பா.ம.க ஈரோடு வடக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் S.N.சித்தன் இறப்பு செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
ஈரோடு வடக்கு மாவட்ட பா.ம.க அமைப்புச் செயலாளர் S.N. சித்தன் இறப்பு செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மருத்துவர் அய்யா அவர்கள்மீது மிகுந்த மரியாதையும் பற்றும் கொண்டிருந்தவர். அப்பகுதி பா.ம.கவினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மரியாதைக்குரியவராக திகழ்ந்தவர். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவுடன் தொடர்ந்து கைபேசியில் அவரிடம் உடல்நலம் விசாரித்துக்கொண்டிருந்தேன். மருத்துவர்களிடமும் அவரை நன்கு பார்த்துக்கொள்ளும்படி கைபேசியில்தொடர்ந்துபேசிக்கொண்டிருந்தேன்.நேற்றுப் பகலிலும் இரவிலும் நான் தொடர்புகொண்டும் அவர் கைபேசியில் பேசவில்லை. எனக்கு சற்று சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் அவரது இறப்பு குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட பா.ம.கவினருக்கும் பேரிழப்பாகும்.
அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள் கிறோம்.அவரை இழந்து துயரிலும் வேதனையிலும் வாடும் மகன்கள் ஊராட்சி மன்றத் தலைவர் முனுசாமி, முனிராஜ் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மகன் ஊராட்சி மன்றத் தலைவர் முனுசாமியிடம் கைபேசியில் தொடர்புகொண்டு துக்கம் விசாரித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
No comments:
Post a Comment