சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

33. சேரமன்னன் போரில் வெற்றிகொண்டு
சிலைவடிக்கக்‌ கல்‌ கொண்டமை உரைத்தல்

வாய்வாள்‌ ஆண்மையின்‌ வண்தமிழ்‌ இகழ்ந்த
காய்வேல்‌ தடக்கைக்‌ கனகனும்‌, விசயனும்

ஐம்பத்தி இருவர்‌ கடுந்தே ராளரோடு,
செங்குட்டுவன்‌ தன்‌ சினவலைப்‌ படுதலும்‌,
சடையினர்‌, உடையினர்‌, சாம்பல்‌ பூச்சினர்‌,

பீடிகைப்‌ பீலிப்‌ பெருநோன்‌ பாளர்‌,
பாடு பாணியர்‌, பல்லியத்‌ தோளினர்‌,
ஆடு கூத்தர்‌, ஆகி எங்கணும்‌
ஏந்துவாள்‌ ஒழியத்‌ தாம்துறை போகிய
விச்சைக்‌ கோலத்து வேண்டுவயிற்‌ படர்தரக்

கச்சை யானைக்‌ காவலர்‌ நடுங்கக்‌
கோட்டுமாப்‌ பூட்டி வாட்கோல்‌ ஆக,
ஆளழி வாங்கி அதரி திரித்த
வானேர்‌ உழவர்‌ மறக்களம்‌ வாழ்த்தித்
தொடியுடை நெடுங்கை தூங்கத்‌ தூக்கி,

முடியுடைக்‌ கருந்தலை முந்துற ஏந்திக்
கடல்‌ வயிறு கலக்கிய ஞாட்பும்‌, கடல்‌ அகழ்
இலங்கையில்‌ எழுந்த சமரமும்‌, கடல வணன்
தேரூர்‌ செருவும்‌ பாடிப்‌ பேரிசை
முன்தேர்க்குரவை முதல்வனை வாழ்த்திப்

பின்தேர்க்குரவைப் பேயாடு பறந்தலை
முடித்தலை அடுப்பில்‌ பிடர்த்தலைத் தாழித்
தொடித்‌ தோள்‌ துடுப்பின் துழைஇய‌ ஊன் சோறு
மறப்‌பேய்‌ வாலுவன் வின் அறிந்து ஊட்டுச்
சிறப்பூண் கடிஇனம் செங்கோல் கொற்றத்து

அரைக்கலாம் செய்தோன் ஊழி வாழ்க என
மறக்களம் முடிந்த வாய்வாள் குட்டுவன்

மூடி சூடப்பெற்ற வெட்டுண்ட தலைகளால்‌ ஆன அடுப்பில்‌
யானையின்‌ கழுத்து என்னும் தாழியில்‌ வளையணிந்த தோள்‌
களாகிய துடுப்பில் துழாவிச் சமைத்தஊன் உணவைச் செய்து
உட்கொண்ட பேய்க்‌ கூட்டத்திற்கு‌ நல்ல விருந்தை உண்டாக்கிய
சேரமன்னன், நெடிது காலம்‌ வாழக என வாழ்த்துக்‌ கூறப்பட்டது.
இவ்வாறு பெருவீரம்‌ புரிந்த சேர மன்னன்‌, வேதம்‌ ஓதியும்‌, '
மூன்றுவகையான தீ வளர்த்து வேள்விகளைப்‌ புரியும்‌ அந்தணர்‌
களைப்‌ பேணிக்‌ காக்குமாறு ஆணையிட்டனன்‌. வில்லவன்‌
கோதை என்னும்‌ அமைச்சரோடு வடபுலப்‌ பகையரசர்களை வெற்றி
கொண்ட சேரன்‌. இமயமலையிலிருந்து ஒப்பற்ற பத்தினிக்‌ கடவு
ளான கண்ணகிக்குச்‌ சிலை வடித்தற்குரிய கல்லைக்‌ கொண்டனன்‌.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages