்பாளராக தமிழக எம்.பி. மாணிக்கம் தா​கூர் நியமனம்.

ஒடிசா மாநில பொறுப்பாளராக செல்லகுமார் எம்.பி. நியமனம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages