சுக்கா... மிளகா... சமூகநீதி?
தொடர் சிறப்புத் தேர்வுகள்! - மருத்துவர் இராமதாசு அய்யா
இந்தியாவின் சமூகநீதி வரலாறு குறித்த ‘‘சுக்கா... மிளகா... சமூகநீதி?’’ தொடரின் 51 அத்தியாயங்களில் இடம்பெற்றுள்ள வரலாறுகள் குறித்து 2 அத்தியாயங்களுக்கு ஒரு தேர்வு வீதம் மொத்தம் 25 தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தேர்வுகளில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் காட்டிய ஆர்வமும், தேர்வுகளில் சரியான விடை அளித்தவர்களின் எண்ணிக்கையும் மிகுந்த உற்சாகமளிக்கின்றன.
அடுத்தக்கட்டமாக இரு சிறப்புத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. இவற்றில் முதல் தேர்வுக்கான வினாக்கள் 51-ஆவது அத்தியாயத்தில் இருந்து கேட்கப்படும். மொத்தம் 20 வினாக்கள் இடம் பெறும். ஒவ்வொரு வினாவுக்கான விடையும் ஒரு வார்த்தை அல்லது இரு வார்த்தைகளில் எழுதும் வகையில் இருக்கும்.
இரண்டாவது சிறப்புத் தேர்வு பாட்டாளி சொந்தங்களின் உணர்வுகளையும், கருத்துகளையும் அறியும் வகையில் அமைந்திருக்கும். இரண்டாவது சிறப்புத் தேர்வில் ஒரே ஒரு வினா மட்டும் தான் இடம் பெறும். அதற்கான விடையை ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளில் எழுதினால் போதுமானது.
முதல் சிறப்புத் தேர்வு வரும் 21-ஆம் தேதி திங்கட்கிழமையும், இரண்டாவது சிறப்புத் தேர்வு வரும் 23-ஆம் தேதி புதன்கிழமையும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்வு எழுத அனைத்துப் பாட்டாளிகளும் தயாராகுங்கள்!
No comments:
Post a Comment