கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க போராட்ட குழுவினருடன் கும்பகோணம் கோட்டாட்சியர் திரு.பெ.விஜயன் மற்றும் கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) P.பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது
2019 ஜூலை 17-ல் சட்டமன்றத்தில் அறிவித்தபடி கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க கோரி செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறயுள்ள மனித சங்கிலி போராட்டம் குறித்து கும்பகோணம் கோட்டாட்சியர் திரு.பெ.விஜயன் அவர்கள் மற்றும் கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) P.பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் போராட்ட குழுவினருடன் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது குறைந்த அளவு நபர்களுடன் திட்டமிட்டபடி மனித சங்கிலி நடைபெறும் என போராட்டகுழுவினர் தெரிவித்தார்கள்...
இதில் போரட்டகுழு ஒருங்கிணைப்பாளரும் வன்னியர் சங்கம் மாநில துணை தலைவர் ம.க.ஸ்டாலின், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் பொன்ராஜ் தேவர். தே.மு.தி.க மாவட்ட கழக செயலாளர் கோ.சங்கர். குடந்தை வர்த்தக சங்கம் K.S.சேகர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொது செயலாளர் கவிஞர் ஐய்யப்பன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழு பொறுப்பாளர் R.k.ரவீந்திரன்.
தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் R.சங்கர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர். ஆடுதுறை A.M.ஷாஜகான் SDPI தஞ்சை மாவட்ட தலைவர் குடந்தை இப்ராஹீம். SDPI குடந்தை நகர தலைவர் பிஸ்மி ஜாகிர். பா.ம.க முன்னாள் மாவட்ட செயலாளர் கருணாகர தேவர். பா.ம.க மாவட்ட துணை செயலாளர் T.k.இரவிராஜ். விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் விவேகானந்தன். விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன். துணை பொது செயலாளர் தளபதி சுரேஷ். சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் குடந்தை ராஜா. நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் வழக்கறிஞர் மோ.ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment