சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
25. கால் கோள் காதை
இது கண்ணகிக்குச் சிலைவடிக்க இமயமலையிலிருந்து
கல்கொண்டுவரும் பொருட்டுப் படைகளுடன் சென்று ஆரிய
அரசர்களை வெற்றிகொண்டமையை விளம்புவது.
விளக்கக் குறிப்பு:
யானையின் மீது முரசினை ஏற்றி வடநாடு செல்வதற்குரிய
செய்தியை அறிவித்த சேரமன்னன் படைகளோடு புறப்படலானான்
ஆரிய அரசர்களான கனகன், விசயன் ஆகிய இருவரும் தமிழக
அரசர்களை இகழ்ந்து ௨ரைத்தனர்என்று கூறக்கேட்ட சேர
மன்னன் அத்தகைய அரசர்களின் தலையின் மீது இமய மலையி
லிருந்து எடுக்கும் கல்லை ஏற்றிக் கொண்டு வருவதாகச் சபதம்
செய்தான். பின்பு வாளையும், வெண்கொற்றக் குடையையும் புறப்
படச் செய்து இறைவனை வணங்கி யானையின் மீது ஏறி நான்கு
வகையான படைகள் சூழப் புறப்பட்டான். செல்லும் வழியில்
கொங்கணர், கூத்தர் முதலானோருடை.ய கூத்துகளைக் கண்டு மதிழ்ந்து பற்பல மன்னர்களும் அளித்த திறைப் பொருள்களைப்
பெற்றுக் கொண்டவனாய்க் கங்கையை அடைந்தான். பின்னர்க்
கங்கையாற்றைக் கடந்து ஆரிய மன்னர்களான கனகன் விசயன்.
ஆகியவர்களையும் அவர்களுக்குத் துணைவந்த உத்தரன் முதலான
மன்னர்களையும் எதிர்த்துப் போர் செய்தான். ஆரிய மன்னர்கள்
போரில் தோற்று ஓட அவர்களை அகப்படுத்தியவனாய் இமய
மலையிலிகுந்து கண்ணகிக்கு சிலை வடிக்கக் கல்கொண்டனன்.
No comments:
Post a Comment