அக்னிப்புரட்சி இன்றைய (30.09.2020) முக்கிய செய்திகள்.
* உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.38 கோடியாகும்.
இதுவரை கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10.11 லட்சமாகும்.
கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2.51 கோடியாகும்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் ஆபத்தான கட்டத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை 65,599.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,97,602 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,295 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,67,376 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 67 பேர் உயிரிழப்பு getபலியானோர் எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,610 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 5,41,819 பேர் குணமடைந்துள்ளனர்.
* குவைத் மன்னர் அல் சபா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்:
அரபு உலகம் ஒப்பற்ற தலைவரை இழந்துவிட்டது; குவைத்தில் வாழும் இந்தியர்கள் மீது மன்னர் அல் சபா எப்போதும் அக்கறை கொண்டிருந்தார்" - பிரதமர் மோடி.
* அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் - ஜோ பிடன் இடையே நேரடி விவாதம்.
இன்னும் சற்றுநேரத்தில் கிளீவ்லேண்ட் மாகாணம் ஓஹியோவில் நடைபெறுகிறது.
நவம்பர் 3-ம் தேதி தேர்தல் நடைபெறும் சூழலில் டிரம்ப் - ஜோ பிடன் முதல்முறையாக நேரடி விவாதம்.
* சென்னையில் விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.76.10 க்கும் விற்பனை.
* அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜோ பைடன் இடையே காரசார விவாதம்:
டிரம்ப் என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியாது; சொல்லப்போனால் அவருக்கு எதுவுமே தெரியாது - பைடன் விமர்சனம்.
கொரோனா விவகாரத்தில் ஜோ பிடன் சொல்வது எல்லாம் கேட்டு இருந்தால் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பார்கள் - ட்ரம்ப்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிக மிக மெதுவான பொருளாதார மீட்புதான் இப்போது உள்ளது -ஜோ பிடன்
தடுப்பு மருந்து விவகாரத்தில் நாங்கள் உங்களை நம்புவதாக இல்லை -ஜோ பிடன்.
தடுப்பு மருந்து விவகாரத்தில் நாங்கள் விஞ்ஞானிகளைதான் நம்புகிறோம் -ஜோ பிடன்.
H1N1 வைரஸ் விவகாரத்தை ஜோ பிடன் கையாண்ட விதம் என்பது மிகப்பெரிய பேரழிவு - ட்ரம்ப்.
ஜோ பிடன் இந்த நாட்டின் பொருளாதாரத்தை முடக்கி வைக்க வேண்டும் என்று நினைக்கிறார் - ட்ரம்ப்.
* ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் நாளை துவக்கம்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற முடியும்.
* நீட் தேர்வு நிபந்தனைகளை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.
நீட் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்றும்படி வற்புறுத்தகூடாது - மனுதாரர்.
திருமணமான விண்ணப்பதாரர்களை தாலி, மெட்டியை அகற்றும்படி வற்புறுத்தப்படுவதாக மனுவில் குற்றச்சாட்டு.
சிசிடிவி பொருத்தி கண்காணிக்கும் நிலையில் கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானது- மனுதாரர்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரண.
* பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 32 பேரையும் விடுவித்த லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்; காலதாமதமானாலும் நீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது!'
- பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
* தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க டிசம்பர் மாதம் 31 ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்.
தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தேர்தல் நடத்தி முடித்தது தொடர்பான அறிக்கையை ஜனவரி 30 க்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
* சேலம் மாவட்டம் ஏற்காடு செம்மநத்தத்தில் தனியார் எஸ்டேட்டில் வேலை செய்த ஜார்கண்டை சேர்ந்த தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கோண்டாபகன், சுதிகேன்ஸ ஆகிய தம்பதி கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
* பாபர் மசூதி வழக்கில், மத்திய அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் - திருமாவளவன்
* உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் (94) சென்னையில் காலமானார்.
* ரூ.488 கோடி நிதி இருக்கும் நிலையில், பெரிய கோவில்களின் உபரி நிதியில் இருந்து ரூ.10 கோடி பெற வேண்டியது ஏன்?
நாளை விளக்கமளிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
எந்த அடிப்படையில் ஆயிரம் கிராம கோவில்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது?- நீதிமன்றம்.
* பெற்றோர்கள், குழந்தைகளோடு நேரத்தை செலவிடாததே இளம்பெண்கள் பிறரின் ஆசை வார்த்தைகளை நம்பி வீட்டை விட்டு வெளியேற காரணம்
காணாமல் போன 10ம் வகுப்பு மாணவியை மீட்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை.
திருமணமான நபர்களுடன், இளம்பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது குறித்தும் உயர் நீதிமன்றம் கவலை.
10 ஆண்டுகளில் இளம்பெண்கள் வீட்டை விட்டு சென்றதாக 53,898 புகார்கள் பெறப்பட்டுள்ளது- காவல்துறை.
பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
* கொரோனா ஊரடங்கில் 5வது கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு.
திரையரங்குகள் 50 % இருக்கைகளுடன் இயங்க அனுமதி. பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி.
அக்டோபர் 31 வரை நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு.
பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநிலங்கள் முடிவெடுக்கலாம்.
அக்.15ம் தேதிக்குப் பின்னர் மாநிலங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தல்.
No comments:
Post a Comment