அக்னிப்புரட்சி இன்றைய (24.09.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (24.09.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (24.09.2020) முக்கிய செய்திகள்.

* உலகில் கொரோனா தொற்றால் 3,20,83,282 பேர் பாதிக்கப்பட்டுளளனர்.

உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 981,219 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலகில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 2,36,57,580 பேர் குணம் அடைந்துள்ளனர்.

உலகில் கொரோனா பாதிப்புடன் 74,44,483 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,39,045 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,30,184 ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,27,780 ஆக உயர்ந்துள்ளது.

உலகிலேயே அதிகபட்சமாச ஒரே நாளில்  89,688 பேர் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் 41,108 பேரும், பிரேசிலில் 32,445 பேரும், பிரான்சில் 13,072 பேருக்கும் கொரோனா.

உலகிலேயே நேற்று அதிகபட்சமாக இந்தியாவில் 1,152     பேர் கொரோனாவால் மரணம்.

இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 1,079 பேர் மரணம்.

பிரேசிலில் 906 பேரும், மெக்ஸிகோவில் 651 பேரும், அர்ஜெண்டினாவில் 424 பேரும் மரணம்.

* ஐபிஎல்2020: போட்டி - 5:
மும்பை அணி வெற்றி:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...

MI - 195/5 (20 ஓவர்கள்)
KKR - 146/9 (20 ஓவர்கள்)

* சென்னையில் பெட்ரோல், டீசல் விலைமாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.76.72 க்கும் விற்பனை.

* புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாணவர்கள், பெற்றோரிடம் நிபுணர் குழு கருத்து கேட்கிறது.

உயர்கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில் காணொலியில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கிறது.

* தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதி; கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார்: லேசாக தென்பட்ட கொரோனா அறிகுறி, உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது- தேமுதிக.

6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக, விஜயகாந்த் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.

பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்ற போது தென்பட்ட அறிகுறி சரிசெய்யப்பட்டது- தேமுதிக.

* திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.

கொரோனா உறுதியான கே.எஸ்.விஜயகுமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.

* பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 85வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மரியாதை.

*;தங்கம் விலை மேலும் குறைவு:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ,4,755-க்கு விற்பனை.

* ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனையைத் தொடங்கியுள்ளது.

இந்த மருந்தைச் செலுத்திச் சோதித்துக்கொள்ள அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் அறுபதாயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

இந்தத் தடுப்பு மருந்து செயல்திறன், பாதுகாப்பு ஆகியவை மிகுந்தது எனச் சோதனையில் மெய்ப்பிக்கப்பட்டால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதற்கு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பதற்காக ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு பத்தாயிரத்து எழுநூறு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.

* குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் குழு 2வது முறை அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு.

* தன்னை பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு தரக்கூடாது: கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்.

"தன்னுடைய சிறைவாசம் மற்றும் விடுதலை குறித்த விவரங்களை மூன்றாவது நபருக்கு தெரிவிக்கக் கூடாது".

*:புழல் சிறையில் கொரோனா பரவி வருவதால் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க அற்புதம்மாள் வழக்கு.
விதிகளை தளர்த்தி பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு.

* விஜயகாந்த் பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்.

* விஜயகாந்த் உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன்.
- முதல்வர் பழனிசாமி ட்வீட்.

* பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு. - சென்னை உயர்நீதிமன்றம்.

90 நாட்கள் விடுப்பு வழங்கக் கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

* "இந்திய கலாச்சார தோற்றம் குறித்து ஆய்வு செய்யும் குழுவை கலைக்க வேண்டும்": குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, 32 எம்.பிக்கள் கடிதம்.

"மத்திய அரசால் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட ஆய்வாளர்கள் குழுவில் இல்லை".

"பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நிபுணர் குழு இல்லை".
தற்போதைய குழுவின் ஆய்வு வரலாற்று திரிபுகளுக்கு வழி வகுத்துவிடும்".

* மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடியின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்:
சுரேஷ் அங்கடியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை கூறிக்கொள்கிறேன்.
- முதல்வர் பழனிசாமி ட்வீட்.

* நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனு தள்ளுபடி:

உச்சநீதிமன்றம் உத்தரவு-கவுரவ் குமார் என்பவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.
மனுதாரர் கவுரவ் குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்.

“நீங்கள் வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் இருக்கிறார்கள் இதுபோன்ற மனுக்களைத் தேவையில்லாமல் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம்"- நீதிபதிகள்.

* விஜயகாந்த் நலம்பெற்று பொதுப்பணியில் உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

* சக்ரா திரைப்படத்தை ஓடிடி- நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தங்களிடம் கூறிய கதையை கொண்டு 'சக்ரா' படம் எடுக்கப்பட்டுள்ளது என புகார். செப் .30-க்குள் இரு தரப்பினரும் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்- நீதிபதி.

* +2 மறுதேர்வு முடிவுகள் அக்.,10க்குள் வெளியிடப்படும் - சிபிஎஸ்இ:

அக்டோபர் 31 வரை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் - யுஜிசி.

அக்.10 +2 தேர்வு முடிவுகள் வரை கல்லூரி மாணவர்கள் சேர்க்கையை நீட்டிக்க கோரிய வழக்கில் சிபிஎஸ்இ, யுஜிசி தகவல்.

* குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளி மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம்.

தமிழக புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் படித்த பள்ளி மூடப்பட்டதை அறிந்து வருத்தமடைந்தேன் - முதலமைச்சர்.

தமிழ் மொழி சிறுபான்மையினரின் கல்வி உரிமையை குஜராத் அரசு பாதுகாக்கவும் கோரிக்கை.
தமிழ் மொழி பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கான செலவை தமிழக அரசே ஏற்க தயார் - முதலமைச்சர்.

* சர்வதேச கோவா திரைப்பட விழா ஒத்திவைப்பு:

2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு. நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த விழா, கொரோனா பரவலால் ஒத்திவைப்பு.

* கொரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்படுவதாக முதல்வரை பாராட்டும் நிர்பந்தம் மோடிக்கு ஏற்பட்டது ஏன்? - மு.க.ஸ்டாலின்.

கொரோனா பேரிடரில் தவிக்கும் தமிழக மக்களின் உணர்வை பிரதமர் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

அதிமுக அரசை பாஜக அரசு பாராட்டியது அரசியல் ரீதியான கட்டாயம் என நினைக்கத் தோன்றுகிறது.

கொரோனா பாதிப்பு உண்மைகளை தமிழக அரசு திரித்து மத்திய அரசுக்கு கொடுத்திருக்கிறதா?

அரசின் கொரோனா தோல்வி, பொருளாதார பின்னடைவு போன்றவற்றை பிரதமர் தெரிந்துகொள்ள வேண்டும். - மு.க.ஸ்டாலின்.

* சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவிற்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்:

செப்.27 முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் தினசரி விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.
- தெற்கு ரயில்வே அறிவிப்பு.

* அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி.
விருப்பத்தின் பேரில் மாணவர்கள் செல்லலாம் - தமிழக அரசு அறிவிப்பு.

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி - தலைமைச்செயலாளர்.
10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தலைமைச் செயலாளர்.

* 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது:

கடலூர் மாவட்டம் வட்டத்தூர் ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி 20 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.

மணிகண்டன் என்ற டேங்க் ஆபரேட்டரின் சம்பள உயர்வு மற்றும் நிலுவை தொகையை வழங்குவதற்கு 50 ஆயிரம் லஞ்சம் கேட்டார் பழனிச்சாமி.

இன்று முதல் தவணையாக லஞ்ச பணம் ரூ 20,000 ஆயிரத்தை பழனிச்சாமி பெற்ற போது கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் மெல்வின் ராஜசிங் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

* நடிகர் சங்க தேர்தல் வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு.

வேறு அமர்வு விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற அமர்வு பரிந்துரை.
இரு தரப்பினரும் நீதிமன்ற யோசனையை ஏற்க மறுத்ததால் உயர் நீதிமன்றம் அதிரடி.

* மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 29ஆம் தேதி ஆலோசனை.
பொது முடக்க தளர்வுகளை மேலும் அதிகரிப்பது குறித்து முக்கிய முடிவு.

* முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்  வர்ணணையாளருமான டீன் ஜோன்ஸ் (59) மாரடைப்பால் மும்பையில் காலமானார்.

ஐபிஎல் வர்ணணைக்காக மும்பை ஹோட்டலில் தங்கி இருந்த அவர் ஹோட்டல் லாபியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது.

அவருடன் தங்கி இருந்த சக வர்ணணையாளரான பிரெட் லீ  முதலுதவி அளித்தும் டீன் ஜோன்சை காப்பாற்ற முடியவில்லை.

* வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகள் அதிக சுதந்திரம் மற்றும் நியாயமான விலையை பெறுவர்.

காங்கிரஸ் விவசாயிகளை தவறாக வழிநடத்தி, தனது கட்சியையும் நாட்டையும் பலவீனப்படுத்துகிறது - மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

குறைந்தபட்ச ஆதார விலை அரசாங்கத்தின் கொள்கை முடிவு, அது தொடரும்.

விவசாயிகள் தங்கள் பொருட்களை மண்டியின் எல்லைக்கு வெளியே விற்க முடியும் - நரேந்திரசிங் தோமர்.

* விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார், விரைவில் வீடு திரும்புவார் - பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்.

விஜயகாந்த் நலம் பெற வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

வீட்டில் நோட்டீஸ் ஒட்டக்கூடாது என்று கூறவில்லை, அரசின் விதிமுறைகளை நாங்கள் மதிக்கிறோம் - பிரேமலதா விஜயகாந்த்.

* மதுரை செல்லூரில் க‌படி வீர‌ருக்கு சிலை வைக்க அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

அரசியல், சாதித் தலைவர்கள் சிலை வைத்தால்தான் பிரச்சினை ஏற்படும்.
கபடி வீரருக்கு சிலை வைப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாது - உயர்நீதிமன்றம்.

* அகமதாபாத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை மீண்டும் திறக்க கோரி குஜராத் முதல்வருக்கு ஜி.கே.வாசன் கடிதம். அகமதாபாத் எம்.பி.யை நேரில் சந்தித்து வழங்கினார் ஜி.கே.வாசன்.

* பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு என தகவல்.

* எஸ்பிபி குணமடைய இந்த நேரத்தில் பிரார்த்திக்க இசையமைப்பாளர் தமன் வேண்டுகோள்.

* எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் நடிகர் கமல்ஹாசன் கேட்டறிந்தார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages