சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
14. மாதவியின்கடிதத்தைக்கண்டறிந்த கோவலன்
அதையே தான் அளித்ததாகத் தன்பெற்றோரிடம்
கொடுக்குமாறு கவுசிகனிடம் உரைத்தல்.
உடன்உறை காலத்து உரைத்த நெய்வாசம்
குறுநெறிக் கூந்தல் மன்பொறி உணர்த்திக்
காட்டியது ஆதலின் கைவிடல் ஈயான்,
ஏட்ட கம் விரித்து ஆங்கு எய்தியது உணர்வோன்
அடிகள் முன்னர் யான்அடி வீழ்ந்தேன்
வடியாக்கிளவி மனம்கொளல் வேண்டும்
குறவர்பணி அன்றியும்குலப்பிறப்பு ஆட்டியோடு
இரவிடைக்கழிதற்குஎன்பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப்புரை போய் போற்றி
என்று அவள் எழுதிய இசைமொழி உணர்ந்து
தந்தீது இலள் எனத்தளர்ச்சி நீங்கி
என்தீது என்றே” எய்தியது உணர்ந்து ஆங்கு
என பயந்தோர்க்கு இம்மண்ணுடை முடங்கல்
பொற்பு உடைத்தாகப் பொருளுரை பொருந்தியது
மாசுஇல்குரவர் மலரடி தொழுதேன்;
கோசிக மாமணி காட்டு” எனக்கொடுத்து
நடுக்கம் களைந்து அவர் நல்லகம் பொருந்திய
இடுக்கண் களைதற்கு ஈண்டு எனப்போக்கி,
தெளிவுரை:
மாதவியோடு வாழ்ந்த காலத்தில் அவள் கூந்தலில் தடவிய
நறுநெய்மணத்தின் வாசம் அந்த ஓலையில் இடப்பட்ட மண்
இலச்சனையில் வீசுவதை உணர்ந்த கோவலன், அதனை ஒதுக்காது
கவுசிகனிடமிருந்து பெற்று அதிலிருந்த வாசகங்களைப்
படிக்கலானான்.
அந்த ஒலையில், “தங்கள் பாதங்களின் முன்விழுந்து வணங்குகின்றேன்.
தெளிவில்லாத நான் கூறுவதை மனத்தில் கொள்வீராக
பெற்ற தாய் தந்தையர்க்குப் பணிவிடை செய்யாது குலக்கொடியாகிய
உயர்பிறப்புடைய கண்ணகியோடு இரவுப் பொழுது
நீங்கியமை என்னுடைய பிழையை உணராது நெஞ்சம்
வருந்துகின்றது. இதனைப்பொறுத்தருள்க. பொய்ம்மை நீங்கிய
மேலோரே! நும்மைப்போற்றுகின்றேன் என்று எழுதப்பட்டிருந்தது.
இதை உணர்ந்த கோவலன், மாதவி குற்றம் அற்றவள் என்று கண்டனன். இத்தன்மையில் தன்னிடமே குற்றம் சார்ந்துள்ளது என்று உணர்ந்தான். பின்பு அவன் தன்னுடைய பெற்றோருக்கு
அக்கடிதத்தின் வாசகம்பொருத்தமாக அமைதலை அறிந்தான். அதனால் அவன் கவுசிகனைப் பார்த்துக் குற்றம் இல்லாத தன் பெற்றோர்களிடம் அக்கடிதத்தைத் தான் கொடுத்ததாகக்
காட்டுமாறு தெரிவித்து அவர்களது மனத்துயரைப் போக்குமாறு செய்யும்படி வேண்டினான்.
No comments:
Post a Comment