சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
31. தமிழரைப் பழித்த கனகவிசயரை வெற்றிகொள்ள
வேண்டும் என்று கூறிய சேரன் செங்குட்டுவன்
கங்கையைக் கடந்து செல்லுதல்
அடல்வேல் மன்னவர் ஆருயிர் உண்ணும்
கடல் தம் தானைக் காவலன் உரைக்கும்
“பால குமரன் மக்கள் மற்றவர்
காவா நாவில் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம் மொடும் கூடி
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு எனக்
கூற்றம் கொண்டுஇச் சேனை செல்வது
நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி ஆங்குக்
“கங்கைப் பேர் யாறு கடத்தற்கு ஆவன
வங்கப் பெருநிரை செய்க தாம் எனச்
சஞ்சயன் போனபின் கஞ்சுக மாக்கள்
எஞ்சா நாவினர் ஈர் ஐந் நூற்றுவர்
சந்தின் குப்பையும் தாழ்நீர்முத்தும்
தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து
கண் எழுத் தாளர் காவல வேந்தன்
மண்ணுடை முடங்கல்அம் மன்னவர்க்கு அளித்தாங்கு,
ஆங்குஅவர் ஏகிய பின்னர், மன்னிய
வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் ஓங்கிய
நாடாள் செல்வர் நல்வலன் ஏத்தப்
பாடி இருக்கை நீங்கிப் பெயர்ந்து,
கங்கைப் பேரியாற்றுக் கன்னரில் பெற்ற
வங்கப் பரப்பின் வடமருங்கு எய்தி,
ஆங்கு அவர் எதிர்கொள அந்நாடு கழிந்தாங்கு
ஆல டே சதிரகொள அந்நாடு கழிந்தாங்கு ள்.
ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇப்
பகைப்புலம் புக்குப் பாசறை இருந்த
தகைப் பாரும் தானை மறவோன் தன்முன்
உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன்,
சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன்,
வடதிசை மருங்கின் மன்னவா் எல்லாம்
தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் எனக்
கலந்த கேண்மையில் கனக விசயர்
நிலந் திரைத் தானையொரு நிகர்த்து மேல்வர;
சஞ்சயன் தெரிவித்ததைக் கேட்டதும் பகையரசர்களின் உயிரைக்
கொள்ளும் பெருஞ்சேனையுடைய மன்னன், "வீரனே பாலகுமரன்
புதல்வர்களான கனகன், விசயன் ஆகியோர் நாவைக் காவாதவர்
களாய் விருந்தினர்களாய் இருந்த மன்னர்களின் இடையே
இருக்கும்போது தமிழ் மன்னர்களின் ஆற்றலினை இழித்தும்
பழித்தும் உரைத்தார்கள். இச்செய்தியை அறிந்து அவர்களுக்கு
இயமன்போன்று இச்சேனையானது செல்கிறது. ஆதலால் நீ
நூற்றுவர் கன்னர்க்கு இச்செய்தியை உரைத்து நாம் கங்கை நதியைக்
கடந்து செல்வதற்குரிய படகுகளை அமைக்குமாறு செய்க!" எனக்
கூறினான்.
“சஞ்சயன் அங்கிருந்து சென்ற பின்பு, பாண்டிய மன்னன்.
அனுப்பிய திறைப்பொருள்களோடு சந்தனக்குவியல்களும், கடல்
முத்தும் படைவீரர்கள் ஆயிரவரும் வந்து வணங்கி நின்றார்கள்,
அவர்கள் பாண்டியன் அனுப்பிய செய்தியை முத்திரை இடப்பட்ட
ஓலையின் வாயிலாகவும் அறிவிக்க அத்திருமுகத்தைச் சேரன்
கண்டான். பாண்டியமன்னன் அனுப்பிய திறைப்பொருளைப் ':
பெற்று மகிழ்ந்த நிலையில் சேரவேந்தன் நீலகிரியில் அமைத்த
பாசறையிலிருந்து எல்லாச் சேனைகளோடும் புறப்பட்டுக்
கங்கையாற்றை அடைந்தான். ஆங்கு நூற்றுவர்கன்னர் அமைத்த
படகுகளின் வாயிலாகக் கங்கையைக் கடந்த மன்னனை நூற்றுவர்
கன்னர் எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் வடபால் நீரை
வேலியாக உடைய பகைவரது நாட்டின் கண் பாசறை அமைத்துப்
பெருஞ்சேனையுடன்தங்கினான்.
ஆங்கு உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன்,
சிங்கன், தனுத்தரன், சிவேதன் என்னும் வடநாட்டு மன்னர்கள்
எல்லாம் தமிழ்நாட்டினரின் வலிமையைக் காண்போம் என்று
ஒன்று திரண்டு கனகன், விசயன் ஆகிய மன்னர்களிடம் கொண்ட
நட்பின் காரணமாகப் பெருந்திரளான சேனைகளோடு போர் புரியத்
தலைப்பட்டார்கள்.
No comments:
Post a Comment