பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் உயிரிழந்தார். உலகம் முழுவதும் உள்ள எஸ்பிபி ரசிகர்கள் அதிர்ச்சி.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நிலையில் நேற்று திடீர் பின்னடைவு ஏற்பட்டது.
தற்போது எஸ்பிபி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவிப்பு.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
அதற்குப் பிறகு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாகச் சகஜ நிலைக்கு திரும்பி வந்தார்.
வாய் வழியாகச் சாப்பிடும் அளவுக்கு அவருடைய உடல்நிலை தேறியது.
இதனால் திரையுலகினர், ரசிகர்கள் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
எஸ்பிபி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்நிலையில் திடீரென்று நேற்று அவருடைய உடல்நிலை மோசமடைந்ததாகவும், கவலைக்கிடமாக உள்ளதாகவும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இன்று பிற்பகல் 1 மணி அவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டு உள்ளது அவரது ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment