சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

23. ஆரவாரம்‌ மிகுந்த மலைப்பகுதியில்‌ இருந்த
மன்னன்‌ முன்னே குறவர்கள்‌ காணிக்கைகளைத்‌
தந்து தாம்‌ பத்தினிக்‌ கடவுளான கண்ணகியைக்‌
கண்டது பற்றி உரைத்தல்‌

குன்றக்‌ குரவையொடு கொடிச்சியர்‌ பாடலும்‌,
வென்றிச்‌ செல்வேள்‌ வேலன்‌ பாணியும்‌,

தினைக்குறு வள்ளையும்‌, புனத்து எழு வளியும்‌,
நறுவுக்கண்‌ உடைத்த குறவர்‌ ஓதையும்‌,
பறைஇசை அருவிப்‌ பயன்கெழும்‌ ஓதையும்‌,
புலியொடு பொரூ௨உம்‌ புகர்முக ஓதையும்‌,
கலிகெழு மீமிசைச்‌ சேணோன் ஓதையும்‌

பயம்பில்‌ வீழ்‌ யானைப்‌ பாகர்‌ ஓதையும்‌,
இயங்கு படை அரவமோடு யாங்கணும்‌ ஒலிப்ப,
அளந்து கடை அறியா அருங்கலம்‌ சுமந்து
வளம்‌ தலை மயங்கிய வஞ்சி முற்றத்து
இறைமகன்‌ செவ்வி யாங்கணும்‌ பெறாது,

திறைசுமந்து நிற்கும்‌ தெவ்வர்‌ போல‌
யானைவெண்‌ கோடும்‌, அகிலின்‌ குப்பையும்‌,
மான்மயிர்க்‌ கவரியும்‌, மதுவின்‌ குடங்களும்
சந்தனக்‌ குறையும்‌, சிந்துரக் கட்டியும்,
அஞ்சனத்‌ திரளும்‌ அணி அரி தாரமும்‌,

ஏல வல்லியும்‌, இருங்கறி வல்லியும்
கூவை நூறும் கொழுங்கொடிக்‌ கவலையும்‌,
தெங்கின் பழனும் தேமாங்‌ கனியும்‌,
‌பைங்கொடிப் படலையும்‌, பலவின்‌ பழங்களும்‌,
காயமும்‌, கரும்பிம்‌, பூமலி கொடியும்‌,

கொழுந்தாழ் கமுகின்‌ செழுங்குலைத்‌ தாறும்‌,
பெருங்குலை வாழையின்‌ இருங்கனித்‌ தாறும்‌,
ஆளியின்‌ அணங்கும்‌, அரியின்‌ குருளையும்,‌
வாள்‌ வரிப்‌ பறழும்‌, மதகரிக்களபமும்‌,
குரங்கின்‌ குட்டியும்‌, குடாவடி உளியமும்‌,

வரை ஆடு வருடியும், மடமான் மாறியும்,
காசறைக்‌ கருவும்‌, ஆசறு நகுலமும்‌,
பீலி மஞ்சையும்‌, நாவியின்‌ பிள்ளையும்‌,
கானக்‌ கோழியும்‌, தேன்மொழிக்‌ கிள்ளையும்‌,
மலைமிசை மாக்கள்‌ தலைமிசைக்‌ கொண்டாங்கு,

“ஏழ்‌ பிறப்பும்‌ அடியேம்‌! வாழ்க நின்‌ கொற்றம்‌!
கான வேங்கைக்‌ கீழ்‌ ஓர்‌ காரிகை
தான்முலை இழந்து, தனித்துயர்‌ எய்தி,
வானவர்‌ போற்ற மன்னொடும்‌ கூடி,
வானவர்‌ போற்ற வானகம்‌ பெற்றனள்‌;

எந்நாட்‌ டாள்‌ கொல்‌! யார்மகள்‌ கொல்லோ !
நின நாட்டு யாங்கள்‌ நினைப்பினும்‌ அறியேம்‌
பன்னூறு ஆயிரத்து ஆண்டு வாழியர்‌” என,

