அக்னிப்புரட்சி இன்றைய (26.09.2020) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,75,017 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1187 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,62,125 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 85 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 9,233 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,612 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 5,19,448 பேர் குணமடைந்துள்ளனர்.
* ஐநா பொதுச்சபை கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மோடி இன்று பேசுகிறார்.
ஐநா பொதுச்சபை கூட்டத்தில் நேற்று பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் பிரச்சையை பேசினார்.
காஷ்மீர் பிரச்சனையை பேசிய இம்ரானுக்கு ஐநா இந்திய பிரதிநிதி திருமூர்த்தி கண்டனம்.
சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கு விற்பனை; ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசு குறைந்து ரூ.76.40க்கு விற்பனை.
மறைந்த பாடகர் எஸ்பிபி க்கு அஞ்சல் செலுத்தும் விதமாக புகழ் பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒரிசா பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வடிவமைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மன்மோகன் சிங் போல ஒரு பிரதமர் இல்லாததை இந்திய நாடு உணருகிறது;
அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து.
* எஸ்பிபியின் பண்ணை வீட்டில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்களுக்கு அனுமதி.
பாடகர் மனோ எஸ்பிபி உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
* இந்திய இசை கலாச்சாரத்தின் பிரகாசமான அடையாளம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எஸ்பிபி உண்மையான பாடும் நிலா - சோனியா காந்தி.
* கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை.
கொரோனா தடுப்பு சிறப்பு குழுவினருடனும் தலைமைச் செயலர் இன்று ஆலோசனை.
ரயில்வே, விமான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.
*;திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 8-ம் நாளான இன்று சர்வ பூபாள வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 8-ம் நாளான இன்று சர்வ பூபாள வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
* நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை: மறுக்கால்குறிச்சி கிராமத்தில் பயங்கர சம்பவம்.
2 பேரை வெடிகுண்டு வீசி கழுத்தறுத்து கொன்றது மர்ம கும்பல். முன்விரோதம் காரணமாக இரட்டை கொலை - முதல்கட்ட விசாரணையில் தகவல்.
* இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச உடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை.
இந்தியா - இலங்கை உறவு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது - பிரதமர் மோடி.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்தியா அளித்த உதவிக்கு நன்றி - மகிந்த ராஜபக்ச.
* ஒன்றுபட்ட இலங்கையில் சமரசம் மற்றும் இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுங்கள்" இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்.
இலங்கையின் 13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தவும் வேண்டுகோள்.
காணொலி காட்சி வாயிலான கருத்தரங்கில் ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்தல்.
* அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
* சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை மண்டல சிறப்பு குழுவுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை.
ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்பு.
* சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்:
2 வழக்குகளில், அதிகாரிகள் உள்பட 9 காவல் அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக
குற்றப்பத்திரிகையில் தகவல்.
தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கடந்த ஜூன் 22, 23ஆம் தேதிகளில் அடுத்தடுத்து சிறையில் உயிரிழந்தனர்.
* செப்.13-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான விடைகள் வெளியீடு:
செப்டம்பர் 13ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வில் கேட்கப்பட்டுள்ள 180 கேள்விகளுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
* பாஜக தேசிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்:
சுயநலமின்றி பொதுநலனுடன் கட்சியின் பாரம்பரியத்தை கட்டிக் காக்கும் வகையில் நிர்வாகிகள் செயல்படுவர்.
கட்சியின் புதிய நிர்வாகிகள் ஏழைகளின் முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைப்பார்கள் என நம்புகிறேன் - பிரதமர் மோடி.
* மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா.
எஸ்.பி.பி.யின் மறைவுக்கு ஏற்கனவே இளையராஜா இரங்கல் தெரிவித்து இருந்தார். அதில் எஸ்.பி.பி. இல்லாத உலகம் தனக்கு சூன்யமாக தெரிவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் எஸ்.பி.பி.யின் ஆன்மா சாந்தியடைய வேண்டி திருவண்ணாமலையில் உள்ள ரமணா ஆசிரமத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டார் இளையராஜா.
* ஸ்ரீரங்கம், ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சமேத ஸ்ரீ அரங்கநாதசுவாமி விஜயதசமி புறப்பாடு: ஸ்ரீ நம்பெருமாள் மாலை கருடமண்டபம் சேவை(26.09.2020).
* அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்.
அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே வந்து அளிக்கப்படும் - தமிழக அரசு.
* எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். பாரத ரத்னா விருது வழங்கும் குழுவில் நானும் ஒரு உறுப்பினர் என்பதால் அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் - கங்கை அமரன்.
No comments:
Post a Comment