சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

18.கண்ணகி கடுஞ்சீற்றத்துடன்‌
அரசன்‌ முன்னே செல்லுதல்‌

இப்பால்‌
“வாயி லோயே! வாயி லோயே!
அறிவு அறை போகிய பொறி அறுநெஞ்சத்து  25

இறைமுறை பிழைத்தோன்‌ வாயிலோயே!
இணை அரிச்‌ சிலம்பொன்று ஏந்திய கையள்‌
கணவனை இழந்தாள்‌ கடையகத்தாள்‌ என்று
அறிவிப்‌ பாயே! அறிவிப்பாயே!” என,
வாயிலோன்‌, “வாழி எம்‌ கொற்கை வேந்தே வாழி!  30

தென்னம்‌ பொருப்பின்‌ தலைவ வாழி!
செழிய வாழி! தென்னவன்‌ வாழி!
பழியொடு படராப்‌ பஞ்சவ வாழி!
அடர்த்து எழு குருதி அடங்காப்‌ பசுந்துணிப்‌
பிடர்தலைப்‌ பீடம்‌ ஏறிய மடக்கொடி  96

வெற்றிவேல்‌ தடக்கைக்‌ கொற்றவை அல்லள்‌!
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல்கண்டு அருளிய அணங்கு, சூருடைக்‌
கானகம்‌ உகந்த காளி, தாருகன்
பேருரம்‌ கிழித்த பெண்ணும்‌ அல்லள்‌!

செந்தனள்‌ போலும்‌ ! செயிர்த்தனள்‌ போலும்‌!
பொற்றொழில்‌ சிலம்புஒன்று ஏந்திய கையள்‌
கணவனை இழந்தாள்‌ கடை அகத்‌ தாளே!
கணவனை இழந்தாள்‌ கடைஅகத்‌ தாளே என‌ 
வருக மற்று அவள்‌ தருக ஈங்கு என‌
வாயில்‌ வந்து கோயில்‌ காட்டக்‌
கோயில்‌ மன்னனைக்‌ குறுகினள்‌ சென்றுழி

தெளிவுரை:
அப்போது கண்ணகி அரண்மனையில்‌ காவல்‌ புரியும்
காவலனைநோக்கி சினம்‌ கொண்டவளாய்‌, வாயிற்காவலனே
அறிவுகெட்டு நெறி தவறிய மன்னனின்‌ வாயிற்காவலனே
கணவனை இழந்த பெண்ணொருத்தி சிலம்பு ஒன்றைக் கையில்
ஏந்தியவளாக வாயிற்புறத்தில்‌ உள்ளனள்‌ என்று அறிவிப்பாய்
என்றாள்‌.‌
கண்ணகியின்‌ தோற்றத்தையும்‌ சொற்களின்‌ வேகத்தையும் கண்டு
அஞ்சிய வாயிற்காவலன்‌ அரசனிடம்‌ சென்று வணங்கியவனாய்
“கொற்கை நகரின்‌ தலைவனே! வாழக்‌! தென்மலை எனப்படும்
பொதிய மலையின்‌ தலைவனே வாழ்க பாண்டியன்‌ நெடுஞ்
செழியனே! வாழ்க. பழிச்சொல்‌ சாராத பாண்டியமன்னனே!வாழ்க

"இரத்தம்‌ சொட்டும்‌ வெட்டப்பட்ட தலையைப்‌ பீடமாகக்
கொண்டுள்ளவளும்‌, வேலாயுதத்தைக்‌ கையில்‌ ஏந்தியவளுமாகிய
கொற்றவை அல்லள்‌! ஏழுகன்னிமார்களில்‌ இளையவளாகிய
பிடாரியும்‌ அல்லள்‌! சிவபெருமானை நடனப்‌ போட்டிக்கு‌
அழைத்தவளும்‌, சூரர்களை வதைத்தவளுமான காவியும்‌ அல்லள்
தாருகசுரன்‌ மார்பைப்‌ பிளந்த துர்க்கையும்‌ அல்லள்‌! பகை கொண்
டவள்‌ போலவும்‌, சினம்கொண்டவள்‌ போலவும்‌ உள்ளவளாய்
பொன்னால்‌ வார்க்கப்பட்ட சிலம்பு ஒன்றை ஏந்தியவளாய்க்
கணவனை இழந்தவளாய் ஒருபெண் வாயிர்புரத்தில் உள்ளனள்
என்றான்‌.

அரசன்‌ அவள்‌ வருவதாக நீ அவளை இங்கே அழைத்துவருக
என்று கூறவும் வாயிற்காவலன் சென்று கண்ணகியிடம் கூறி
அவளை உள்ளே அழைத்துச் சென்று மன்னனிடம் சேர்த்தான்
கண்ணகி மன்னன் முன்னே சென்றனள்.

சிறப்புரை: ‌

இங்கு கண்ணகியின் கோலத்தைக் கண்டு வாயிற்காவலன் அச்சம்  கொண்டமையும் அதனால் மன்னனுக்குக் கெடுதி விளையும் எனவும் முதன்மையாகச் சாற்றப்படுதல் காண்க.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages