சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
28. வடதிசை நோக்கி புறப்பட்ட சேரமன்னன்
இடையில் நீலகிரி என்னும் மலையின் பக்கம்
படைவீடு அமைத்து இருத்தல்
“குடக்கோ குட்டுவன் கொற்றம் கொள்க என
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்.
சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கினன் ஆகித் தகைமையின் செல்வுழி,
நாடக மடந்தையர் ஆடரங்கு யாங்கணும்
கூடையில் பொலிந்து, “கொற்ற வேந்தே!
வாகை தும்பை மணித்தோட்டுப் போந்தையொடு
ஒடை யானையின் உயர்முகத்து ஓங்க
வெண்குடை நீழல் எம் வெள்வளை கவரும்
கண்களி கொள்ளும் காட்சியை ஆக! என
மாகதப்புலவரும், வைதா ளிகரும்,
சூதரும் நல்வலம் தோன்ற வாழ்த்த
யானை வீரரும், இவுளித் தலைவரும்.
வாய்வாள் மறவரும், வாள் வலம் ஏத்தத்
தானவர் தம் மேல் தம்பதி நீங்கும்
வானவன் போல வஞ்சி நீங்கிக்.
தண்டத் தலைவரும், தலைத்தார்ச் சேனையும்.
வெண் தலைப் புணரியின் விளிம்புசூழ் போத
மலைமுதுகு நெளிய, நிலைநாடு அதர் பட,
உலக மன்னவன் ஒருங்குடன் சென்றாங்கு
ஆலும் புரவி அணிதர்த் தானையொடு
நீல கிரியின் நெடும்புறத்து இறுத்தாங்கு.
ஆடுஇயல் யானையும், தேரும், மாவும்,
“பீடு கெழு மறவரும், பிறழாக் காப்பில்
பாடி இருக்காய் பகல்வெய் யோன் தன்
இருநில மடந்தைக்குத் திருவடி அளித்தாங்கு
அருந்திறல் மாக்கள் அடி ஈடு ஏத்தப்
பெரும்பேர் அமளி ஏறிய பின்னர்;
தெளிவுரை:
“மேற்றிசையில் விளங்கும் சேரன் செங்குட்டுவன் வாழ்க' என்று
வாழ்த்தியவாறு திருவனந்தபுரத்தில் பள்ளிகொண்டுள்ள அனந்த
பத்மநாத சுவாமி கோயில் பிரசாதங்களைக் கொண்டு வந்து
கொடுத்தார்கள். கங்கையைச் சடைமுடியில் கொண்டு விளங்கும்
சிவபெருமான் திருவடியைச் சேரமன்னன் தன் மணி மகுடத்தில்
சூட்டியுள்ளதால் திருமாலின் பிரசாதத்தைத் தன் தோளில் அணிந்து
கொண்டான். நாடக மகளிர் அரங்குகளில் நின்று கை கூப்பித்
தொழுதார்கள். வாகை, தும்பை, பனம்பூ ஆகிய மாலைகளை
அணிந்து நெற்றிப் பட்டத்தையுடைய யானையின் மீது நாட்டப்
பெற்ற வெண்கொற்றக் குடையின் கீழ் அமர்ந்து மன்னன் கம்பீரத்
துடன் செல்லலானான். அப்போது அக்காட்சியைக் கண்ட மகளிர்
கண்கள் களிகொள்ளவும் கைவளை நெகிழவும் விளங்கினர்.
புலவர்களும், போற்றிப் புகழ்வோரும், வாழ்த்திப் பணிபவர்கள்
ஆகியோர் வாழ்த்துதல் செய்ய, யானைவீரர்களும் குதிரை வீரர்
களும், வீரவாள் ஏந்தியவர்களும் வெற்றி முழக்கம் செய்தார்கள்.
இந்திரன் தேவர் உலகத்தைவிட்டு அசுரர்களோடு போர் செய்வதற்
குப் புறப்படுதல் போன்று சேரன் செங்குட்டுவன் வஞ்சி நகர்த்தி
லிருந்து புறப்பட்டுச் சென்றான்.
மன்னனோடு படைத்தலைவர்கள் படைவீரர்கள் முதலானோர்
உடன்வர நாடெலாம் கடந்து, காடுகளையும் கடந்து," நீலகிரி
என்னும் மலையின் பக்கம் வந்து சேர்ந்தார்கள். அங்குப் படைவீடு
அமைக்கக் குதிரை வீரர்களும் யானை வீரர்களும் இனிது தங்
கினார்கள். ஆற்றல் மிக்கவீரர்கள் தொழுது போற்ற, சேர மன்னன்
யானையின் மீதிருந்து இறங்கி அவனுக்காக அமைக்கப்பட்ட
படைவீட்டின் கண் உரிய இருக்கையில் ஏறி அமர்ந்தான்.
No comments:
Post a Comment