அக்னிப்புரட்சி இன்றைய (21.09.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (21.09.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (21.09.2020) முக்கிய செய்திகள்.

* உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.12 கோடியாகும்.

இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 9.64 லட்சமாகும்.

கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 2.28 கோடியாகும்.

மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 61,461 ஆகும் .

* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 86,961 பேருக்கு கொரோனா.

1,130 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 87 ஆயிரத்து 882 பேர்.

பாதித்தவர்கள் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டி,  54 லட்சத்து 87 ஆயிரத்து 581 ஆக உள்ளது.

43 லட்சத்து 96 ஆயிரத்து 399 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 5,344 பேர் பாதிப்பு.இதுவரை கொரானாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 5,47,337 பேர்.

இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 5,492.

இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60.

* தமிழகத்தில் 3,501 நகரும் ரேஷன் கடைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்க உள்ளார்:

தமிழகத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் 33,000 ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. தற்போது, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், சில மலை கிராமங்களில், 43 நகரும் ரேஷன் கடை எனப்படும் வேன்கள் வாயிலாக, கார்டுதாரரின் வீடுகளுக்கு அருகில் சென்று, பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

இதேபோல, தங்கள் தொகுதியிலும், நகரும் ரேஷன் கடைகளை செயல்படுத்துமாறு, எம்.எல்.ஏ.,க்கள் பலர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும், 3,501 நகரும் ரேஷன் கடைகளை துவக்க, கூட்டுறவு துறை முடிவு செய்தது.

இதற்கான அறிவிப்பை, சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மார்ச்சில் அறிவித்தார். அத்திட்டத்திற்கு அனுமதி அளித்து, 9.66 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஆகஸ்டில் அரசு உத்தரவிட்டது. இதன்படி நகரும் ரேஷன் கடை திட்டத்தை, முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

* மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விழுந்து 5 பேர் பலி:

இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் இருந்து 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இன்று அதிகாலை 3.20 மணிக்கு நடந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு. 1984ஆம் ஆண்டு அந்த 3 அடுக்கு கட்டடம் கட்டப்பட்டதாக தகவல்.

* சென்னையில் விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.21 க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 14 காசுகள் குறைந்து ரூ.76.85 க்கும் விற்பனை.

* ஏர் இந்தியா விமானங்கள் வருகைக்கு ஹாங்காங் திடீர் தடை:

சமீபத்தில் ஹாங்காங் வந்த 23 பேரில் கொரோனா பாதித்தவர்கள் 3ல் ஒரு பங்கு பயணிகள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏர் இந்தியா மற்றும் கேத்தே டிராகன் நிறுவன விமானங்கள் அடுத்த மாதம் 3ம் தேதி வரை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதமும் ஏர் இந்தியா இயக்கும் விமானங்களை ஹாங்காங் தடை செய்தது. பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என சான்று இருப்பவர்கள் மட்டுமே ஹாங்காங்கில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

* இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் அளவிலான ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது:

சீன கட்டுப்பாட்டில் உள்ள லடாக்கின் மோல்டோ பகுதியில் 2 நாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடக்கிறது.

* மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக்.ஓ.பிரையன், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உட்பட 8 எம்.பி.க்கள் ஒருவாரம் சஸ்பெண்ட்!

அவையில் அத்துமீறி அமளியில் ஈடுபட்டதால் நடவடிக்கை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவிப்பு!

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீதான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு.

மாநிலங்களவை விதிகளின் படி ஹரிவன்ஷ்க்கு எதிரான தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாது - வெங்கையா நாயுடு.

* பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடக்கம்:

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை காலாண்டு விடுமுறை.

விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

* திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கியது:

ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சிகள் கூட்டம். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கியது.

நேற்று வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அது குறித்து முக்கிய விவாதம்.

காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்பு.

கொரோனா ஊரடங்கு காரணமாக காணொளி மூலம் ஆலோசனை நடந்த நிலையில், தற்போது தோழமைக் கட்சிகள் நேரில் ஆலோசனை.

*தட்டார்மடம் கொலை வழக்கு - குற்றம்சாட்டப்பட்ட திருமணவேல் உள்பட 2 பேர் சரண்.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திருமணவேல் உள்பட இருவர் சரணடைந்தனர்.

சரணடைந்த இருவரையும் 3 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.

காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி 4ஆவது நாளாக உறவினர்கள் தர்ணா.

* திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சியினர் விடிய விடிய தர்ணா.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து, சவரன் ரூ.39,472-க்கு விற்பனை.

ஒரு கிராம் தங்கம் ரூ.4,934-க்கு விற்பனை.

* விவசாய மசோதாக்களின் குறைகளை சுட்டிக் காட்டினேன். ஆனால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது மேலிட உத்தரவு என்கிறார் அதிமுக எம்.பி S.R.பாலசுப்பிரமணியன். எதிர்ப்புதான் ஆனா ஆதரவு. ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும். எடப்பாடி பழனிச்சாமி ஒரு விநோத விவசாயி திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின்

* பாகிஸ்தான் முதன்மை அமைச்சர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து "பாகிஸ்தான் மக்களாட்சி இயக்கம்" என்ற கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் கானை முதன்மை அமைச்சர் உடனடியாக பதவியிலிருந்து விலக வலியுறுத்தல்.

* அதிமுகவின் குழப்பம்!
நடுவண் அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட வரைவுக்கு ஆதரவு தெரிவித்து 6 பக்க அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள நிலையில் நேற்று மாநிலங்களவையில் அதிமுக கடுமையாக எதிர்த்து பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

* பொதிகை விரைவு மற்றும் நெல்லை விரைவு ரயில் பெட்டிகள் தொலைந்து போனது?!

* மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு: வேளாண் சட்டம் தொடர்பாக உறுப்பினர்கள் தொடர் அமளி.

உறுப்பினர்களின் தொடர் அமளியால் நாளை வரை மாநிலங்களவை ஒத்திவைப்பு. வேளாண் சட்டம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக அமளி.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அவையை விட்டு வெளியேற மறுப்பு.

* தூத்துக்குடி சொக்கன்குடியிருப்பில் இளைஞர் செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவு.

தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கில் சிக்கிய காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் சஸ்பெண்ட்-நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் உத்தரவு.

செல்வன் கொலை வழக்கில் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ளார், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன்.

* தட்டார்மடம் கொலை வழக்கில் தொடர்புடைய திருமணவேல் அ.தி.மு.கவில் இருந்து நீக்கம்.
அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து அ.தி.மு.க தலைமை நடவடிக்கை.

* கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன ?- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
செப்டம்பர் 24 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய இந்துசமய அறநிலையத்துறைக்கு உத்தரவு.

* தங்கள் மாநிலங்களில் மட்டும் பொதுமுடக்கத்தை நீட்டிக்கக்கோரி சில மாநில அரசுகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன; ஆனால் அமைச்சகம் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை - மக்களவையில் உள்துறை அமைச்சகம் தகவல்.

* தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு - ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் பதில்.

இந்த நிதியாண்டு முடியும் வரை ரயில்வேயில் புதிய பணிகள் தொடங்கப்பட மாட்டாது.

புதிய பாதை அமைக்கும் பணிகள், மாற்று பாதை பணிகள், இருவழித்தட திட்டங்களும் தற்காலிகமாக ரத்து.

பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள், அவசர பணிகள் எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை.

மதுரை எம்.பி. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதில்.

* அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு;

திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது - மனுதாரர்.

அதிமுக செயல்பாடுகளை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி மனு.

தேர்தல் நடத்தாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர் என மனு தாக்கல்.

அதிமுகவில் 4 ஆண்டுகளாக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages