சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
20. கோவலனிடம் கவர்ந்த சிலம்பைக் கண்ணகி உடைத்தெறியப் பாண்டியன் தவற்றையுணர்ந்து தானே கள்வன் எனக் கூறி உயிர்துறத்தல்
ஒள்ளிழை
“நற்றிறம் படராக் கொற்கை வேந்தே!
என்காற் பொற் சிலம்பு மணியுடை அரியே எனத்
“தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழியாம் உடைச் சிலம்பு முத்துடை அரியேதருக” எனத் தந்து தான்முன் வைப்பக்
கண்ணகி அணிமணிக் கால்சிலம்பு உடைப்ப மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே! மணிகண்டு
தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன் “பொன் செய்கொல்லன் தன்சொல் கேட்டயானோ அரசன்! யானே கள்வன் !
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக்கஎன் ஆயுள் என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே தென்னவன்
கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கிக்
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று
இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி.
வெண்பா
அல்லவை செய்தார்க்கு அறம்கூற்றம் ஆம் என்னும்
பல்சுவையோர் சொல்லும் பழுதன்றே – பொல்லா
வடுவினையே செய்த வயவேந்தன் தேவி
கடுவினையே செய்வதூஉம் காண்.
காவி உகுநீரும் கையில் தனிச்சிலம்பும்,
ஆவி குடிபோன அவ்வடிவம் – பாவியேன்
காடெல்லாம் சூழ்ந்த கருங்குழலும் கண்டு அஞ்சிக்
கூடலான் கூடாயி னான்.
மெய்யில் பொடியும் விரிந்த கருங்குழலும்
கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும் – வையைக் கோன்
கண்டளவே தோற்றான் அக்காரிகை தன் சொற் செவிளில்
உண்டளவே தோற்றான் உயிர்.
தெளிவுரை:
பாண்டியன் இவ்வாறு கூறக் கேட்ட கண்ணகி தான் கவர்ந்தது
வறு! ஒரு சிலம்பு என்று அறியாதவனாக இருந்த பாண்டியனை
நோக்கி. நல்ல நீதமுறைகளை அறிந்து செயற்படாத கொற்கையின்
வேந்தனே என்னுடைய காலில் உள்ள பொன் சிலம்பு மாணிக்கப்
பால்களையுடையது என்றாள். அதனைக் கேட்ட வேந்தன்
பெருமைக்குரிய இப்பெண் உரைத்தது செம்மையான நன்மொழியே
ஆகும். எம்முடைய சிலம்பு முத்து மணிகளைக் கொண்டு
விளங்குவதாகும். அதனை இங்குக் கொண்டு வருக!' என்று
கூறக் காவலர்கள் அதனைக் கொண்டு வந்து அரசன் முன்னே
வைத்தார்கள்.
உடனே கண்ணகி அழகிய மாணிக்க மணிகளைப் பரல்களாக
உடைய அச் சிலம்பை எடுத்துத் தரையில் வீசி எறிந்து உடைக்க,
அதிலிருந்து மாணிக்க மணிகள் சிதறி மன்னன் வாயிலும்
முகத்திலும் தெறித்தன. இந்த மாணிக்கங்களைக் கண்ட அளவில்
அரசனது வெண்கொற்றக் குடை தாழ்ந்தது. செங்கோல் வளைந்தது.
'பொற்கொல்லனது பேச்சைக் கேட்டு ஆராயாது தீர்ப்பளித்த
யானோ அரசன் யானே கண்ணகியின் சிலம்பைக் கவர்ந்த
கள்வன்! உலகத்தைக் காவல் புரியும் ஆட்சிப் பெருமைக்கு
என்னால் பழி உண்டாயிற்று. என் ஆயுள் கெடுக! என்று கூறி
மயங்கி வீழ்ந்தனன். அப்போதே அவன் உயிர் பிரிந்து சென்றது.
பாண்டியன் பட்டத்து அரசியான கோப்பெருந்தேவி இச்செயலைக்
கண்டு நிலைகுலைத்துநடுங்கிக் கணவனை இழந்த பெண்களுக்கு
ஆறுதலாகக் காட்டக்கூடிய பொருள் உலகத்தில் எதுவும் இல்லை
என்பதால் தன் கணவன் பாதங்களைத்தொழுது வீழ்ந்து உயிர்
துறந்தாள்.
No comments:
Post a Comment