தெளிவுரை:
வேடுவர்கள்‌ குரவைப்‌ பாடலும்‌ குறத்தியர்‌ பாடி ஆடும்
எழிலும்‌ விளங்கச்‌ செவ்வேளாகிய முருகப்‌ பெருமானை ஏத்திப்‌
புகழும்‌ பாடல்களையும்‌ இசைத்தவாறு, தினைமாவு இடிக்கும்‌
வள்ளைப்பாடலும்‌, தினைப்புனத்தில்‌ ஆயல்‌ ஓட்டும்‌ பாடல்
களும்‌, தேன்‌ கூட்டினை உடைக்கும்‌ ஆரவார இசைப்பாடல்களும்
இனிது அமையுமாறு ஓசையெழுப்பி மன்னனை நோக்கி வந்
தார்கள்‌. அவர்கள்‌ வரும்‌ போது பறையொலி நீபோல அருவிகள்‌
எழுப்பும் ஓசையும், புலியோடு போர்‌ செய்யும்‌ யானையின்‌ பிளிறல்
ஒலியும்‌, மரங்களின்‌ உயரத்தில்‌ கட்டப்பட்ட பரண்களிலிருந்து
விலங்குகளை விரட்டும்‌ வேடுவர்களின் ஒலியும்‌, குழிகளைத்
தோண்டி அதில் விழுந்த யானைகளைப் பிடிக்கும் ஆரவார ஒலியும்,
சேர்ந்து எழுந்தன.

அளவிடுவதற்கு அறிய செல்வ வளம் நிறைந்த வஞ்சி நகரத்தின்
அரண்மனை வாயிலில்‌ திறைப்‌ பொருள்களைச்‌ சுமந்து கொண்டு
அரசனைக்‌ காண நிற்கும் பகையரசர்கள் போல வேடுவர்கள்‌
அரசனுக்கு என்று காணிக்கைப்‌ பாருள்களாக யானைத்‌ தந்தம்,‌
அகில்‌ மரத்துண்டுகள்‌, மான் கொம்புகள்‌,மயிர்க்கவரியாகியசாமரம்,
தேன்குடம்‌, சந்தனத் துண்டுகள்,சிந்துரக்‌ கட்டிகள்‌,
நீலக்‌ கற்கள்‌, கத்தூரி, ஏலக்கொடி,மிளகுக்கொடி, கூவைக் கிழங்கின்‌ தூள்‌,
கவலைக்‌ கிழங்கு, தேங்காய், மாங்கனி,பச்சிலைக்‌கொடி, பலாப்பழம்,
வெள்ளைப்‌ பூண்டு,கரும்பு, பூங்கொத்துகள்‌,முற்றிய பாக்குமரத்தின்‌ குலை,
வாழைக்குலை,யாளியின்‌ குட்டி, சிங்கக் குட்டி, புலிக்குட்டி, யானைக்‌ கன்று,
குரங்குக்குட்‌டி,கரடிக்குட்டி, ஆட்டுக்‌ குட்டி, மான்‌ கன்று, வருடை என்னும்‌
மான், கீரிப்‌ பிள்ளை, ஆண்மயில்‌, புனுகுப்‌ பூனைக்‌ குட்டி,
காட்டுக்கோழி, இனிய சொல்‌ புகலும்‌ கிளி, எனப்‌ பலவும்‌ தம்‌
தலை மீது சுமந்தவாறு கொண்டு வந்தார்கள்‌.

அவர்கள்‌ மன்னனை வாழ்த்தி வணங்கியவர்களாய்‌, வேந்தே!
நின்‌ கொற்றம்‌ வாழ்க! நாங்கள்‌ ஏழு பிறப்பிலும்‌ உனக்குத்‌
தொண்டு செய்யும்‌ அடியவர்‌ ஆவோம்‌. ஒருபகுதி மார்பகத்தை
இழந்தவளாகிய ஒரு பெண்‌ பெருந்துயர்‌ கொண்டவளாகி
இக்காட்டில்‌ உள்ள வேங்கை மரத்தின்‌ கீழ்‌ நின்றிருந்தாள்‌. பி்‌ன்பு
தேவர்கள்‌ போற்றி ஏத்த அவள்‌ தன்னுடையகணவனோடு
வானுலகத்தை நோக்கிச்‌ சென்றனள்‌. அவன்‌ எந்த நாட்டைச்
சேர்ந்தவளோ? யார் பெற்ற பெண்ணோ?  நாங்கள்அறிந்திலோம்.
உன்னுடைய நாட்டு மக்களாகிய நாங்கள் வியப்படைந்தோம்‌. நீ
பல நூறாண்டு காலம்‌ வாழ்க! என்று வாழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages