செப் 5 ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

செப் 5 ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

செப் 5 ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி     
         
தாய், தந்தைக்கு அடுத்து தெய்வமாக போற்றப்படுபவர்கள் ஆசிரியப் பெருமக்கள்.(மாதா,பிதா,குரு தெய்வம்) ஒரு தனி மனித வளர்ச்சிக்கும் ஒரு குடும்ப உயர்வுக்கும், ஒரு நாட்டின் மேம்பாட்டுக்கும் அடித்தளமாக இருக்கிற, அழியாச் செல்வம் கல்வி கற்பித்து வழிகாட்டியாக இருப்பவர்கள் ஆசிரிய - ஆசிரியைகள். மாணவப் பருவத்தில் ஒழுக்கம், பொது அறிவு, தன்னம்பிக்கை, விடா முயற்சி, திறமை, உடல் ஆரோக்கியம் பேணுதல், கட்டுப்பாடு, ஊக்கம் போன்ற விவரங்களை உண்மையாக எடுத்துரைத்து உயர்வுக்கு வழிகாட்டுபவர்கள் ஆசிரியர்கள்.
     
ஒரு கல்லை அழகிய சிற்பமாக வடிவமைக்கும் சிற்பியைப்போல் ஒவ்வொரு மனிதயையும் உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். குறிப்பாக அறிஞர்கள், சான்றோர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எல்லாத் துறைகளின் வல்லுனர்கள், தலைவர்கள் போன்ற அனைவரையும் வளர்த்தவர்கள், உயர்த்தியவர்கள், உருவாக்கியவர்கள் அடிப்படையில் ஆசிரியர்கள் என்ற பெருமையுண்டு.
     
"மாணவச் செல்வங்களின் மகத்தான பாடநூல் ஆசிரியர்கள் " என்று பாராட்டப்படுகின்றனர். இருபால் ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளும் உரிமைகளும் நிறைவேற்றிட துணை நிற்போம். ஆதரிப்போம். ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் மனநிறைவுடன், உடல் ஆரோக்கியத்துடன், குடும்ப நலமுடன், நீடூழி வாழ இதயங்கனிந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றேன்.     
    
ஆசிரியப் பெருமக்களை போற்றுவோம்... வாழ்த்துவோம்... ஒவ்வொருவரும்  நமக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை போற்றுவோம்... வணங்குவோம் ... பெருமை சேர்ப்போம் ... மனிதனின் இரண்டு புனித இடங்கள்
"உயிரைப் பெறும் தாயின் கருவறை"    "அறிவவைப் பெறும் ஆசிரியரின் வகுப்பறை"

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages