சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
29. தேவர்களும் நட்புடைய அரசர்களும்
சேரமன்னனை வாழ்த்தி மகிழ்தல்
இயங்குபடை அரவத்து ஈண்டொலி இசைப்ப
விசும்பு இயங்கு முனிவர் வியன்நிலம் ஆளும்
இந்திர திருவனைக் காண்குதும் என்றே
அந்தரத்து இழிந்தாங்கு அரசுவிளங்கு அவையத்து
மின்னொளி மயக்கும் மேனியொடு தோன்ற
மன்னவன் எழுந்து வணங்கிநின் றோனைச்
செஞ்சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவ! கேளாய்,
மலயத்து ஏகுதும் வான்பேர் இமய
நிலயத்து ஏகுதல் நின்கருத்து ஆகலின்
அருமறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர்
பெருநில மன்ன ! பேணல் நின் கடன் என்று
ஆங்கு அவர் வாழ்த்திப் போந்ததன் பின்னர்
“வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க எனக்
கொங்கணக் கூத்தரும், கொடுங்கரு நாடரும்,
தம்குலக்கு ஓதிய தகைசால் அணியினர்
இருள்படப் பொதுளிய சுருள் இரும் குஞ்சி
மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர்
வடம் சுமந்து ஓங்கிய வளர்இள வனமுலைக்
கருங்கயல் நெடுங்கண் காரிகை யாரொடு
இருங்குயில் ஆள இனவண்டு யாழ்செய,
அரும் பவிழ் வேனில் வந்தது, வாரார்
காதலர் என்னும் மேதகு சிறப்பின்
மாதர்ப் பாணி வரியொடு தோன்றக்,
தெளிவுரை:
சேரன்செங்குட்டுவனது சேனைகள் எழுப்பிய ஆரவார ஒலியைக்
கேட்டு வானகத்தில் விளங்கும் தேவர்கள் இந்திரன் போன்று
விளங்கும் இவ்வரசனைக் காண்போம் என்று எண்ணிவந்தார்கள்.
அப்போது உயர்ந்த சிம்மாசனத்தில் வீற்றிருந்த மன்னன் தனது
"இருக்கையிலிருந்து எழுந்து வந்து தேவர்களை வணங்கினான்.
மின்னென ஒளிரும் தேவர்கள் வேந்தனை நோக்கி, “ செஞ்சடை
யுடைய சிவபெருமான் திருவருளால் விளங்கும் வஞ்சி மாநகரின்
மன்னவனே! நாங்கள் பொதிய மலையை நோக்கிச் செல்கிறோம்.
இமயமலையை நோக்கிச் செல்லும் நீ, ஆங்குள்ள தவமுனிவர்கள்
துன்பம் அடையாதபடி காப்பது நினது கடமையாகும்” என்று
கூறி வாழ்த்தினார்கள்.
அப்போது கொங்கணர்கள் ஆங்கு வந்து, "கடல் சூழ்ந்த உலகை
ஆட்சிபுரியும் சேரமன்னன் வாழ்க] என்று வாழ்த்துதலானார்கள்.
அவர்களோடு கருநாடக நாட்டினரும் சேர்ந்து வாழத்துத
லானார்கள். நீண்டு கருத்த கண்களும், முத்துமாலை புரளும்
மார்பும், சுருண்ட கூந்தலும் உடைய பெண்கள் குயிலின்
இசையும், வண்டுகளின் யாழிசையும் விளங்கத் தம்காதலா் வரும்
இளவேனில் பருவம் வந்தும், காதலர் வரவில்லையே என்னும்
பொருள்பட வரிப்பாடல்களைப் பாடினார்கள்.
No comments:
Post a Comment