அக்னிப்புரட்சி இன்றைய (23.09.2020) முக்கிய செய்திகள்.
* உலகில் கொரோனா தொற்றால் 3,17,63,721 பேர் இதுவரை பாதிப்பு.
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 974,546 பேர் மரணம்.
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 2,33,69,315 பேர் மீண்டனர்.
உலகில் கொரோனா பாதிப்புடன் 7,419,860 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,319 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,57,999 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 980 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,58,594 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 63 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 9,010 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,363 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 5,02,740 பேர் குணமடைந்துள்ளனர்.
* சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.76.72க்கும் விற்பனை.
* மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார்:
மோகன் மகளின் கல்விச் செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை கொரோனா நிதிக்காக வழங்கியிருந்தார்.
பிரதமரின் மன் கி பாத் உரையிலும் பாராட்டு பெற்றிருந்தார் மோகன்.
மோகன் தன்னிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக கங்கை ராஜன் என்பவர் புகார்.
மருத்துவ செலவுக்காக வாங்கிய ரூ.30,000 ஐ வட்டியுடன் திருப்பி கொடுத்த பின்னரும் மிரட்டல் என புகார்.
கங்கை ராஜன் புகாரின் பேரில் மோகன் மீது மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு.
* புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை கருத்து கேட்பு.
பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் , கல்லூரி நிர்வாகத்தினர் பங்கேற்கலாம்- உயர்கல்வித்துறை.
ஆன்லைன் வழியில் கருத்துக்களை கேட்கிறது தமிழக உயர்கல்வித்துறை.
* நகை வாங்குவோர் மகிழ்ச்சி:
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது.
ஒரு சவரன் தங்கம் ரூ.38,480க்கு விற்பனை.
ஒரு கிராம் தங்கம் ரூ.4,810க்கு விற்பனை.
கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.992 குறைந்தது.
வெள்ளி விலையும் கடந்த 3 நாட்களில் கிலோவுக்கு ரூ.7100 குறைவு.
* அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு:
முன்னாள் துணைவேந்தர்கள் ஆளுநரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தல்.
"எம்ஜிஆரால் துவங்கப்பட்ட தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பழம்பெருமை வாய்ந்தது- பல்வேறு சிறப்புகளை கொண்டது".
* வெளிநாட்டு நிதி முறைப்படுத்த மசோதாவில் அரசின் எண்ணம் நல்ல உள்நோக்கம் கொண்டதாக இருந்தாலும் நடைமுறையில் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது- அதிமுக எம்.பி., எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிர்வாக செலவை குறைக்கும் முடிவு என்பது தேவையற்றது - மாநிலங்களவையில் அதிமுக எம்.பி., எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் பேச்சு.
* சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜாமீன் கோரி நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் வழக்கு:
அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.
பெற்ற தாயும், அதிகாரத்திலுள்ள பெரியவரும் சேர்ந்து செய்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது - நீதிபதி கருத்து.
* விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும்":
மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம்.
திரை அரங்குகளை திறந்த பின்னர் மாஸ்டர் படம் ரிலீஸாகும்".
"மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி. தளங்களில் வெளியாக வாய்ப்பு இல்லை".
* நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு: சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட கேரள அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்.
* இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும்: பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.
"தமிழர் கலாச்சாரமும், தமிழ் மொழியும் இல்லாவிட்டால் இந்திய வரலாறு முழுமையடையாது".
கடந்த ஆண்டு நீங்கள் மகாபலிபுரம் வந்த போது வரலாற்று சிறப்பு வாய்ந்த சின்னங்களை பார்வையிட்டீர்கள்".
எனவே 16 பேர் கொண்ட குழுவில் தமிழ் அறிஞர்களை இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்".
* சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு வந்த விவகாரம்:
உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்த வழக்கில் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் மனு மீது நாளை இடைக்கால உத்தரவு. சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு.
*;தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திடீர் சந்திப்பு.
* கொரோனா பரவலின் நிலையை நோய் எதிர்ப்பு சக்தி மூலம் கண்டறிய முடிவு:
30 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய தமிழக அரசு திட்டம். அடுத்த வாரம் ஆய்வு தொடங்குகிறது- சுகாதார துறை தகவல்.
* திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் காரில் கடத்தல்: அமைச்சரின் உதவியாளர் கடத்தப்பட்டது குறித்து திருப்பூர் எஸ்.பி. திஷா.
* தமிழகத்தில் ஏழு ஏஎஸ்பிக்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது:
1), ஆல்பர்ட் ஜான் ஐபிஎஸ், வேலூர் மாவட்டம், வேலூர் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும்,
2), சமய் சிங் மீனா ஐபிஎஸ், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும்,
3), ஆதர்ஷ் பச்சேரா ஐபிஎஸ், செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும்,
4), புக்யா சினேகா பிரியா ஐபிஎஸ், கடலூர் மாவட்டம், நெய்வேலி சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும்,
5), தீபக் சைவாக் ஐபிஎஸ், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும்,
6), ஹர்ஷ் சிங் ஐபிஎஸ், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும்,
7), டி.வி.கிரண் ஸ்ருதி ஐபிஎஸ், திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை அரசின் முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
* மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு-மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவிப்பு.
10 நாட்கள் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் 19 மசோதாக்கள் நிறைவேற்றம். அக்.1ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் 8 நாட்களுக்கு முன்பாகவே நிறைவு செய்யப்பட்டது.
* “பள்ளி கட்டணத்தில் முதல் தவணையான 40% கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க போவதில்லை"-சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்.
உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
9 பள்ளிகளும் அக்டோபர் 14ம் தேதி பதிலளிக்கவும் உத்தரவு.
“சிபிஎஸ்இ பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் அளிக்க மெயில் ஐடி உருவாக்கி விளம்பரப்படுத்த வேண்டும்"
111 புகார்களில் 97 நிரூபிக்கப்படவில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிக்கை.
* 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை:
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்பு:
கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது குறித்து காணொலி மூலம் ஆலோசனை.
தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, உ.பி, பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு.
கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே தமிழகம் கோரியிருந்த நிதியை விடுவிக்க முதலமைச்சர் வலியுறுத்துவார் என தகவல்.
கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களும் பங்கேற்பு.
* போதைப் பொருள் வழக்கில் தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன்: விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு உத்தரவு.
தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன்.
அடுத்தடுத்து சிக்கும் திரை பிரபலங்களால் பாலிவுட்டில் அதிர்ச்சி.
போதைப் பொருள் தொடர்பான வழக்கில் அடுத்த அதிரடி
* சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்.
நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம்.
நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி.
10 நீதிபதிகளின் பெயர்களுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்.
* திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் ஐந்தாவது நாள் மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமியும் கிருஷ்ணரும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
* கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்.10ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்.
கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர இதுவரை 12,009 பேர் விண்ணப்பித்துள்ளனர் - உடுமலை ராதாகிருஷ்ணன்.
* வேளாண் மசோதாக்களுக்கு
ஒப்புதல் வழங்க கூடாது என கோரிக்கை -குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் மனு.
எதிர்க்கட்சிகள் சார்பில் குலாம் நபி ஆசாத் குடியரசு தலைவர் உடன் சந்திப்பு.
வேளாண் மசோதா குறித்த எங்களின் கருத்தை குடியரசுத் தலைவரிடம் கூறினோம்.
தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.
* மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், மாநில உரிமைகளுக்கு எதிரானவை என்ற அடிப்படையில் கேரள அரசு உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளது:
இங்கேயும் ஓர் அரசு இருக்கிறதே!? எடப்பாடி அரசு - அது மாநில உரிமைகளைப் பற்றிய உணர்ச்சியே இல்லாத அரசு. - மு.க.ஸ்டாலின்.
* திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆதம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் ஆர்.எஸ்.பாரதி சிகிச்சைக்காக அனுமதி.
* நாடாளுமன்ற மக்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு.
ஏற்கனவே, காலையில் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மக்களவையும்
ஒத்திவைப்பு. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்
நிறைவடைந்தது.
அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு.
* நெல்லையில் மணல் கடத்தலுக்கு உதவியதாக எஸ்.ஐ கந்தையா உட்பட 5 காவலர்கள் பணியிடைநீக்கம்:
தலைமைக்காவலர் சுதாகர், காவலர்கள் ரத்தினவேல், லெட்சுமி நாராயணன் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம்.
* மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்:
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் உயிரிழப்பு.
கடந்த 10ம் தேதியன்று கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், சுரேஷ்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார், மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி. கர்நாடக மாநிலம் பெகலாவியை சேர்ந்தவர், சுரேஷ் அங்காடி.
No comments:
Post a Comment