அக்னிப்புரட்சி இன்றைய (17.09.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (17.09.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (17.09.2020) முக்கிய செய்திகள்.

* உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது:

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,00,22,236.

உலக நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 9,44,623.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 2,17,76,101.

* இந்தியாவில் கொரோனா தொற்று:
பாதிப்பு எண்ணிக்கை 50,20,359 லிருந்து 51,18,254 ஆக அதிகரிப்பு.

குணமடைந்தோர் எண்ணிக்கை 39.42 லட்சத்திலிருந்து 40.25 லட்சமாக உயர்வு.

உயிரிழப்பு எண்ணிக்கை 82,066 லிருந்து 83,198 ஆக அதிகரிப்பு- மத்திய சுகாதார அமைச்சகம்.

ஒரே நாளில்  97,894  பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 82,719 பேர் குணமடைந்துள்ளனர்; 1,132 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10.09 லட்சம் பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,25,420 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 992 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,52,567 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 59 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 8,718 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,524 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 4,70,192 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழ் திரைப்பட இயக்குனர் பாபு சிவன் காலமானார். உடல் நலக்குறைவால் சிகிச்சை பலன் இன்றி சென்னையில் பாபு சிவன் காலமானார்.

விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கி இருந்தார்  பாபு சிவன்.

* தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:

tnusrbonline.org என்ற இணையதளத்தில் செப்.26 முதல் அக்.26 வரை விண்ணப்பிக்கலாம்; 10,096 பணியிடங்களுக்கு டிசம்பர் 13-ல் எழுத்துத்தேர்வு. - தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம்.

* சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 13 காசுகள் குறைந்து ரூ.84.44 க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 18 காசுகள் குறைந்து ரூ.77.73 க்கும் விற்பனை.

* பிரதமர் நரேந்திர மோடி, 70-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். பாஜகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். மோடிக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

* திராவிடர் கழகத்தை தோற்றுவித்த வரும் பகுத்தறிவு சிந்தனையாளருமான தந்தை பெரியார் பிறந்த நாள் இன்று.

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு திக, திமுக, அதிமுக பாமக உள்பட பல்வேறு கட்சியினர் அவரது சிலை மற்றும் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

* பிரதமர் மோடியின் பிறந்தநாளை யொட்டி தமிழக முதல்வர் பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்து: நல்ல உடல்நலத்துடன் நாட்டிற்கு சேவையாற்ற வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி.

* பெரியாரின் 142வது பிறந்தநாளை யொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.
துரைமுருகன், உதயநி திஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை.

* பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில், பிரதமர் மோடிஜி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

* ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகரில் நடந்து வரும் துப்பாக்கிச்சண்டையில் 3 தீவிரவாதிகள்; பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை.

* மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 14,458 கன அடியாக அதிகரிப்பு:
சேலம்:  மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 12,894 கன அடியில் இருந்து; 14,458 கன அடியாக அதிகரிப்பு.

நீர்மட்டம் - 91.67 அடி.
நீர் இருப்பு - 54.58 டி.எம்.சி.
காவிரி டெல்டா பாசனத்துக்கு 15,000 கன அடி, கிழக்கு - மேற்கு கால்வாயில் விநாடிக்கு 700 கன அடி நீர் திறப்பு.

* தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி 9 மாத குழந்தை உயிரிழப்பு:

கோவை: தொண்டாமுத்தூர் அருகே தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி 9 மாத குழந்தை உயிரிழப்பு.

பாத்திரம் கழுவ வைத்திருந்த தண்ணீர் பக்கெட்டில் குழந்தை தவறி விழுந்ததால் விபரீதம்

* இன்ஜினியரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் 25-ந்தேதி வெளியிடப்படும்:

சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்,
இன்று வெளியிடப்பட வேண்டிய இன்ஜினியரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் 25-ந்தேதி வெளியிடப்படும்-- அமைச்சர் கே.பி.அன்பழகன்.

* பெரியாரின் 142வது பிறந்தநாளை யொட்டி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து முதலமைச்சர் பழனிசாமி மரியாதை:

பெரியார் உருவப்படத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மரியாதை.

* வண்டலூரில் மேம்பாலம் திறப்பு விழா - முதலமைச்சர் பங்கேற்பு:

வண்டலூர் மேம்பாலத்தை; ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி. சென்னை: வண்டலூரில் ரூபாய். 55 கோடி செலவில், 700 மீட்டர் தூரத்திற்கு ஆறு வழிகள் கொண்ட இருவழிபாதை மேம்பாலம் திறக்கப்பட்டது.

2014ல் தொடங்கப்பட்ட பாலம் கட்டுமான பணி தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

சென்னையில் பல்வேறு மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன, விரைவில் பயன்பாட்டுக்கு வரும் - முதலமைச்சர் பழனிசாமி.

* கொரோனா தொற்றால் பல சோதனைகள் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாது: - மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை.
தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை உடனே விடுவிக்கவும்  கோரிக்கை.

* புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை:

* விசிக தலைவர் திருமாவளவனும் புதுச்சேரியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

* தமிழகத்தில் 4 அரசு கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக தடை - தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம்

* தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 5 தென் மாநிலங்களில் IS தீவிரவாதிகள் அதிக அளவில் செயல்பட்டு வருவதாக நடுவண் அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 122 பேரை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கைது செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

* அடுத்தது 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர்கால திருமால் சிலை கள்ளிக்குடியில் கண்டெடுக்கப் பட்டுள்ளது. முப்புரிநூல், சங்கு சக்கரத்தோடு இடைக்காலப் பாண்டியர் கலையமைப்பில் இந்தச் சிலை உள்ளது

மதுரைக்கு அருகில் இரண்டு முக்கியமான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. முதலாவது 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்குக் கல்வெட்டு. செக்கைக் தானமாகக் குடுப்பது அக்கால வழக்கம். பாண்டியர்கள் பயன்படுத்திய வட்டெழுத்தில் இந்தக் கல்வெட்டு உள்ளது

* இந்திய பெருங்கடல் பகுதிகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சிபூட்டி நடத்தை விதிமுறைகளின் (DCoC) கீழ் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உறுப்பினராக இணைந்துள்ளது

* புதுச்சேரியில் ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.
ஊரடங்கை கடுமையாக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்.

புதுச்சேரியில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதால் ஊரடங்கை கடுமையாக்கக்கோரி வழக்கு.

* ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 304 குறைவு.
ஒரு சவரன் 39 ஆயிரத்து 272 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் 4,909 ரூபாய்க்கு விற்பனை.

* மாநிலங்களவையில் லடாக் பிரச்சினை தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்து பேச்சு:

இந்தியா எல்லைப் பகுதியில் பல இடங்களை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது - அமைச்சர் ராஜ்நாத் சிங்.

சீனா லடாக் பகுதியில் 38 ஆயிரம் சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி உள்ளது.
இந்தியாவும் சீனாவும் எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறோம்.

எல்லை வரையறை செய்வது குறித்து இரு நாடுகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

* காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக வடகடலோர மாவட்டங்களில் மழை - வானிலை மையம்.

சேலம், தருமபுரி, ஈரோடு நீலகிரி கோவையில் மழைக்கு வாய்ப்பு. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூரில் மழை பெய்யும்.

வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். தென்மேற்கு அரபிக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் - வானிலை மையம்.

* கேரளாவில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தனர் போலீசார்:
தங்கக்கடத்தலில் சிக்கியுள்ள உயர்கல்வி அமைச்சர் ஜலீல் பதவி விலகக்கோரி பெண்கள் உள்ளிட்டோர் போராட்டம்.

* நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படும் - மின்வாரியம் அறிவிப்பு:
தட்கல் திட்டத்தில் பங்கேற்க வரும் 21ம் தேதி முதல் 31.10.2020 வரை, விண்ணப்ப தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் - மின் வாரியம்.

* தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அஜீத் அறிக்கை:

தனது பெயரை பயன்படுத்தி தொழில் சம்பந்தமாக அணுகினால் ஏமாற வேண்டாம். ஒரு சில தனிநபர்கள் தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் சம்பவங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.

வர்த்தக ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ ஏமாற்றப்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல"- அஜித் தரப்பு.

அஜித்திடம் வேலை பார்த்தவர்கள் அவரது பெயரை தவறாக பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து அறிக்கை வெளியீடு.

நடிகர் அஜித்குமாரின் மேலாளராக சுரேஷ் சந்திரா என்பவர் தான் இருக்கிறார். சுரேஷ் சந்திராவை தவிர்த்து வேறு யாருடனும் தொடர்பு கொள்ள வேண்டாம். நடிகர் அஜித்குமாரின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்.எஸ்.பரத் அறிக்கை.

* கர்நாடக மாநில ராஜ்யசபா எம்.பி. அசோக் கஸ்டி கொரோனாவுக்கு பலி:
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த  நிலையில்; பலியான எம்.பி.
உயிரிழந்த எம்.பி.க்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல்.

* நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்துவதா? வாக்கு எண்ணிக்கை நடத்துவதா? - உயர் நீதிமன்றம்:

நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் எதிர் தரப்பினர் வரும் 24ஆம் தேதி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. சட்ட போராட்டம் மூலம் என்ன சாதிக்க போகிறார்கள்? - நீதிபதிகள்.

* சென்னை மாநகராட்சியின் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000 ரூபாய் நிவாரணம் தெருவோர வியாபாரிகள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages