சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

27. சேரமன்னன்‌ பெரும்படை
கொண்டு எழுதலை விளம்புதல்

ஆறிரு மதியினும்‌ காருக அடிப்பயின்று
ஐந்து கேள்வியும்‌ அமைந்தோன்‌ எழுந்து,
வெந்திறல்‌ வேந்தே வாழ்கநின்‌ கொற்றம்‌!
இரு நில மருங்கின்‌ மன்னர்‌ எல்லாம்நின்‌
திருமலர்த்‌ தாமரை சேவடி பணியும்‌
முழுத்தம்‌ ஈங்கு இது முன்னிய திசைமேல்‌

எழுச்சிப்‌ பாலை ஆக!” என்று ஏத்த
மீளா வென்றி வேந்தன்‌ கேட்டு
வாளும்‌ குடையும்‌ வடதிசைப்பெயர்க்க!” என
உரவு மண் சுமந்த அரவுத்தலை பனிப்பப்‌
பொருநர் ஆரப்பொடு முரசு எழுந்து ஒலிப்ப

இரவிடம்‌ கெடுத்த நிரைமணி விளக்கின்‌
விரவுக் கொடி அடுக்கத்து நிரையத்தானையோடு
ஐம்பெருங்‌ குழுவும்‌ எண்பே ராயமும்‌
வெம்‌ பரியானை வேந்தர்க்கு ஓங்கிய
கரும வினைஞரும்‌, கணக்கியல்‌ வினைஞரும்

தரும வினைஞரும், தந்திர வினைஞரும்
மண்திணி ஞாலம்‌ ஆள்வோன்‌ வாழ்க!” எனப்‌

பிண்டம்‌ உண்ணும்‌ பெருங்களிற்று எருத்தின்
மறமிகுவாளும்‌, மாலைவெண்‌ குடையும்
புற நிலைக் கொட்டப் புரிசையில் புகுத்திப்

புரைதீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன்
அரைசு விலங்கு அவையம் முறையில் புகுதர
அரும்படைத் தானை அமர்வேட்டுக் கலித்த

பெரும்படைத்‌ தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப்
பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி
வாய்வாள்‌ நெடுந்தகை மணிமுடிக்கு அணிந்து
ஞாலம்‌ காவலர்‌ நாள்திறை பயிரும்‌.
காலை முரசம்‌ கடைமுகத்து எழுதலும்‌,
நிலவுக்கதிர்‌ முடித்த நீள்‌ இரும்‌ சென்னி
உலகு பொதி உருவத்து உயர்ந்தோன்‌ சேவடி

மறம்‌ சேர்‌ வஞ்சி மாலையொடு புனைந்து
இறைஞ்சாச்‌ சென்னி இறைஞ்சிவலம்‌ கொண்டு
மறையோர்‌ ஏந்திய ஆவுதி நறும்‌ புகை
நகைகெழு மாலையின்‌ நல்லகம்‌ வருத்தக்‌
கடக்களி யானைப்‌ பிடர்த்தலை ஏறினன்‌:

தெளிவுரை:
அப்போது பன்னிரண்டு ராசிகளின்‌ தன்மையினையும்
ஆங்குள்ள கிரகங்களின்‌ நிலையினையும்‌, மற்றும்‌ திதி, நட்சத்திரம்‌,
வாரம்‌ (கிழமை) யோகம்‌, கரணம்‌ ஆகியவற்றின்‌ நிலையினையும்‌
நன்கு அறிந்த நிமித்திகன்‌ எழுந்து, "வீரம்‌ மிக்க வேந்தனே! நின்‌
வெற்றியை இத்நிலவுலக வேந்தர்கள்‌ யாவரும்‌ போற்றுவதாக‌
நின்‌ புகழ்‌ ஒங்குவதாக! நின்‌ ஆட்சி வாழ்க! எல்லா மன்னர்களும்
நின்‌ பாதங்களைப்‌ பணிந்து ஏத்தும்‌ காலம்‌ இதுவே ஆகும்‌. நீ
நினைத்த திசையை நோக்கிப்‌ போர்க்கு எழுவாயாக! என்றான்
உடனே செங்குட்டுவன்‌, வாளும்‌ வெண்கொற்றக்குடையும்‌ வட
திசை நோக்கி எழுக!” என்றான்‌.

இப்பூமியைத்‌ தாங்கியுள்ள ஆயிரம்‌ தலையுடைய ஆதிசேடன்‌
தலை முழங்கும்படிப்‌ படை வீரர்களின்‌ ஆரவாரமும்‌, முரசொலியும்‌
முழங்க இரவுப்‌ பொழுதின்‌ இருளும்‌ கெடுமாறு வரிசையாக
விளங்கும் மணிவிளக்கொளியில்‌ அடுக்கிய கொடி வரிசை
போன்று படைகள்‌ நெருங்கி மேவிக்‌ காணப்பட்டன அரசனுக்கு
ஆலோசனை கூறும்‌ ஐம்பெருங்குழுவினரும்! எண்பேராயத்தினரும்‌
உடன் ஏகினர்‌. அரசனுக்கு நெருக்கமானவர்களும் சோதிடர்களும்,
அறங்கூறுபவரும்‌, படைத்தலைவரும்‌ மன்னனை வாழ்க என
வாழ்த்தினர்‌. உணவு உருண்டையை உண்ணும்‌ பட்டத்து யானை
யின்‌ கழுத்தில்‌ வீரவாளையும்‌ வெண்கொற்றக்‌ குடையையும்‌
அணிவித்து ஏத்தினார்கள்‌: பட்டத்து யானையுடன் படை

வரிசையானது கடக்கவுள்ள தருணத்தில்‌ வஞ்சிமாலையும்பனம்‌
பூமாலையும்‌ அணிந்த அரசன்‌ தன்‌ அரசவையை அடைந்தான்‌.

அரிய படைக்கலங்களை ஏந்திய வீரர்களுக்கும்‌ சேனைத்தலை
வர்களுக்கும்‌ பெருஞ்சோற்று விருந்தளித்த சேர மன்னன்‌ வஞ்சிப்‌
பூவைத்‌ தன்‌ தலையில்‌ சூடினான்‌. வேற்று நாட்டு மன்னர்கள்‌
திறைப்‌ பொருளை அளிக்கலாம்‌ என்று முரசு முழங்கியது. மன்னன்‌
பிறைச்‌ சந்திரனைச்‌ சூடிய சடைமுடியுடைய சிவபெருமான்‌
திருவடியை வணங்கியவனாய்த்‌ தொழுதான்‌. அப்போது
அந்தணர்கள்‌ வேள்விப்‌ புகையை ஏந்தி எதிர்கொள்ள அவன்‌
யானையின்‌ மீது ஏறி அமர்ந்தான்‌.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages