சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

30. கலைஞர்களுக்குப்‌ பரிசுப்பொருள்களை வழங்கிய
சேரமன்னனை நட்பரசர்கள்‌ வாழ்த்திப்‌ போற்றுதலை
உரைத்தல்‌

கோல்வளை மாதே! கோலம்‌ கொள்ளாய்‌!
காலம்‌ காணாய்‌! கடிது இடித்து உரறிக்‌
காரோ வந்தது! காதலர்‌ ஏறிய
தேரோ வந்தது! செய்வினை முடித்து எனக்
காஅர்க்‌ குரவையொடு கருங்கயல்‌ நெடுங்கண்‌.

கோற்றொடி மாதரொடு குடகா்‌ தோன்றத்‌.
தாழ்தரு கோலத்துத்‌ தமரொடு சிறந்து,
வாள்வினை முடித்து மறவாள்‌ வேந்தன்‌
ஊழிவாழி என்று ஓவர்‌ தோன்றக்‌
கூத்துள்‌ படுவோன்‌ காட்டிய முறைமையின்

ஏத்‌தினர்‌ அறியா இருங்கலன்‌ நல்கி
வேத்தினம் நடுக்கும். வேலோன்‌ இருந்துழி
நாடக மகளிர்‌ ஈர் ஐம்பத்து இருவரும்‌
கூடுஇசைக்‌ குயிலுவர்‌ இருநூற்றி எண்மரும்
தொண்ணூற்று அறுவகைப்‌ பாசண்டத் துறை.

நண்ணிய நூற்றுபர்‌ நகைவே ழம்பரும்
கொடுஞ்சி நெடுந்தேர்‌ ஐம்பதிற்று இரட்டியும்
கடுங்களி யானை ஓர்‌ ஐந்‌ நூறும்‌,
ஐஈ ராயிரம்‌ கொய்யுளைப்‌ புரவியும்‌,
எய்யா வடவளத்து இருபதி னாயிரம்‌,

கண்ணெழுத்துப்‌ படுத்தன கைபுனை சகடமும்‌,
சஞ்சயன்‌ முதலாத்‌ தலைக்கு ஈடுபெற்ற
கஞ்சுக முதல்வர்‌ ஈர்ஐந்‌ நூற்றுவரும்‌,
சேயுயர்‌ வில்கொடி செங்கோல்‌ வேந்தே
வாயிலோர்‌ “என, வாயில்‌ வந்து இசைப்ப,

“நாடக மகளிரும்‌ நலத்தகு மாக்களும்‌,
கூடுஇடைக்‌ குயிலுவ கருவி யாளரும்‌,
சஞ்சயன்‌ தன்னொடு வருக ஈங்கு” என
செங்கோல்‌ வேந்தன்‌ திருவிளங்கு அவையத்துச்‌
சஞ்சயன்‌ புகுந்து தாழ்ந்து பல ஏத்தி

ஆணையில்‌ புகுந்த ஈர்‌ ஐம்பத்து இருவரொடு
மாண்வினை யாளரை வாகைபெறக்‌ காட்டி
“வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த
நூற்றுவர்‌ கன்னரும்‌ கோற்றொழில்‌ வேந்தே!
வடதிசை மருங்கின்‌ வானவன்‌ பெயர்வது

கடவுள்‌ எழுத ஓர்‌ கற்கே ஆயின்‌,
ஓங்கிய இமயத்துக்‌ கற்கால்‌ கொண்டு
வீங்கு நீர்‌ கங்கை நீர்ப்படை செய்தாங்கு
யாம்‌ தரும்‌ ஆற்றலம்‌ என்றனர்‌ என்று
வீங்கு நீர்‌ ஞாலம்‌ ஆள்வோய்‌ வாழ்க!” என

தெளிவுரை:

“வளையல்களை அணிந்த பெண்ணே! இடி முழக்கம்‌ செய்யும்‌
கார்ப்பருவம்‌ வந்துற்றது. காதலர்‌ சென்ற பணிமுடித்து வெற்றி
கொண்டு திரும்பி வருகின்ற தேரும்‌ வந்துற்றது. உன்னை அழகு
படுத்திக்‌ கொள்‌ என்று சாற்றும்‌ கருத்துடைய குரவைப்‌ பாட்டு
இசைத்தவர்களாய்க்‌ குடகு நாட்டினர்‌ ஆங்குக்‌ குழுமினார்கள்‌.
வெற்றிவீரவாள்‌ ஏந்திய வேந்தன்‌ வாழ்க! உலகம்‌ உள்ளளவும்‌
நீடு வாழ்க!" என்று வாழ்த்தியவாறு அரசனை ஏத்திப்‌ புகழ்‌
சாற்றுவோர்‌ தெரிவித்தார்கள்‌. மன்னன்‌, தனது முன்னே நடனம்‌
ஆடியும்‌ பாடியும்‌ மகிழ்வித்த பெண்களுக்கு அவர்கள்‌ மனம்‌
மகிழுமாறு அணிகலன்களையும், உயர்ந்த ஆடைகளையும்
பரிசாகக்‌ கொடுத்தான்‌.

அப்போது நடனம்‌ ஆடும் மகளிர் நூற்று இரண்டு பேரும்‌
இசைக் கருவிகளை இயக்கம்இருநூற்று எட்டு பேரும்‌, சாத்திர
விற்பன்னர்கள்‌ தொண்ற்று ஆறு பேரும்‌ நகைச் சுவைக்‌
கலைஞர்கள் நூறுபேரும்‌, தாமரை வடிவம்‌ கொண்ட தட்டுகளை
யுடைய தேர்கள்‌ நூறும்‌, மதக்களிப்புடைய யானைகள்‌ ஐந்நூறும்‌,
பிடரிமயிர்‌ உடைய குதிரைகள்‌ பத்தாயிரமும்‌, வளம்மிக்க
பொருள்கள்‌ றறப்பட்டுள்ள வண்டிகள்‌ இருபதினாயிரமும்‌ உடன்‌
தொடர வருபவனாய்‌, சஞ்சயன்‌ என்பவன்‌ தலைமையில்‌ தலைப்‌
பாகை அணியப்பெற்ற வீரர்‌ தலைவர்கள்‌ வந்தார்கள்‌, அத்தகைய
செய்தியை வாயில்‌ காவலர்கள்‌ சேரமன்னனிடம்‌ தெரிவித்தார்கள்‌.

அரசனது ஆணையின்படி, சஞ்சயன்‌ தம்மோடு வந்தவர்களுடன்‌
மன்னனை வணங்கித்‌ தொழுதான்‌. சஞ்சயன்‌ சேரனை நோக்கி,
'வெற்றி வேலேந்திய மன்னர்‌ தலைவனே! நாங்கள்‌ நின்பால்‌ '
குறையாத அன்பு உடையவர்கள்‌. நீ வட திசை நோக்கிப்‌ போவதை
அறிந்து மகிழ்ந்தோம்‌. நின்னுடைய நட்பு அரசர்களான நூற்றுவர்‌
"கன்னரின்‌ தூதுவனாக நான்‌ இங்கு வந்துள்ளேன்‌. கடவுள்‌ சிலை
ஒன்றை வடிப்பதற்காக வந்துள்ளதால்‌ அக்கல்லை உனக்காக
நாங்களே இமயம்‌ சென்று பெயர்த்துக்‌ கொண்டு வருகின்றோம்‌
என்று வணங்கிக்‌ கூறியவனாய்‌ நாடக மகளிர்களையும்‌ வாத்தியக்‌
கருவிகளை இயக்குபவர்களையும்‌ அறிமுகப்படுத்தினான்‌.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages