அக்னிப்புரட்சி இன்றைய (01.10.2020) முக்கிய செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (01.10.2020) முக்கிய செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (01.10.2020) முக்கிய செய்திகள்

* தமிழகத்தில் 6 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,683 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,03,290 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,289 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,68,689 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 66 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 9,586 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,516 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 5,47,335  பேர் குணமடைந்துள்ளனர்.

* சென்னையில் விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.76.10 க்கும் விற்பனை.

* தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பிஎட் சிறப்புக் கல்விக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது:

* குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து.
குடியரசு தலைவரின் வளமான பார்வையும், அறிவும் இந்தியாவின் மிகப் பெரிய சொத்து - பிரதமர் மோடி.

* நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாள் விழா:

சென்னை அடையாறு மணிமண்டபத்தில், சிவாஜி கணேசன் படத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை.

* அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது- அமைச்சர் செங்கோட்டையன்.

ஆர்.டி.ஐ.-ன் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்- செங்கோட்டையன்.

* புதுச்சேரியில் வரும் 15ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் வரும் 5ம் தேதி முதல், விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் எனவும், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் 12ம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

15ம் தேதி முதல் விளையாட்டு வீரர்களுக்கான நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், சுற்றுலாத்தளங்களை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மதுபானக் கடைகள், மற்றும் பார் வசதியுடன் கூடிய மதுபானக்கூடங்கள், கலால் விதிமுறை படி இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  

* வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்:

தலைமை நீதிபதியை விமர்சித்த வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு. பிரசாந்த் பூஷண் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, தண்டனையாக 1 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

* கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது - அமைச்சர் ஜெயக்குமார்.

அமைச்சர் திண்டுக்கல்  சீனிவாசன் உட்பட யாராக இருந்தாலும் கட்டுப்பாடு ஒன்றுதான் - அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுகவில் எப்போது பிரச்சினை வரும் என எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

அமைச்சர்களும், தொண்டர்களும் அதற்கு இடம் அளிக்கக்கூடாது - அமைச்சர் ஜெயக்குமார்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தனித்தனியாக ஆலோசனை நடத்துவதில் தவறில்லை - அமைச்சர் ஜெயக்குமார்.

* சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - 4 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

காவலர் முருகன், தாமஸ், பிரான்சிஸ் , முத்து ராஜா ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி. வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி பாரதிதாசன் உத்தரவு.

* குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம்- சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தகவல்.

சட்ட மசோதா, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக டிஜிபி மனு.
சட்ட மசோதா எப்போது சட்டமன்றத்தில் முன் வைக்கப்பட உள்ளது?- உயர்நீதிமன்றம்.

தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு.
ஆன்மீக பூமியான இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது- நீதிபதி:

* புனித பூமியான இந்தியா பாலியல் வன்கொடுமை பூமியாக மாறியுள்ளது - சென்னை ஹைகோர்ட்.

திருப்பூரில் வட இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது  வேதனை - நீதிபதிகள்.

இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது - நீதிபதிகள்.

வட மாநில பெண் பாலியல் வன் கொடுமைக்கு ஆளான வழக்கில் நடவடிக்கை தேவை -  நீதிபதிகள் உத்தரவு.

* தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்:

தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்; தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமனம்- திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்.

* சபாபதி மோகனுக்கு திமுகவில் புதிய பதவி: திமுக கொள்கை பரப்பு செயலாளராக சபாபதி மோகன், திண்டுக்கல் லியோனி நியமனம்.

* தமிழகத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் 91 பெட்ரோல், கியாஸ் விற்பனை நிலையங்கள்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தகவல்.
சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்- எண்ணெய் நிறுவனங்கள்.

* உத்தரபிரதேசத்தில் இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரின் வாகனங்களை தடுத்து நிறுத்தியது உத்தரப்பிரதேச காவல் துறை.

வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், நடை பயணமாகவே ராகுல்காந்தியும், பிரியங்காவும் ஹாத்ராஸ் கிராமத்திற்கு செல்கின்றனர்.

ராகுலின் பின்னால் காங்கிரஸ் தொண்டர்கள் அணிவகுத்து செல்வதால் காவல்துறை தடியடி.

உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் சென்ற ராகுல்காந்தி நொய்டாவில் கைது. அமைதியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்திக்க சென்ற என்னை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் ஏன்? - ராகுல்காந்தி பேட்டி.

144 தடை உமலில் இருப்பதால் கைது செய்வதாக காவல்துறை தகவல்.

தனியாக செல்லும் என்னை எந்த அடிப்படையில் தடுத்து நிறுத்துகிறீர்கள்? - ராகுல்காந்தி.

போலீசார் தடுத்த போது சாலையில் தடுமாறி மண்தரையில் கீழே விழுந்தார் ராகுல் காந்தி.

* சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்:

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

* உத்தரபிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பெண் வன்கொடுமை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவரது உடல் எரிக்கப்பட்டது.
குற்றங்களை போலீசார் விசாரிக்க வேண்டும். இது என்ன மாதிரியான விதி? - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

* தடயவியல் அறிக்கையின்படி ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை இளம்பெண் பலாத்காரம் விவகாரம் - உ.பி. ஏ.டி.ஜி.பி பிரசாந்த் குமார் தகவல்.

கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இளம்பெண் உயிரிழந்துள்ளார்; சிலர் இந்த விவகாரத்தை சாதி ரீதியில் திசை திருப்புகின்றனர்!".
- உ.பி. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி  பிரசாந்த் குமார் தகவல்.

* மதுரை - சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சங்கரவேலு(53) என்பவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவு.

* வன்முறை இல்லை, ஆயுதம் இல்லை, அமைதி போராட்டத்தை தடுத்தது ஏன்?; அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க முயன்றதில் என்ன தவறு?; நாட்டின் சட்டங்கள் உத்தரப்பிரதேச காவல்துறைக்கு பொருந்தாதா?"
- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்.

* உத்தரபிரதேசத்தில் ராகுல்காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வேதனையளிக்கிறது - கே.எஸ்.அழகிரி.

ஜனநாயக கடமையை ஆற்ற முயன்ற ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தி, கைது செய்த காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது - கே.எஸ்.அழகிரி.

* கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட  குரூப்-1 தேர்வு; அடுத்தாண்டு 2021 ஜனவரி 3ஆம் தேதி தேர்வு நடைபெறும்.
- டிஎன்பிஎஸ்சி.

* கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்குக் காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தோமையார்மலை மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி,

முசிறி - துறையூர் மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளர் லதா,

சேலம் மத்தியப் புலனாய்வுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜு,

திருவில்லிப்புத்தூர் தலைமைக் காவலர் சண்முகநாதன்,

கீழ்க்கொடுங்காலூர் தலைமைக் காவலர் ராஜசேகரன் ஆகியோர் கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.

இவர்கள் ஐவருக்கும் குடியரசு நாளன்று காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

விருதுடன் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக நாற்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும்  நாளை அக்டோபர் 2- ந் தேதி  நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து -தமிழக அரசு அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages