சிலப்பதிகாரம் அறிவோம் - மருத்துவர் இராமதாசு அய்யா
8. கோவலன் மேலும் தனது மனக்
கிளர்ச்சியை நயம் தோன்றப்பாடுதல்
பொழில் தரு நறுமலரே
புதுமணம் விரிமணலே
பழுது அறு திருமொழியே
பணை இள வனமுலையே
முழுமதி புரை முகமே
முரிபுரு வில் இணையே
எழுது அரும்மின் இடையே
எனை இடர் செய்தவையே !
திரைவிரி தரு துறையே
திருமணல்விரி இடமே
விரைவிரி நறு மலரே
மிடை தரு பொழில்இடமே
ப மருவிரி புரி குழலே
மதிபுரை திருமுகமே
இருகயல் இணை விழியே
எனை இடர் செய்தவையே !
வளைவளர் தரு துறையே
மணம்விரி தரு பொழிலே
தளை அவழ்நறு மலரே
தனியவள்திரி இடமே
முனை வளர் இளநகையே
முழுமதி புரை முகமே
இளையவள் இணைமுலையே
எனைஇடர் செய்தவையே !
கடல்புக்கு உயிர்கொன்று வாழ்வர்நின்ஐயர்
உடல்புக்கு உயிர்கொன்று வாழ்வை மன்நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலை யோபாரம்
இடர்புக்கு இடுகும்இடைஇழ வல்கண்டாய்!
18. கொடுங்க ண்வலையால் உயிர்கொள்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்கொல்வை மன்நீயும்
வடங்கொள்முலையால்மழைமின்னுப்போல
நுடங்கி உகும்மென்நுசுப்பு இழவல்கண்டாய்!
ஓடும் திமில்கொண்டு உயிர் கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்கொல்வை மன்நீயும்
பீடும்பிறர் எவ்வம்பாராய் முலை சுமந்து
வாடும் சிறு மென்மருங்கு இழவல் கண்டாய்! 92
பவள உலக்கை கையால் பற்றி
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
குவளை அல்ல கொடிய கொடிய!
புன்னை நீழல் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
கொன்னே வெய்ய கூற்றம்கூற்றம்!
கள்வாய் நீலம் கையின் ஏந்திப்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
வெள்வேல் அல்ல வெய்ய வெய்ய!
சேரல்மட அன்னம் சேரல்நடை ஒவ்வாய்
சேரல்மட அன்னம் சேரல்நடை ஒவ்வாய்
ஊர்திரை நீர்வேல் உழக்கித் திரிவான்பின்
சேரல்மட அன்னம் சேரல்நடை ஒவ்வாய்!
தெளிவுரை:
கோவலன் தொடர்ந்து, “நறுமணம் கமழும் மலர்கள் நிறைந்த
சோலையின் கண்ணே விரிந்த வெண்மணற் பரப்பில் பருத்த
மார்பகங்களும், முழுநிலவைப் போன்ற முகமும் வளைந்த வில்
போன்ற புருவங்களும், மின்னலைப் போன்ற இடையும் கொண்டு
விளங்கும்அத்தெய்வ அணங்கு போன்றவள் என்னைக் காதல்
நோயில் ஆழ்த்தி இடர் செய்கன்றனள்.”
“அலைகளை வீசும் கடற்கரையும் அழகிய வெண்மணற்
பரப்பும் நறுமண மலர்களைத் தரும் பொழிலும் உள்ள
இவ்விடத்தில் வாசனை நிலவும் சுருண்ட கூந்தலும், முழுநிலவைப்
போன்ற திருமுகமும், கயல் போன்ற விழிகளும் உடைய
இத்தெய்வ அணங்கு என்னைக் காதல் நோயில்ஆழ்த்தி இடர்கின்றனள்.
சங்குகளைத் தரும் கடற்கரையும் நறுமணம் கமழும் சோலையும்,
இதழ் கவள விரித்து வாசனை நல்கும் மலர்களும் தனியே
திரியும் அத்தெய்வமகளின் இட அமைப்பும், புன்முறுவலும்,
முழுமதி போன்ற முகமும், இளமையுடைய மார்பகங்களும்
என்னைக் காதல் நோயில் ஆழ்த்தி இடர்செய்கின்றன.
பெண்ணே! நின்னைப் பெற்றவர்கள் கடலிற் சென்று மீன்களைப்
பிடித்து வருதலின் வழி அவற்றைக் கொன்று வாழ்பவர்கள்.
நீயோ என்னுள்ளே புகுந்து உயிரை வருத்து கின்றாய்.
வலிமை மிகுந்து கச்சுக்கு அடங்காத மார்பகங்களின் சுமையைத்
தாங்காது நின் மென்மையான இடையை இழந்து விடாதே!
பெண்ணே! வலைந்த கண்களையுடைய வலையைக் கொண்டு
மீன்களைக் கவர்ந்து வருபவர் நின்தந்தை. நீண்டு விளங்கும்
கண்ணாகிய வலையால்நீ என்னுயிரைக் கவர்பவளாயினை
முத்துமாலைகள் புரளும் நின்பருத்த மார்பகங்களின் சுமையால்
மழையில் தோன்றும் மின்னலைப்போன்றுள்ள நின் இடையானது
நலிந்து இழந்து விடக்கூடாது.
பெண்ணே! கடலில்செல்லும் படகைக் கொண்டு மீன்
இனங்களைக் கவர்பவர் நின் பெற்றோர்ஆவர். வளைந்த நின்
புருவங்களைக் காட்டி என்னை வருத்துகின்றனை. நின்னுடைய
பெருமையினையும், நின்னால் பிறர்படும் காதல் துன்பத்தையும்
நோக்காது பருத்த மார்பகங்களின் சுமையைத் தாங்காது
நின்னுடைய சிறிய இடையை இழந்துவிடாதே!
பெண்ணே! பவளத்தால் செய்த உலக்கையைக் கொண்டு
சிப்பிகளைக் குத்தி முத்துகளைக்கொழிக்கும் நின்னுடைய கண்கள்
குவளை மலர்அன்று. அவை கொடுமை உடையனவே/
பெண்ணே! புன்னைமரத்தின் நிழலில் உலரவைத்த இருக்கும்
மீன்களைக் காவல்புரிய நடந்து வருகின்றனை. அன்னம் போன்ற
நடைபயிலும் நின் கண்கள், கூற்றுவன் போன்று கொடியனவாகும்.
பெண்ணே நீல மலர்க்கொத்துகளைக் கையில் ஏந்தி உலர்ந்த
மீன்களை உண்ணுதற்கு வரும் பறவைகளை விரட்டிக்
கொண்டிருக்கும் நின்சிவந்த கண்கள்வேல் போன்று விளங்குவன
அன்று... அவற்றினும் கொடியனவாகும்.
அழகிய அன்னப்பறவையே! நீ அவளுடன்சேராதே!
உன்னுடைய நடையினைப்போன்று அவளது நடையழகு உள்ளது
என்பர். அவள்தன்னுடைய நடையழகால்உலகத்தையே வெற்றி
கொள்ளக்கூடியவள். ஆதலால்நீ அவள்பின்னே செல்லாதே!"
சிறப்புரை:
இங்குப் பெண்ணின் இடை எழிலை இனிது உரைத்தலை
நோக்குக. இத்தன்மையில் பெண் ஒருத்தியின் இடையானது மறந்து
வேறிடத் தில் வைக்கப்பட்டுள்ளதோ என்று ஐயம்பாடு கொள்ளும்
வகையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாலகாண்டம் எழுச்சிப்
படலத்தில்,
“தரங்கவார் குழல் தாமரைச் சீறடிக்
கருங்கண்வாளுடை யானையொர் காளை தான்
நெருங்கு பூண்முலை நீள்வளைத் தோளினீர்
மருங்குல் எங்கு மறந்துவைத்தீர் என்றான்”
என்று சாற்றியவாறும் காண்க.
மற்றும்பெண்ணொருத்தியின்கண்கள்கொல்லும்தன்மை
யுடைய கூற்றத்திற்கு இங்குப்பாடல் 81-இல் உரைத்த வகையில்
திருவள்ளுவர், கூற்று என்பதனை முன்பு அறியாத நிலையில்
இப்போது அது பெண்தன்மையோடு விளங்கும்கண்களை
யுடையது என்று அறிந்தமையாக,
“பண்டறியேன்கூற்று என்பதனை இனியறிந்தேன்
பெண்தகையால்பேரமர்க்கட்டு”- திருக்குறள்1083
என்று சாற்றியவாறும்நோக்குக.
No comments:
Post a Comment