அக்னிப்புரட்சி இன்றைய (19.09.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (19.09.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (19.09.2020) முக்கிய செய்திகள்.

* உலகளவில் 3,06,82,768 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு:

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 9,55,660 பேர் உயிரிழப்பு.

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை  2,23,21,828.

அமெரிக்காவில் 69,24,126 பேருக்கு கொரோனா பாதிப்பு; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,03,133.

* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

மேலும் 1,247 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 53 லட்சத்தை தாண்டி,  53 லட்சத்து 08 ஆயிரத்து 015 ஆக உள்ளது.

தொற்று பாதிப்புடன் 10 லட்சத்து 13 ஆயிரத்து 964 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 42 லட்சத்து 08 ஆயிரத்து 432 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்து 619 பேர்.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,569  பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,36,477 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 987 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,54,624 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 66 பேர் உயிரிழப்பு  பலியானோர் எண்ணிக்கை 8,751 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,556 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 4,81,273 பேர் குணமடைந்துள்ளனர்.

* சென்னையில் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ரூ.84.21 க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 19 காசுகள் குறைந்து ரூ.77.21 க்கும் விற்பனை.

* பிஎட் , எம்எட் உள்ளிட்ட ஆசிரியர் கல்வி படிப்புகளுக்கான  தேர்வுகளை புத்தகத்தை பார்த்து மாணவர்கள் எழுதலாம்-ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு.

தமிழக தலைமைச் செயலாளர் மீதான திமுக புகார்: மக்களவை உரிமைக் குழு செப்டம்பர் 24-ஆம் தேதி விசாரணை.

மனு அளிக்கச் சென்ற தங்களை அவமரியாதையாக நடத்தியதாக தலைமைச் செயலாளர் சண்முகம் மீது திமுக எம்.பி.க்கள் புகார்.

திமுக எம்.பி.க்கள் புகார் தொடர்பாக விசாரிக்க வரும் 24 ம் தேதி கூடுகிறது மக்களவை உரிமைக் குழு.

* மோடியின் பிறந்த நாளில் சாரட் வண்டியில் ஊர்வலமாக சென்ற, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு.

எல்.முருகன் உட்பட 100 பேர் மூன்று பிரிவுகளின் கீழ் மாம்பலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு.
கொரோனா காலத்தில் தடையை மீறி ஊர்வலம் சென்றதால் நடவடிக்கை.

* ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு:

ஒரு சவரன் 39 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் 4,958 ரூபாய்க்கு விற்பனை.

* அல்கொய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 9 பேர் கேரளா,  மேற்குவங்கத்தில் கைது.
வெடிபொருட்கள், டிஜிட்டல் கருவிகள் பறிமுதல். நாட்டில் முக்கிய இடங்களை தகர்க்க சதி; விசாரணையில் பகீர்.

* இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ₨48 கோடியை விரைவில் தருவதாக அரசு உறுதி.

போராட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக தனியார் பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் அறிவிப்பு.

* அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும்:

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் - வானிலை மையம்.

வட கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

* பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது.
அனைத்து வகுப்புகளும் ஒரே நேரத்தில் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.

சமூக இடைவெளியை பின்பற்ற தேவையான வகுப்பறைகள் உள்ளன - அமைச்சர் செங்கோட்டையன்.

தமிழ்நாடு பாதுகாப்பு, நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கை வெளியீடு.

* இந்திய தொழில் கூட்டமைப்பு கனெக்ட்- 2020 மாநாட்டில் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.

தொழில்துறையின் சவால்களை முறியடிக்க தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி.

* சென்னை ஈசிஆர் சாலையில் பாலவாக்கம் அருகே, செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்.

* ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரெங்கநாயகி தாயார் நவராத்திரி கொலு புறப்பாடு 3-ம்  நாள்.

* எஸ்.பி.பி. விரைந்து குணமடைகிறார்;
நேற்றில் இருந்து உணவு எடுத்துக் கொள்கிறார் - மகன் எஸ்.பி.சரண் தகவல்

தொடர்ந்து அவருக்கு மருத்துவக்குழு தீவிர சிசிச்சை அளித்து வருகிறது.
மருத்துவர்கள் உதவியுடன் எழுந்து உட்காருகிறார் எஸ்.பி.பி. - மகன் வெளியிட்ட தகவல்.

* திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம்.

கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவ விழா. 5 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது கோயில் வளாகம்.

* வரும் 23 ஆம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை:
வரும் 23 ஆம் தேதி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசிக்க டெல்லி, மகாராஷ்டிரா உள்பட 7 மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு.

*ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி:
சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றி:
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில்; சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி.*

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages